திசைதிருப்பும் ஆளுநர்.. 25,000 சாதிகள் இருக்கு.. பிரிச்சது யார்? பொங்கி எழுந்த மனோ தங்கராஜ்
இந்தியர்களை கிட்டத்தட்ட 25,000 சாதி பிரிவுகளாக பிரித்து பிரிவினைவாத சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தியது யார் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரிக் வேதத்தின் அடிப்படையில், மனுஸ்மிருதி வகுத்த சட்டத்தின் வாயிலாக இந்தியர்களை கிட்டத்தட்ட 25,000 சாதி பிரிவுகளாக பிரித்து பிரிவினைவாத சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தியது யார் என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.
"சமூக நல்லிணக்கத்தின் அடையாளம்"
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில், சிவகங்கை சமஸ்தானம் மற்றும் அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் சொர்ண மூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு, கண்டதேவி தேர் திருவிழா மற்றும் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, "நான்கு சமூகத்தினர் இணைந்து தேர் திருவிழாவை நடத்தியது சமூக நல்லிணக்கத்தின் அடையாளம். பக்தர்களை அறிவியலுக்கு எதிரானவர்கள் என சித்தரிப்பது தவறு; கோயில்கள் மறக்கப்பட வேண்டிய இடமல்ல, மக்கள் நினைவில் வைக்க வேண்டிய இடம்" என்றார்.
அமைச்சர் விமர்சிப்பதன் பின்னணி என்ன?
இந்த நிலையில், தமிழக ஆளுநர் வரலாற்றை திசைதிருப்ப முயல்வதாக தமிழ்நாடு அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார். எக்ஸ் தளத்தில் இதுகுறித்து குறிப்பிடுகையில், "4 சமூகத்தினர் இணைந்து தேர் திருவிழாவை நடத்தியது சமூக நல்லிணக்கத்தின் அடையாளம் எனக் கூறுவதன் மூலம் வரலாற்றை திசைதிருப்ப முயலுகிறார் ஆளுநர்.
4 சமூகத்தினர் இணைந்து தேர் திருவிழாவை நடத்தியது சமூக நல்லிணக்கத்தின் அடையாளம் எனக் கூறுவதன் மூலம் வரலாற்றை திசைதிருப்ப முயலுகிறார் ஆளுநர்.
— Mano Thangaraj (@Manothangaraj) May 23, 2025
முதலில், ஒன்றாய் இருந்த இந்திய சமூகத்தை நான்காகப் பிரித்தது யார் என்பதை தெளிவுபடுத்துவாரா? 5வதாக ஒரு சமூகத்தை மனிதர்களாகவே கருதாத நிலை… pic.twitter.com/AYa3eouRbu
முதலில், ஒன்றாய் இருந்த இந்திய சமூகத்தை நான்காகப் பிரித்தது யார் என்பதை தெளிவுபடுத்துவாரா? 5வதாக ஒரு சமூகத்தை மனிதர்களாகவே கருதாத நிலை எப்படி வந்தது என்பதை விளக்குவாரா? ரிக் வேதத்தின் அடிப்படையில், மனுஸ்மிருதி வகுத்த சட்டத்தின் வாயிலாக இந்தியர்களை கிட்டத்தட்ட 25,000 சாதி பிரிவுகளாக பிரித்து, பிரிவினைவாத சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தியது யார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க: Seeman on Stalin: 3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..





















