Seeman on Stalin: 3 வருஷமா நிதி ஆயோக்கிற்கு போகாத ஸ்டாலின் இப்போ மட்டும் ஏன் போறார் தெரியுமா.? சீமான் சுருக்..
கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகாத ஸ்டாலின், தற்போது செல்வதற்கு இதுதான் காரணம் என சீமான் சுருக்கென்று ஒரு விமர்சனத்தை வைத்துள்ளார். அது என்ன என பார்க்கலாம்.

திருச்சியில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை ஒட்டி, அங்குள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து விமர்சனம் செய்தார்.
“3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத முதல்வர் இப்போது ஏன் செல்கிறார்.?“
செய்தியாளர்களிடம் பேசி சீமான், முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாத முதலமைச்சர், இந்த ஆண்டு மட்டும் ஏன் செல்கிறார் என கேள்வி எழுப்பினார்.
மேலும், அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்டதால் தான், பிரதமர் மோடியை சந்திக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார் என விமர்சித்தார்.
அதோடு, திமுகவிற்கு எது எதிர்க்கட்சி, அதிமுக எதிர்க்கட்சியா என கேள்வி எழுப்பிய அவர், திமுக ஒரு கொள்கை வைத்திருக்கிறது. அவர்கள் ஆட்சியில் ஊழல், லஞ்சம், கொள்ளை, மணல் கொள்ளை நடக்கிறது.
பாஜ மற்றும் காங்கிரஸ் இடையே என்ன கொள்கை வேறுபாடு இருக்கிறது.? கொடிகள் வேறு வேறாக இருக்கிறது, கொள்கையில் வேறுபாடு இருக்கிறதா எனவும் சீமான் கேள்வி எழுப்பினார்.
மேலும், இவர்களும் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள், அவர்களும் ஓட்டுக்கு காசு கொடுப்பார்கள் என்றும், இவர்களும் இலவசம் அறிவிப்பார்கள், அவர்களும் இலவசம் அறிவிப்பார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.
நாட்டில் சட்டமற்றும், நாடாளுமன்றம் எதற்கு.? கலைத்து விடலாம் - சீமான்
டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரிக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், நாட்டில் நீதிமன்றம் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் என்றால், சட்டமன்றம் எதற்கு, நாடாளுமன்றம் எதற்கு என கேள்வி எழுப்பியதோடு, அவற்றை கலைத்துவிடலாம் என்றும் கூறினார்.





















