மேலும் அறிய

"சிறையில் உள்ள ஒருவரை மக்கள் அமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" - எடப்பாடி பழனிசாமி

கைதி எண் கொடுக்கப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள அதிகாரிகள் அவரை கைது போல் நடத்துவார்களா அல்லது மாண்புமிகு அமைச்சர் என்று சல்யூட் அடிப்பார்களா? என் கேள்வி எழுப்பினார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி எட்டிக்குட்டைமேடு பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்று விழாவில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது ஸ்டாலின் விரைவில் ஆட்சிக்காலம் என்றார். உங்களுடைய ஆதரவால் நான்கரையாண்டு காலம் சிறப்பான ஆட்சி தந்தோம். நான் கிராமத்தில் இருந்து வந்தவன். ஆட்சி செய்ய தெரியாது நிர்வாக திறன் இல்லை என்று கனவு கண்ட ஸ்டாலின், அதனை தவிடு பொடியாக்கினோம். நான் கிளைக் கழகச் செயலாளராக இருந்து மாவட்ட பொறுப்பு அதன் பிறகு மாநில பொறுப்பு என படிப்படியாக உயர்ந்து இன்றைய தினம் அதிமுகவின் பொது செயலாளர் ஆக உயர்ந்துள்ளேன். இந்த அந்தஸ்தை அதிமுக தொண்டர்கள் தான் வழங்கியுள்ளார்கள். அதிமுகவை பொறுத்தவரை எந்த ஒரு தொண்டன் விசுவாசமாக உழைக்கின்றானோ மக்களுக்கு சேவை செய்கின்றானோ நிச்சயம் அவன் உயர்ந்த பொறுப்பிற்கு வர முடியும் என்பதற்கு நானே சான்று. 1989 ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், 1991 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி தந்தீர்கள். அதன் பிறகு வாரியத் தலைவர் 1998ல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அதன் பிறகு நெடுஞ்சாலைத்துறை அமைச்சராகவும் சிறப்பாக நிர்வாகம் செய்தேன். தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் சிறப்பான சாலைகள் அமைத்து தந்தேன்.

இந்த துறையை சிறப்பாக நிர்வகித்த காரணத்திற்காக மனித முதல்வர் ஜெயலலிதா பொதுப்பணித்துறையையும் கூடுதலாக எனக்கு வழங்கினார். இரண்டு துறையும் சிறப்பாக செயல்பட்டு மற்றும் மாநிலத்திற்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கியது. ஜெயலலிதா மறைந்த பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், தொண்டர்கள் ஆதரவோடு நான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டேன். பல்வேறு துறையில் சாதனை படைத்த இந்திய அளவில் தமிழகத்தில் உள்ள துறைகள் தான் சிறந்த துறைகள் நிர்வாக திறன்மிக்க அரசாக பல்வேறு தேசிய விருதுகள் பெற்றது. உள்ளாட்சியில் மட்டும் 140 விருதுகள் பெற்றோம் உயர்கல்வி போக்குவரத்து துறை, மின்சார கூட்டுறவுத்துறை, உணவுத்துறை, வேளாண் துறையில் சாதனை படைத்தோம் தடையில்லா மின்சாரம் தந்து தொழிற்சாலைகள் பெற்றுத் தந்தோம்.

வேளாண்துறையில் அதிக அளவு உற்பத்தி செய்து ஐந்தாண்டு க்ரிஷ் கர்மான் விருது பெற்றோம். அதிமுக ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டு வரவில்லை என்று ஸ்டாலின் பச்சோந்தி மாதிரி பச்சை பொய் பேசி வருகிறார். அம்மா பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சி செய்ததால் தான் இவ்வளவு விருதுகளையும் பெற்றோம். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் 75 கூட்டு குடிநீர் திட்டத்தை தந்துள்ளோம். திமுக ஆட்சியில் என்ன செய்தார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை ரிப்பன் வெட்டி திறந்து வருகிறார்கள். புதிதாக என்ன திட்டம் தந்துள்ளார்கள். இங்கு விவசாயம் நெசவு தொழில் பிரதானமாக உள்ளது அதில் உள்ள தொழிலாளர்கள் நன்மை பெறுவதற்கான திட்டங்கள் தந்தது அதிமுக அரசு. இன்றைய தினம் விசைத்தறி தொழில் நலிந்து போய் விட்டது. மக்கள் வாழ முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்து விட்டது. எப்போது பார்த்தாலும் திராவிடம் மாடல் ஆட்சி என்று கொக்கரிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சியில் என்ன சாதனை செய்தார்கள். கடை கோடி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் ஏன் விலைவாசியை குறைக்கவில்லை.

திமுக ஆட்சியை பத்திரிகையாளர்கள் தான் தாங்கி பிடித்துக் கொண்டிருக்கின்றனர். இரண்டு ஆண்டு கால ஆட்சியில் 30 ஆயிரம் கோடி சுருட்டப்பட்டுள்ளது என்றால் இது ஆட்சியில் எவ்வளவு ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி தற்போது சிறையில் உள்ளார். ஆனால் இன்னும் அவரை அமைச்சர் அவையில் இருந்து நீக்கப்படவில்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது குற்றச்சாட்டுக்கு ஆளான ஆலடி அருணா, என்கேகேபி ராஜா ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் ஸ்டாலினோ ஊழல் அமைச்சரை காப்பாற்ற அவரை இலாகா இல்லாத அமைச்சர் என்று அறிவித்துள்ளார். கைதி என் கொடுக்கப்பட்ட அவருக்கு சிறையில் உள்ள அதிகாரிகள் அவரை கைது போல் நடத்துவார்களா அல்லது மாண்புமிகு அமைச்சர் என்று சல்யூட் அடிப்பார்களா? என் கேள்வி எழுப்பினார். இது அரசியல் வாழ்க்கைக்கு இழுக்கு. சிறையில் உள்ள ஒருவரை மக்கள் அமைச்சராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

மேலும் அவர் அவரது துறையில் பல்வேறு ஊழல் புரிந்தவர். தமிழகத்தில் உள்ள 6000 மதுபான பாரில் 3500 பார் முறைகேடாக நடத்தி அதில் மது ஆலையிலிருந்து வரி செலுத்தாமல் நேரடியாக மது பாட்டில்கள் கொண்டு வந்து விற்பனை செய்து கொள்ளையடித்து, அந்த வருவாய் ஒரு குடும்பத்திற்கு செல்கிறது‌. அது மாத்திரமல்லாமல் ஒரு பாட்டலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்கின்றனர். இதன் மூலம் ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய் ஊழல் செய்யப்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தீர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஏவி விட்டார்கள் நாங்கள் என்ன நெஞ்சை பிடித்துக் கொண்டோமா. ஆட்சி மாறும் காட்சியும் மாறும். அதிமுக இரண்டாக உடைய மூன்றாவது உடையும் என்று கூறினார். அதிமுக வலுவாக உள்ளது. ஐந்தாண்டுக்கு ஒரு முறை உறுப்பினர்கள் புதுப்பிக்கப்படுவார்கள் சேர்க்கப்படுவார்தள். ஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒரு முறை இந்த பணியை நாங்கள் செய்து கொள்கிறோம். நேற்றைய தினம் வரை ஒரு கோடியே 92 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இரண்டு கோடி உறுப்பினர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கூறினேன். அதனை நெருங்கி விட்டோம். அந்த இலக்கை அடையும் போது தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களும் கொண்ட கட்சி அதிமுக. இனி இரண்டாக உடையும் மூன்றாக உடையும் என்ற பேச்சுக்கு இடமில்லை. திமுக தூய்மையான ஆட்சி மாதிரியும் திமுக ஆட்சியில் பாலாறு தேனாறு ஓடுவது போலவும் சித்தரிக்கின்றனர். யாரும் திமுக ஆட்சி விமர்சனம் செய்யவில்லை. கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி செய்வதாக கூறி 48 லட்சம் பேரில் நிபதனைகளை விதித்து 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி செய்துள்ளனர். நகை மீட்க முடியாமல் பறிபோனது தான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை. குடும்ப அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை தரப்படும் என்று கூறினார்கள். அழகாக கவர்ச்சிகரமாக பேசி இப்போது நிபந்தனைகள் விதிக்கின்றனர். காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும். சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. அதிமுக தான் மக்களுக்கு பணியாற்றும் கட்சி. 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது தான் சாதனை. திமுக என்ன சாதனை செய்தது? அதிமுக ஆட்சியில் ஏரி குளங்கள் தூர்வாரப்பட்டு வண்டல் மண் இலவசமாக எடுத்து இயற்கை உரமாக விவசாயிகள் தங்கள் தோட்டத்திற்கு பயன்படுத்தினர். இப்போது ஒரு லாரி மண் எடுக்க முடியுமா? சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இனிமேல் ஏழை மக்கள் வீடு கட்ட நினைக்கவே முடியாது” என்று பேசினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget