OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!

பெரும்பாலானோருக்கு பாலமுருகன் எப்படி இருப்பார் என்பது கூடதெரியாது. அவர் மறைந்த பிறகு தான் ஓபிஎஸ்க்கு இப்படி ஒரு தம்பி இருப்பதே பலருக்கு தெரியவந்துள்ளது. தனது அண்ணன் உயரிய பொறுப்பில் இருந்தாலும் அதில் தலையிடாத தம்பியாகத் தான் பாலமுருகன் இருந்துள்ளார்.

FOLLOW US: 


தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வசித்து வரும் தமிழக முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை தமிழகம் நன்கு அறியும். ஆவின் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் வந்ததால் அவரது சகோதரர் ஓ.ராஜாவை பலருக்கு தெரியும். தேனி எம்.பி., ஆனதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை சமீபமாக தெரியும். ஆனால் ஓபிஎஸ் குடும்பத்தில் அவருடன் பிறந்த சகோதரர்கள் பற்றியோ, அவர்களின் குடும்ப விபரங்களை பற்றியோ பலருக்கு தெரியாது. இன்னும் சொல்ல வேண்டுமானால், தேனியை சேர்ந்த பலருக்கே அது தெரியாது. இதோ அவர்களுக்கான தகவல் இது...OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!


ஓபிஎஸ் உடன் பிறந்த சகோதரர்கள் நான்கு பேர். ஓ.சுசீந்திரன், ஓ.ராஜா , ஓ.பாலமுருகன், ஓ.சண்முகசுந்தரம் என நான்கு தம்பிகளை கொண்டவர் ஓபிஎஸ். இதில் இரண்டாவது தம்பியான சுசீந்திரன் பல வருடங்களுக்கு முன்பு இயற்கை எய்து விட்டார். இந்நிலையில்  ஒ.ராஜா, பாலமுருகன், சண்முகசுந்தரம் ஆகிய மூவரும் ஓபிஎஸ் சொந்த ஊரான பெரியகுளத்தில் வசித்து வருகின்றனர். இந்த சகோதரர்களில் மிகப் பிரியமானவரும், ஓபிஎஸ்க்கு மிக பிடித்தவருமான பாலமுருகன் தான் இன்று இயற்கை எய்தியுள்ளார். OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!


 1966 வது வருடம் பிறந்து தற்போது 61 வயது ஆன நிலையில் , நீண்ட நாட்களாக கல்லீரல் மற்றும் கேன்சரால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார் பாலமுருகன். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி இவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், அப்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளின்படி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக ஒப்புதல் அளித்து பெங்களூரிலிருந்து ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை மதுரைக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து பாலமுருகனை ராணுவ ஆம்புலன்ஸ் மூலம் ஹெலிகாப்டரில் கொண்டு சென்று சென்னையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதில் குணமடைந்த பின்பு பெரியகுளத்தில் உள்ள தனது சொந்த வீட்டில் தனது மனைவி மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார் பாலமுருகன். பெரியகுளம் அருகே உள்ள கல்லுப்பட்டி எனும் ஊரில் பால் பண்ணை வைத்துள்ளார் பாலமுருகன். அது தான் அவரது பிரதான தொழில், அது தவிர கால்நடை பராமரிப்பு மற்றும் விவசாயமும் செய்து வந்தார்.OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!


இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு,  திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சென்ற போது, அங்கு மூன்று நாட்கள் கவனித்த டாக்டர்கள், இதற்கு மேல் பலனளிக்காது என்று கூறியதால், நேற்று இரவு பெரியகுளத்திற்கு பாலமுருகனை அழைத்து வந்துள்ளனர் இன்று காலை அவரது உயிர் பெரியகுளம் வீட்டில் பிரிந்தது.  


பெரும்பாலானோருக்கு பாலமுருகன் எப்படி இருப்பார் என்பது கூடதெரியாது. அவர் மறைந்த பிறகு தான் ஓபிஎஸ்க்கு இப்படி ஒரு தம்பி இருப்பதே பலருக்கு தெரியவந்துள்ளது. தனது அண்ணன் உயரிய பொறுப்பில் இருந்தாலும் அதில் தலையிடாத தம்பியாகத் தான் பாலமுருகன் இருந்துள்ளார்.OPS Family: ஓபிஎஸ் குடும்பத்தில் சோகம்; யாரும் அறியாத ஓபிஎஸ் சகோதரர்களின் பின்னணி!


அதனால் தான் அவரது இழப்பு ஓபிஎஸ் குடும்பத்திற்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் அரசியலில், கட்சியில் எந்த மாதிரி செயல்படுவார் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது குடும்ப நெருக்கத்தை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில், ஓபிஎஸ் குடும்பத்தை அதிகம் நேசிப்பவர். நெருக்கம் கொண்டவர். தனது இரு தம்பிகளை இழந்த நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கிடைக்கட்டும். 


 


 

 
Tags: ops brother death ops family ops periyakulam ops balamurugan

தொடர்புடைய செய்திகள்

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

‛வீடியோ டூ ஆடியோ’ அதிமுக ஆடுகளத்தில் அரை சதம் அடித்த சசிகலா!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

Aspire K Swaminathan Resign : ’ஒபிஎஸ் ஆதரவாளர் என்பதால் ஓரங்கட்டப்பட்டேனா’ ராஜினாமா பற்றி மனம் திறந்த அஸ்பயர் சுவாமிநாதன்..!

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

’பிரதமரை சந்திக்கும் முதல்வர்’ முன் வைக்கப்போகும் கோரிக்கைகள் என்ன ?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Manikandan Case: மாஜி அமைச்சர் மணிகண்டன் முன் ஜாமின் மனு தள்ளுபடி; கைதாக வாய்ப்பு?

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

டாப் நியூஸ்

MK Stalin Delhi Visit Live: டெல்லி விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுக எம்.பிக்கள் வரவேற்பு

MK Stalin Delhi Visit Live: டெல்லி விமான நிலையத்தில் முதல்வருக்கு திமுக எம்.பிக்கள் வரவேற்பு

சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மை - சிபிசிஐடி தகவல்

சிவசங்கர் பாபாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது உண்மை - சிபிசிஐடி தகவல்

Tamil Nadu Coronavirus LIVE News : ஜூலை 31ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் - இந்திய தலைமை வழக்கறிஞர்

Tamil Nadu Coronavirus LIVE News : ஜூலை 31ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் - இந்திய தலைமை வழக்கறிஞர்

‛ஆல் அக்கியூஸ்ட் பேவரிட் நேபாள்’ அப்படி என்ன தான் இருக்கு நேபாளத்தில்!

‛ஆல் அக்கியூஸ்ட் பேவரிட் நேபாள்’ அப்படி என்ன தான் இருக்கு நேபாளத்தில்!