மேலும் அறிய

Annamalai on Periyar University: "பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது தமிழகத்திற்கு தலைகுனிவு" - அண்ணாமலை

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான நடவடிக்கைக்கு பொன்முடி தான் முழுக்க முழுக்க காரணம் என்றும் குற்றம்சாட்டினார்.

சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் பாஜக சேலம் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடிக்கு பிரமாண்டமான முறையில் தமிழகத்தில் வரவேற்பு அளித்தார்கள். தமிழகத்தில் எந்தளவிற்கு எழுச்சி உள்ளது என்று பிரதமர் மோடி பார்த்தார்.

மேலும் சேலத்தில் தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. மானமுள்ள எந்தத் தமிழனும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டார். பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கைது என்பது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் தலைகுனிந்து நிற்கும் அளவிற்கு செய்துள்ளனர். குறிப்பாக துணைவேந்தரை கைது செய்து நான்கு மணி நேரம் காவல்துறை வாகனம் மூலமாக சேலம் முழுவதும் சுற்றினர். மாலை 4:40க்கு கைது செய்துவிட்டு, இரவு 9:30 மணிக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.நள்ளிரவு மேஜிஸ்திரேட் இல்லத்திற்கு துணைவேந்தர் அழைத்துச் செல்லப்பட்டார். மூன்றரை மணிக்கு மேஜிஸ்டேட் ஜாமின் வழங்கினார். தமிழக மக்களுக்கு பாஜக ஆக்கப்பூர்வமான கட்சியாகவும், மக்களை பாதுகாக்கின்ற கட்சியாக திகழ்ந்து வருகிறது. எங்கு அநியாயம் நடந்தாலும் அதைக் கேட்கின்ற கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது. பெரியார் பல்கலைக்கழகத்தின் மூலமாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டால், அதில் வரும் லாபம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்பட முடியும். இதை வேண்டுமென்றே திரித்து தனியார் நிறுவனம் என்று கூறிவிட்டார்கள். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட நான்கு பேராசிரியர்கள் சேர்ந்து தனியார் நிறுவனத்திடம் இருந்துவரும் பணத்தை பவுண்டேஷன் மூலமாக பெரியார் பல்கலைகத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஆற்றல் திறமையை வளர்க்கும் விதமாக நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் என்ன தவறு உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிறுவனங்கள் உள்ளது. இதேபோன்று பணம் நாடு முழுவதும் இருந்து வருகிறது. அதை பல்கலைக்கழகத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் எந்த தவறும் இல்லை, நியாயமாக ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் இதிலிருந்து லாபத்தை ஒரு சதவீதம் கூட வெளியே எடுக்க முடியாது பெரியார் பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆனால் காவல்துறையினர் தனியார் நிறுவனம் ஆரம்பித்துவிட்டதாக பெரியார் நிறுவனத்தின் சொத்தை கொள்ளையடிப்பதாக பொய்யான குற்றச்சாட்டு கூறியுள்ளது. இதற்கு காவல்துறை முகத்தை கீழே குனிய வேண்டும் என்றும் பேசினார்.

Annamalai on Periyar University:

குறிப்பாக இரண்டு நபர்கள் துணைவேந்தர் ஜெகநாதன் நேரில் சந்திக்க செல்கிறார்கள். 10 வினாடிகள் கூட இருக்காது. அதற்குள் எவ்வாறு சாதி பெயரை குறிப்பிட்டு திட்டிருக்க முடியும். மேலும் அவரிடம் பேசிவிட்டு செல்லும்போது இருவரும் சிரிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியவர்கள் கேட்டுக் கொண்டு எவ்வாறு அவரால் சிரிக்க முடியும். எனவே முகாந்திரமே இல்லாமல் வன்கொடுமை வழக்கு போடப்பட்டுள்ளது. இது அமைச்சர் பொன்முடி சொல்லிக்கொடுத்து நடக்கிறது. பெரியார் பல்கலைக்கழகம் பதிவாளர் இல்லாமல் ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பொன்முடி துணைவேந்தரிடம், இவரை தான் பதிவாளராக போட வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அதை துணைவேந்தரை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு நடவடிக்கை மேற்கொண்டு நியாயமான முறையில் பதிவாளரை போட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான கூட்டம் நடைபெற்றபோது பிரச்சினை ஏற்பட்டது. துணைவேந்தரிடம் பெரியார் பல்கலைக்கழக தொழிற்சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் உடன் இரண்டு பேர் பேசும் வீடியோ ஆதாரங்களை அண்ணாமலை வெளியிட்டார். அரசு சொன்ன பதிவாளரை போடவில்லை என்ற காரணத்தால் தனிமனிதன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குபதிவு செய்து நாயே நடத்துவது போன்று நடத்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து வீட்டில் அமர்ந்து உள்ளார் என்றும் கூறினார். மேலும் உயர்கல்வித்துறை செயலாளர் சிண்டிகேட் நடந்த தகவல்களை வெளியிட்டு உள்ளார். காவல்துறைக்கு எவ்வாறு தகவல் கிடைத்தது என்று கேள்வி எழுப்பினார். பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பாஜக சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. மாநில டிஜிபி, சேலம் மாநகர காவல் துறை ஆணையாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

Annamalai on Periyar University:

பொன்முடி சொன்னால் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம் என்று சொன்னால், இதற்காக காவல்துறை காக்கிசட்டை போடுகிறது என்று கேள்வி எழுப்பினார். சேலம் மாநகர காவல் ஆணையாளர் குறித்து விமர்சனம் செய்தார். பெரியார் பல்கலைகத்தில் உள்ளே நிறுவனத்தை பேராசிரியர்கள் நான்குபேர்களால் தான் உருவாக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் பதவி முடிந்தபிறகு என் நிறுவனம் என்று எடுத்துச்சென்றால் அது குற்றம், அப்பொழுது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்தால் சரியானது. குறிப்பாக துணைவேந்தர் விவகாரத்தில் சேலம் மாநகர காவல் துறையினர் திட்டமிட்டு அனைத்தும் செயல்படுத்தி உள்ளது என்றும் விமர்சனம் செய்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Embed widget