மேலும் அறிய

PMK Manadu: கொடுங்கோல் ஆட்சி.. கோபத்தில் மக்கள்.. கொதித்தெழுந்த அன்புமணி! 

விவசாயிகளின் உரிமையை மீட்டெடுக்க டெல்லியில் மாத கணக்கில் தங்கி போராட்டம் நடத்துவது போல, தமிழக விவசாயிகள் சென்னையில் முகாமிட்டு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக மாநிலத் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட தமிழ்நாடு உழவர் பேரியக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், உழவர்கள் என தமிழகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 

25 நாட்களில் பிரம்மாண்ட மாநாடு 

மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில் : யாருக்கும் நிரூபிப்பதற்காக இந்த மாநாட்டை நாங்கள் நடத்தவில்லை. மாறாக உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த மாநாட்டை நாங்கள் நடத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் உள்ள மற்ற எந்த அரசியல் கட்சிக்கும் உழவுகளை பற்றிய அக்கறை கிடையாது. அதிலும் குறிப்பாக ஆளுகின்ற திராவிட மாடல் ஆட்சி முதலாளிகளுக்கான ஆட்சியாக உள்ளது. வெறும் 25 நாட்களில் இவ்வளவு பெரிய பிரம்மாண்ட மாநாட்டை நடத்துகிற சக்தி பாமகவிற்கு  மட்டும்தான் உள்ளது.

PMK Manadu: கொடுங்கோல் ஆட்சி.. கோபத்தில் மக்கள்.. கொதித்தெழுந்த அன்புமணி! 

என்னுடைய ஆசை

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்று சொன்னால் சுற்றிலும் இருக்கக்கூடிய அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கி போராட்டத்தை தீவிரமாக நடத்துவார்கள் அது போல தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு சென்னையை நோக்கி சென்று அங்கு தங்கி நாம் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். உங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துங்கள் அதுதான் என்னுடைய ஆசை.

மருத்துவர் ராமதாஸ் என்றைக்கு உத்தரவிடுகிறாரோ அன்றைக்கு டிராக்டர்கள் மாட்டு வண்டிகள் மூலமாக கிராமங்களில் இருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி சென்று நாம் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஸ்டவ் எடுத்துக்கொண்டு சென்று அங்கேயே தங்கி நாம் சமைத்து சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம். டெல்லியில் விவசாயிகள் அங்கேயே முகாமிட்டு போராட்டங்களை நடத்துவதால் விவசாயிகளின் கோரிக்கை உடனடியாக ஏற்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில் நம் தலையெழுத்து விவசாயிகள் சிதறி கிடக்கிறார்கள் ஒற்றுமை இல்லாமல் இருக்கிறார்கள் அதனால் திமுக ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள்.

63 சதவீதம் விவசாயிகள்

தமிழ்நாட்டில் இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது உழவு என்றால் தெரியாது. முதலாளிகளுக்காக ஆட்சி நடத்துகிறார்கள். தமிழ்நாட்டில் மூன்று துறைகள் இருக்கிறது; வேளாண்துறை, உற்பத்தி துறை, சேவை துறை இந்த மூன்று முக்கிய துறைகள் தான் தமிழ்நாட்டின் மொத்த உற்பத்தியை (GSDP) முடிவு செய்கின்றன.

PMK Manadu: கொடுங்கோல் ஆட்சி.. கோபத்தில் மக்கள்.. கொதித்தெழுந்த அன்புமணி! 

இதில் வேளாண் துறையில்  63 சதவீத மக்கள் பங்களிப்பு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மக்களின் 63 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். ஆனால் தமிழக அரசாங்கம் விவசாயிகளுக்கு எதுவுமே செய்வதில்லை. தற்போது உள்ள அரசாங்கம் என்ன நினைக்கிறது என்றால் பெண்களுக்கு ஒரு ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து விட்டால் அவர்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் நாம் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கிறார்கள்.

முதலமைச்சருக்கு கேள்வி 

முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது சிந்தித்துப் பாருங்கள் நாம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற வேண்டாம். இன்று இந்த மாநாட்டில் 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது‌ இவற்றை தமிழக அரசு நிறைவேற்றினால் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக மாறும்.

PMK Manadu: கொடுங்கோல் ஆட்சி.. கோபத்தில் மக்கள்.. கொதித்தெழுந்த அன்புமணி! 

ஐந்து திணைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இப்படி கிடையாது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டு விவசாயிகளின் நிலைமை பரிதாபமாக உள்ளது.  தமிழ்நாட்டு விவசாயிகள் பாவப்பட்ட ஜென்மங்களாக இருக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க மருத்துவர் அய்யாவும் நாங்களும் இருக்கிறோம். உழவர்களே ஒன்று சேருங்கள். வெற்று வார்த்தைகளை நம்பி ஏமாறாதீர்கள்‌. தமிழக விவசாயிகளுக்கு இலவசமோ பிச்சையோ வேண்டாம் எங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கொடுத்தால் போதும்.  

சரமாரி கேள்வி 

சென்னை,தென் மாவட்டங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்த தமிழக அரசு விழுப்புரம்,கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ள பாதித்தால் பாதிக்கப்பட்டது போது வெறும் 2000 தான் கொடுக்கிறார்கள். இங்கு உள்ள மக்கள் என்ன பாவம் செய்தவர்களா? சென்னையில் இருப்பவர்கள் மட்டும் என்ன புண்ணியம் செய்தவர்கள் என கேள்வி எழுப்பினார்.

பரந்தூர் விவகாரம்.

பரந்தூர் பகுதியில் விவசாய நிலத்தில் விமான நிலையத்தில் கொண்டு வரக்கூடாது அதற்கு பதிலாக திருப்போரூர் அருகில் உள்ள 5000 ஏக்கர் பரப்பளவில் உள்ள உப்பளம் பகுதியில் விமான நிலையத்தை கொண்டு வரலாம்.

சென்னையில் இருந்து தொலைவில் உள்ள பரந்தூரில் நீங்கள் இரண்டாவது விமான நிலையத்தை கொண்டு வந்தால் அது வெற்றி பெறாது.

கொடுங்கோல் ஆட்சி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் மேல்மா என்ற பகுதியில் சிப்காட் கொண்டு வரவும் 3500 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டார்கள் அதனை தடுத்து நிறுத்தியது பாட்டாளி மக்கள் கட்சி. ஆங்கிலேயர் ஆட்சியில் கூட விவசாயிகளை குண்டர் சட்டத்தில் போடவில்லை ஆனால் தற்போது நடைபெறுகிற கொடுங்கோல் ஆட்சியில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்கின்ற கொடுங்கோள் ஆட்சியாக திமுக ஆட்சிய இருக்கிறது.

டங்ஸ்டன் சுரங்கம் 

முதலமைச்சர் பேசுகிறார் சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்தை கொண்டு வர விடமாட்டோம் என பேசுகிறார். முதலமைச்சருக்கு டங்ஸ்டன் சுரங்கத்திற்கு வந்த ஆவேசம் ஏன் நெய்வேலி விவசாய நிலங்களுக்காக வரவில்லை? கடலூர் மக்கள் என்ன பாவம் செய்துவிட்டார்கள்? முதலமைச்சர் ஏன் இவ்வாறு பாகுபாடு செய்கிறார். டங்ஸ்டன் சுரங்கம் வேண்டாம் நெய்வேலி என்எல்சி நிலக்கரி சுரங்கம் மட்டும் வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

PMK Manadu: கொடுங்கோல் ஆட்சி.. கோபத்தில் மக்கள்.. கொதித்தெழுந்த அன்புமணி! 

வட தமிழ்நாட்டு மக்கள் எப்படியும் நமக்கு ஓட்டு போட்டு விடுவார்கள் என மிதப்பில் இருக்கிறார்கள் அடுத்த தேர்தலில் இது அவர்களுக்கு தெரியும்.  வட தமிழ்நாட்டு மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் விவசாயிகள் சம்பந்தமாக 18 முக்கிய கேள்விகளை கேட்டுள்ளேன் என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget