மேலும் அறிய
பாஜக - அதிமுகவும் வேறு என்பார்கள், ஆனால்...? - எம்பி கனிமொழி அதிரடி பேச்சு
பணத்தை வைத்து கொண்டு பாஜக அரசு தமிழகத்தின் கழுத்தை நெரித்து கொண்டிருப்பதாக திமுக எம்பி கனிமொழி பேச்சு

திமுக எம்பி கனிமொழி
Source : ABP NADU
விழுப்புரம்: தமிழகத்திற்கு நிதிச்சுமையை ஏற்றி ஓரவஞ்சனையை பாஜக அரசு செய்து வருவதாகவும், பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும், அவரை கொச்சைப்படுத்த கூடிய விமர்சனம் படுத்தக்கூடிய நிலை இருந்தாலும் பெரியாரை யாரும் வெல்லவும் முடியாது வீழ்த்தவும் முடியாது என எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திமுக துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பொன்முடி முன்னாள் எம்பி கெளதமசிகாமணி சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா உள்ளிட்ட மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய எம்.பி கனிமொழி, திராவிட மாடல் ஆட்சியை தாங்கி பிடிக்கக்கூடிய குழுவாக மகளிர் உள்ளதாகவும், முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் மூலம் மகளிருக்கான திட்டங்களை கொடுத்து வருவதாகவும், பெண்கள் பட்டம் பெறுவது சாதாரணமாக வந்துவிடவில்லை, போராட்டம் இல்லாமல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது திமுகாவால்தான் என குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர், பெண்களை முன்னேற்ற கூடிய ஆட்சி இருந்தால் தால் பெண்களுக்கு வளர்ச்சி கிடைக்கும் அதனால் தான் புதுமைபெண் திட்டம் மூலம் மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கல்லூரி பெண்களுக்கு வழங்கப்படுவதாகவும், நாட்டின் எத்தனையோ சாதியால், மதத்தால், பிற்போக்கு சக்திகள் பிளவு படுத்த பார்ப்பவதாகவும், பெண்கள் அவசியம் பெரியாரை படிக்க வேண்டும், அவரையே கொச்சைப்படுத்த கூடிய விமர்சனம் படுத்த கூடிய நிலை உள்ளதாகவும் பெரியாரை யாரும் வெல்லவும் முடியாது வீழ்த்தவும் முடியாது என தெரிவித்தார்.
இந்த மண்ணில் ஜாதி இல்லை என கூறும் ஒவ்வொருவரின் மனதிலும் பெரியார் வாழ்ந்து வருவதாகவும், பிற்போக்கு தனத்தை திணிக்காதே என்று சொல்லக்கூடிய மாநிலம் தான் தமிழ்நாடு என்றும் பட்ஜெட்டில் திருக்குறள் மட்டுமே வாசிக்கப்படுகிறது. தமிழகத்திற்கு வேறொண்றும் இல்லை திருவள்ளுவருக்கு சிலை வைத்தவர்தான் முன்னாள் மறைந்த தலைவர் கருனாநிதி கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு பொதுமக்கள் பார்வையிட செல்லும் போது விவேகானந்தர் சிலைக்கு போட் போகும் ஆனால் திருவள்ளுவர் சிலைக்கு போகாது.
கேட்டால் ரிப்பேர் என்பார்கள் அதனை தடுக்கவே திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தருக்கும் இடையே கண்ணாடி பாலம் போட்டவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் பட்ஜெட்டில் திருக்குறளோடு நிறுத்தி விட வேண்டாம் என கூறினார். குறைந்த அளவு தொகையே நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணம் தமிழகத்திற்கு ஒதுக்கப்படுவதாகவும், ஒவ்வொரு ஆண்டும் பாஜக அரசு நிதியை தமிழகத்திற்கு குறைத்து கொண்டே வருவதாகவும்,
இந்தி படிக்க சம்மதிக்கவில்லை என்பதால் கல்விக்கான தொகை ரூ.2 ஆயிரத்திற்கு அதிகமான கோடி நிறுத்தி வைக்கப்பட்டு தமிழகத்திற்கு நிதிச்சுமையை ஒன்றிய அரசு ஏற்றிக்கொண்டு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையை பாஜக அரசு செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார். பணத்தை வைத்து கொண்டு பாஜக அரசு தமிழகத்தின் கழுத்தை நெரித்து கொண்டிருப்பதாகவும் பாஜகவும் அதிமுகவும் வேறு என்பார்கள் அது உண்மையல்ல என கனிமொழி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
அரசியல்
அரசியல்
சென்னை
Advertisement
Advertisement