மேலும் அறிய

எங்க அம்மா கேட்ட ஒரே கேள்வி தான்.! அரசியலே வேண்டாம் என முடிவெடுத்தேன் - குன்னம் ராமச்சந்திரன் கண்ணீர்

என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் இருக்கும் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் படத்தை அகற்ற போகிறாயா என கேட்டார். அசிங்கமாக உள்ளது. இதெல்லாம் ஒரு வேலையாப்பா என எனது மகள் கேட்டார். இதனால் திமுகவில் இணையும் முடிவை திரும்ப்பெற்றதாக குன்னம் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழகத்தை மட்டுமல்ல இந்தியாவைவே திரும்பி பார்க்க வைத்த கட்சி அதிமுக, இந்தியாவில் மிகப்பெரிய கட்சியாக அதிமுகவை 3வது இடத்திற்கு கொண்டு சென்றார் ஜெயலலிதா. தொடர்ந்து இரண்டு முறை தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியும் சாதனையும் படைத்தார். ஆனால் 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்களால் கட்சி பல பிளவுகளை சந்தித்தது. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம், சசிகலா என பிரிந்தது. கட்சி நிர்வாகளும் தனித்தனியாக பிரிந்து சென்றனர். இதனால் வாக்குகள் சிதறி கடந்த 9 ஆண்டுகளில் அதிமுகவிற்கு வெற்றி என்பதே கண்ணுக்கு தெரியாத நிலை ஏற்பட்டது. 

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விலகல்

இதில் முன்னாள் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக எம்எல்ஏக்கள், பல்வேறு மாவட்ட நிர்வாகளும் அதிமுகவில்  இருந்து வெளியேறினார்கள். இதில் முக்கியமான நபராக இருந்தவர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், குன்னம் ராமச்சந்திரன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய எவ்வளவோ முயன்றும் முடியாத நிலையே ஏற்பட்டது. எந்த வித நிபந்தனையும் இல்லாமல் இணைய தயார் எனவும் ஓபிஎஸ் அறிவித்தார். ஆனால் துரோகிகளுக்கு அதிமுகவில் இடம் இல்லையென எடப்பாடி பழனிசாமி உறுதியாக அறிவிப்பு வெளியிட்டார். இதனால் ஓ.பன்னீர் செல்வத்துடன் இருந்த நிர்வாகிகள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வந்த நிலையில் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளுக்கு பல்டி அடிக்க தொடங்கினார்கள்.

திமுகவில் குன்னம் ராமசந்திரன்.?

குறிப்பாக வைத்திலிங்கம் மற்றும் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தனர். ஜேசிடி பிரபாகர் தவெகவில் இணைந்தார். இதேபோல முன்னாள் எம்எல்ஏ குன்னம் ராமச்சந்திரனும் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை குன்னம் ராமச்சந்திரனும் உறுதி செய்திருந்தார். எனவே வைத்திலிங்கம் திமுகவில் இணைந்த நிலையில், அவரோடு குன்னம் ராமச்சந்திரனும் இணைவார் என தகவல் வெளியானது. ஆனால் நேற்று திமுகவில் இணையவில்லை. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த குன்னம் ராமச்சந்திரன், திமுகவில் இணைவது குறித்து குடும்பத்தினரிடம் கலந்து பேசினேன்.

அரசியலில் இருந்து விலகுகிறேன்

என்னை பெற்றெடுத்த தாய், வீட்டில் இருக்கும் புரட்சி தலைவி ஜெயலலிதாவின் படத்தை அகற்ற போகிறாயா என கேட்டார். அசிங்கமாக உள்ளது. இதெல்லாம் ஒரு வேலையாப்பா என எனது மகள் கேட்டார். இதனால் கடும் வேதனையடைந்தேன். இரவெல்லாம் என்ன செய்வது என யோசித்தே தூங்கமுடியாமல் உறக்கம் தொலைத்தேன். காலையில் எழுந்ததும் அரசியலே வேண்டாம் என  முடிவு செய்து அவர்களிடம் என் முடிவை சொன்னதாக குன்னம் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget