மேலும் அறிய

DMK Alliance : ‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ கூட்டணியில் இருந்து வெளியேறும் வைகோ..?

’பசுவிற்கு தண்ணீர் வைத்தால் அது பாலை கொடுக்கும். ஆனால், பாம்பிற்கு பால் வைத்தாலும் அது நஞ்சைதான் கக்கும். அதனிடமிருப்பது நஞ்சுதான். அதுபோலதான் திமுக. திமுக ஒரு நச்சுப்பாம்பு’ மதிமுக அவைத் தலைவர்

திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் வைகோ தலைமையிலான மதிமுகவின் நடவடிக்கைகளில் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் முதல்வராக பதவியேற்றபின்னர், வைகோ இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்தார் விஜய். அப்போதிலிருந்து விஜய்க்கு ஆதரவான மனநிலையில் வைகோவின் மகனும் திருச்சி எம்.பியுமான துரை வைகோ பேசத் தொடங்கினார். குறிப்பாக, சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று மதிமுகவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், அவர்கள் சின்னத்தில் எங்களை நிற்கச் சொன்னது சமூக நீதிக்கு எதிரானது என்றும் பேசினார் துரை.

திமுக ஒரு நச்சுப்பாம்பு - மதிமுக

இந்நிலையில், மதிமுகவின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூன்ராஜ், திமுக ஒரு நச்சுப்பாம்பு என்று பகிரங்கமாக பேசியிருப்பது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மு.க.ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்று வைகோ மூச்சுக்கு முன்னூறு முறை பேசினார். ஆனால், அவர் பேசியது அவரைத் தவிர பிறர் யாருக்குமே உடன்பாடு இல்லை என்பதுதான் உண்மை. பசுவிற்கு தண்ணீர் வைத்தால் அது பால் கொடுக்கும், ஆனால், பாம்பிற்கு பால் வார்த்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும், ஏனென்றால் அதனிடம் இருப்பது நஞ்சுதான். அதுபோலதான் திமுகவும். திமுக ஒரு நச்சுப்பாம்பு என்று ஆடிட்டர் அர்ஜூராஜ் பேசியதற்கு மதிமுக நிர்வாகிகள் கரவொலி எழுப்பியதும் தற்போது மிகப்பெரிய சர்ச்சையாகியிருக்கிறது. மதிமுக-வை அழிக்க நினைக்கும் திமுகவோடு இருக்கக் கூடாது என்று அர்ஜூன்ராஜ் வலியுறுத்தியிருக்கிறார்.

கண்டிக்காத வைகோ

கூட்டணியின் தலைமையான திமுகவை தேர்தல் தோல்விக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் கழிட்டிவிட்டு வரும் நிலையில், மதிமுகவும் அதே கோட்டில் பயணித்து வருகிறது. அர்ஜூன்ராஜ் திமுகவை நச்சுப்பாம்பு என்று பேசி பல மணி நேரங்கள் ஆன பின்னரும் அதை மறுத்தோ அல்லது அவரை கண்டித்தோ கட்சியின் பொதுச்செயலாளரான வைகோ எந்த அறிக்கையும் வெளியிடாததும் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் மதிமுக?

இந்நிலையில், மதிமுகவின் பொதுக்குழு வரும் 27ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான கட்சி நிர்வாகிகள் திமுகவுடான கூட்டணியை முறித்துகொள்ள வேண்டும் என்று தீர்மானம் இயற்ற வலியுறுத்தியுள்ளனர். அதனையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து வெளியே வரும் முடிவை மதிமுக பொதுச்செயலாளர் எடுக்க வாய்ப்பிருப்பதாக மதிமுக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணியில் இருந்து வெளியே வந்த பின்னர் வரக்கூடிய இடைத் தேர்தலில் முதல்வர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் த.வெ.க. கூட்டணியில் பங்கேற்று உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவும் துரை வைகோ திட்டமிட்டு வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தலைப்பு செய்திகள்

TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?
TVK: மீறப்படும் விதிகள்; ஒத்துழைக்க மறுப்பது அமைச்சர்களா? அதிகாரிகளா? உத்தரவு போடுவாரா விஜய்?
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
Dams In Karnataka:
Dams In Karnataka: "கேஆர்எஸ் முதல் கபினி வரை.." காவிரி குறுக்கே கர்நாடக கட்டிய அணைகள் எத்தனை?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget