மேலும் அறிய

ABP Nadu Exclusive: ‛சசிகலா தலைமை ஏற்க ஓபிஎஸ் தயார்... சின்னம்மாவை பிரம்மாண்டமாக வரவேற்போம்’ -ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா பிரத்யேக பேட்டி!

‛‛நானே பல மாவட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறேன். சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் பேசியிருக்கிறேன். அனைவரும் தயாராக உள்ளனர்’’ -ஓ.ராஜா

சசிகலா-டிடிவி தினகரனை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறி, தேனி மாவட்ட அதிமுகவினர் நேற்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-யை சந்தித்து முறையிட்டதிலிருந்து, பற்றி எரிகிறது அரசியல் களம். ஓபிஎஸ்-யின் நிழலாக உள்ள தேனி மாவட்ட நிர்வாகிகள், எப்படி இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, அதை ஓபிஎஸ்-யிடம் கொண்டு சேர்த்தார்கள், என்கிற கேள்வி எழாமல் இல்லை. ஓபிஎஸ் விருப்பம் இல்லாமல் இந்த முயற்சி சாத்தியமில்லை என்கிற கேள்வியும் உடனே பயணித்தது. இந்நிலையில் தான், ஓபிஎஸ் குடும்பத்திற்கும் சசிகலா குடும்பத்திற்கும் ஆரம்பம் முதல் பாலமாக இருந்து வரும், ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜாவிடம் ஏபிபி நாடு சார்பில் பேசினோம்.... இதோ அந்த பிரத்யேக பேட்டி...

ABP Nadu Exclusive: ‛சசிகலா தலைமை ஏற்க ஓபிஎஸ் தயார்... சின்னம்மாவை பிரம்மாண்டமாக வரவேற்போம்’ -ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா பிரத்யேக பேட்டி!

கேள்வி: தேனி மாவட்ட தொண்டர்களின் ஒப்புதலோடு தான் சசிகலா இணைப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதா கூறப்படுகிறது. நீங்களும் உடன் படுகிறீர்களா?

ஓ.ராஜா: நான் தானே அதை ஆரம்பித்து வைத்தேன். அதற்கான ஏற்பாடுகளை செய்ததே நான் தானே. தீர்மானம் போடச் சொன்னதும் நான் தான். அதற்கான ஏற்பாடுகளையும் நான் தான் முன்நின்று செய்தேன். 

கேள்வி: திடீர் என இந்த முடிவு எடுக்க காரணம் என்ன? 

ஓ.ராஜா: திடீர் முடிவு எல்லாம் கிடையாது. தொண்டர்கள் விருப்பப்படுகிறார்கள். தொண்டர்கள் முடிவுக்கு தான் நாம போக வேண்டும். நாமாக முடிவு செய்ய முடியாது. சசிகலா-டிடிவி இணைப்பை தொண்டர்கள் முழுமையாக விரும்புகிறார்கள். 

கேள்வி: சசிகலா அல்லது டிடிவி வந்தால்... ஓபிஎஸ் தலைமை பறிபோகலாமே?

ஓ.ராஜா: ஏன் பறிபோகணும்?  இதற்கு முன் அவர்கள் தலைமையின் கீழ் தானே இருந்தோம். அப்போது எல்லாமே நன்றாக தானே இருந்தது. அவரது தலைமையை ஏற்பதில் அண்ணனுக்கு தயக்கம் இல்லை.

கேள்வி: அப்போ... சசிகலா தலைமை தான் அதிமுகவுக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறீங்களா?

ஓ.ராஜா: சசிகலா தலைமை எடுத்தால் என்றில்லை... அவர் தலைமை எடுத்தால் தான் அதிமுக நன்றாக இருக்கும். சசிகலா வந்தாலே கட்சி சரியாகிவிடும். 

கேள்வி: சசிகலா வந்தால் போதுமா?  டிடிவியும் வர வேண்டுமா?

ஓ.ராஜா: சசிகலாவும் வர வேண்டும், டிடிவியும் வர வேண்டும். டிடிவி தானே ஒரு காலைத்தில் கட்சிக்கு தலைமை தாங்கினார். 2001-2006 வரை அவர் தானே தலைமையில் இருந்தார். அதனால் அவர்கள் இருவரும் வர வேண்டும். 

கேள்வி: சசிகலா-டிடிவி இடையே நல்ல உடன்பாடு இல்லை என்கிறார்களே?

ஓ.ராஜா: அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனைக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதற்குள் என்னால் போகவும் முடியாது. எல்லோரும் ஒன்று சேர்ந்து நல்லபடியா இருக்கணும், எங்களுக்கு அது தான் வேணும்.

கேள்வி: இது தேனியோட விருப்பமா? இல்லை அதை தாண்டி....

ஓ.ராஜா: எங்களை மாதிரியே மற்ற மாவட்டங்களும் இந்த தீர்மானத்தை போடுவாங்க. நானே பல மாவட்டங்களில் பேசிக் கொண்டிருக்கிறேன். சிவகங்கை, விருதுநகர் மாவட்டத்தில் பேசியிருக்கிறேன். அனைவரும் தயாராக உள்ளனர். 

கேள்வி: இந்த கோரிக்கையை ஓபிஎஸ் ஏற்பாரா?

ஓ.ராஜா: தொண்டர்கள் சொல்வதை தான் அவர் செய்வார். அவர் தொண்டர்களின் குரலுக்கு மதிப்பு தருவார். 

கேள்வி: ஓபிஎஸ் ஓகே சொன்னாலும்.... இபிஎஸ் ஓப்புக் கொள்ள வேண்டுமே?

ஓ.ராஜா: இபிஎஸ் தலையிட்டாலும் சரி, தலையிடாவிட்டாலும் சரி,  தொண்டர்கள் ஏற்பாடு செய்துவிட்டோம். இது தொண்டர்களின் விருப்பம்.

கேள்வி: அப்போது சசிகலா சேர்ந்துவிடுவார் என்கிறீர்களா?

சமரசம் இல்லை.... சின்னம்மாவை வரவேற்க தயாராகிவிட்டோம். அவரது தென்மாவட்ட சுற்றுப்பயணத்தில் தேனிக்கு வரும் போது, நானே பிரம்மாண்ட வரவேற்பு அளிப்பேன். நான் மட்டுமல்ல, தொண்டர்கள் அனைவரும் அளிப்பார்கள். , என்றார். 

ஓபிஎஸ் சொந்த தம்பியே சசிகலா-டிடிவி இணைப்புக்கு முழு முயற்சி எடுத்து வருவதும், அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதும், அதிமுகவில் அடுத்த சில நாட்களுக்கு பேசும் பொருளாக இருக்கும். 

தலைப்பு செய்திகள்

பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறும்! திண்டிவனத்தில் அமைச்சர் வன்னியரசு திட்டவட்ட பேச்சு!
பாமக உள்ளே வந்தால் விசிக வெளியேறும்! திண்டிவனத்தில் அமைச்சர் வன்னியரசு திட்டவட்ட பேச்சு!
“காலம் போட்ட கணக்கு... மடியில் வந்து விழுந்தது!” கூட்டணி அரசியல் குறித்து திருமாவளவன் பேசியது என்ன?
“காலம் போட்ட கணக்கு... மடியில் வந்து விழுந்தது!” கூட்டணி அரசியல் குறித்து திருமாவளவன் பேசியது என்ன?
நான் நினைச்சிருந்தா கூலிங் கிளாஸ் போட்டு போட்டோ சூட் எடுத்து இருக்கலாம்.. முதல்வரை சீண்டும் இபிஎஸ்!
நான் நினைச்சிருந்தா கூலிங் கிளாஸ் போட்டு போட்டோ சூட் எடுத்து இருக்கலாம்.. முதல்வரை சீண்டும் இபிஎஸ்!
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget