மேலும் அறிய

MK Stalin DMK : இன்ஸ்டாகிராமில் குழந்தைகளை பயன்படுத்தி ஆட்சியை பிடித்திருக்கு தவெக.! உஷாரா இருங்க ஸ்டாலின் அலர்ட்

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி ரொம்ப சுலபமாக சிறு பிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வச்சு, அவர்களை அவருடைய தாத்தாக்கள், பாட்டிகள், அப்பாக்கள், அம்மாக்கள், அவங்க வீட்ல இருக்கக்கூடிய பெரியவங்கள்ட்ட அந்த குழந்தைகள் மூலமாக பிரச்சாரங்களை தவெக முன்னெடுத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுகவின் கதை முடிந்துவிட்டதா- ஸ்டாலின்

தஞ்சையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், தோல்வி வெற்றி என்பது இரண்டையும் சமமாகக் கருதி பாடுபட்டுக் கொண்டிருக்கக்கூடிய தொண்டன் தான் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ இன்றைக்கு நடைபெற்று முடிந்து இருக்கக்கூடிய தேர்தலிலே ஏதோ நாம் தோற்றுவிட்டது மாதிரி, ஏதோ படுதோல்வி அடைந்துவிட்டது மாதிரி, இதோடு திமுக கதை முடிஞ்சுருச்சு அப்படி என்று கவிதை அரங்கேற்றப் பாடுவதற்கு கூட முன் வந்திருக்கிறார்கள். நம்முடைய இன எதிரிகள் அந்த சூழ்ச்சியிலே இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறார்கள்.

​பீனிக்ஸ் பறவை போல கிளம்பி எழும் திமுக

ஆனால் திமுகவை பொறுத்தவரைக்கும் எத்தனையோ தேர்தலைப் பார்த்திருக்கிறோம். 1949-லே தொடங்கிய நம்முடைய கழகம் தொடர்ந்து 52-லே நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 57-லே நடைபெற்ற தேர்தலாக இருந்தாலும் சரி, 62-லே நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தலாக இருந்தாலும் சரி, அதற்குப் பிறகு 67-லே நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தலாக இருந்தாலும் சரி, 71-லே இப்படி தொடர்ந்து நடைபெற்றிருக்கக்கூடிய தேர்தல்களில் பல வெற்றிகளைக் கண்டதுண்டு, பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் தோல்வி அடைகிற நேரத்தில்தான் திமுக எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப் போல கிளம்பி எழக்கூடிய நிலையில் அது வரும்.

குழந்தைகளை பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய தவெக

ஆனா, எந்தப் பணியும் செய்யாம, மக்களைச் சந்திக்கல, பாக முகவர் நியமிக்கல, பூத் ஏஜென்ட் அமைக்கல, இன்னும் சொல்லணும்னா கவுண்டிங் ஏஜென்ட் கூட பல இடங்கள்ல நியமிக்கல. அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்காங்க. அது தவறில்லை, ஆனா அதுல என்ன இருக்கு என்பதுதான்... சோசியல் மீடியா. ஆக, சோசியல் மீடியா, முக்கியமா இன்ஸ்டாகிராம் (Instagram) என்று சொல்லக்கூடிய அதை பயன்படுத்தி ரொம்ப சுலபமாக சிறு பிள்ளைகளை, குழந்தைகளை பிரச்சாரம் செய்ய வச்சு, அவர்களை அவருடைய தாத்தாக்கள், பாட்டிகள், அப்பாக்கள், அம்மாக்கள், அவங்க வீட்ல இருக்கக்கூடிய பெரியவங்கள்ட்ட அந்த குழந்தைகள் மூலமாக பிரச்சாரங்களை முன்னெடுத்து, ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தைக் கொடுத்திருக்காங்க.

​ஆக, அது நம்முடைய கணக்குக்குத் தெரியாமப் போய்விட்டது. ஆனா, இனிமேல் நாம் உஷாரா இருந்து அதையும் முறியடிக்கக்கூடிய வகையில அந்தப் பணியை நிறைவேற்றுவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். எனவே, நீங்க எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம்முடைய கழகம் உங்களுக்கு இருக்கு, இயக்கம் இருக்கு, நாங்கள் இருக்கிறோம். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்.

மீண்டும் நாம் தான் ஆட்சிக்கு வருவோம்- ஸ்டாலின்

எனக்கிருக்கக்கூடிய கவலையெல்லாம் ஐந்து ஆண்டுகள் நிறைவேற்றிய திட்டப் பணிகள் போதாது, இன்னும் பல பணிகள் நிறைவேற்ற வேண்டியது இருக்கும். இன்னும் ஐந்து ஆண்டு காலம் நமக்கு வாய்ப்பு கிடைச்சிருந்தா இன்னும் பல பணிகள் நிறைவேற்றி இருப்போம். அது தடைபட்டுப் போய் இருக்கிறது. அதை எப்படியாவது நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும்கூட, இன்றைக்கு நாம் மக்களிடத்திலே போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை உறுதியோடு எடுத்துச் சொல்லக்கூடிய வகையில நம்முடைய கடமையை ஆற்றுவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
அமைச்சரானது எப்படி? திருமாவளவன் சொன்னது என்ன? அமைச்சர் வன்னியரசு பிரத்யேக பேட்டி
த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
த்ரிஷா.. த்ரிஷா.. கத்திய திமுக தொண்டர்கள்! உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன தெரியுமா?
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget