Pawan Khera Arrest: பிரதமரை விமர்சித்த காங். மூத்த தலைவர்..! கைது செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ஜாமீன்..! நடந்தது என்ன?
Pawan Khera Arrest: பிரதமர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டு கைது செய்யப்பட்ட பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான கருத்துகளுக்காக காங்கிரஸ் தலைவர் பவன் கேரா மன்னிப்பு கோரியதை அடுத்து, அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குமாறு துவாரகா நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டு கைது செய்யப்பட்ட பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
பவன் கேரா கைது:
பவன் கேரா, காங்கிரஸ் தலைவர்கள் சுப்ரியா ஸ்ரீனாதே, கே.சி.வேணுகோபால் மற்றும் ரன்தீப் சுர்ஜேவாலா ஆகியோருடன் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டனர். அப்போது, டெல்லி விமான நிலையத்தில் கேரா காவல்துறையினரால் இறக்கி விடப்பட்டு கைது செய்யப்பட்டார்.
image source : @ANI
எனினும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக "அவதூறான" கருத்துக்களைக் கூறியதற்காக காங்கிரஸ் தலைவர் மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, கேராவுக்கு பிப்ரவரி 28 வரை இடைக்கால ஜாமீன் வழங்குமாறு துவாரகா நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
SC directs Pawan Khera to be released on interim bail till Feb 28
— Press Trust of India (@PTI_News) February 23, 2023
டெல்லி காவல்துறையின் விரைவான நடவடிக்கைக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், விமானத்தில் இருந்து இறக்கிவிடும் போது அதிகாரிகள் பொய் கூறி அழைத்து சென்றனர். இது விதிகளையும் தனது தனிப்பட்ட சுதந்திரத்தையும் மீறும் செயல் என கூறினார்.
SC seeks response of Assam and Uttar Pradesh governments on clubbing of multiple FIRs against Congress leader Pawan Khera
— Press Trust of India (@PTI_News) February 23, 2023
ஜாமீன் வழங்க உத்தரவு:
பிரதமர் நரேந்திர மோடியை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்காக, கேராவை கைது செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை வைத்தது. மேலும் அசாமில் உள்ள ஹஃப்லாங் காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து கைது செய்யப்பட்ட பவன் கேராவுக்கு, இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது
இந்நிலையில் பவன் கேராவின் கைதுக்கு, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர்.
Also Read: டெல்லி மாநகராட்சியில் மோதல்… பாட்டில்கள், பழங்களை வீசிக்கொண்ட ஆம் ஆத்மி - பா.ஜ. கட்சியினர்!