"விஜய் மக்களுக்கு நல்லது செய்வார்" ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ நம்பிக்கை
விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாக துரை வைகோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள மதிமுக அலுவலகத்தில் தேர்தல் வளர்ச்சி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதற்கு மதிமுக முதன்மை செயலாளர் துரைவைகோ கலந்து கொள்ள திருவண்ணாமலை வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து துரை வைகோ பேட்டியளிகையில், "மத்தியில் பாஜக ஆட்சியமைத்து சுமார் 10 ஆண்டு காலம் ஆகின்றது எனவும், பொது மக்களின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவேன் என்று தெரிவித்து அதனை நிறைவேற்றவில்லை என்றும், குறிப்பாக விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்று தெரிவித்து விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாகவும், கடந்த ஆண்டுகளில் சுமார் ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் விளைவிக்கக்கூடிய பொருட்களுக்கு குறைந்த பட்ச விலையை மட்டும் தான் விவசாயிகள் கேட்டனர். அதற்கு பாஜக அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல் விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தனர்.
விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள்:
இதற்கு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து ஒரு வருட காலமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பல விவசாயிகள் இறந்தனர். விவசாயிகளின் போராட்டத்தால் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தருவோம் என்று பாஜக அரசு தெரிவித்து அதனையும் நிறைவேற்றவில்லை, மத்திய அரசு அறிவித்த வாக்குறிகளை நிறைவேற்ற வலியுறுத்தி காந்திய வழியில் போராட்டம் நடத்த சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசுவதும், முள் தடுப்புகளை வைத்து விவசாயிகளை தடுப்பதும் பாஜக அரசு வாடிக்கையாக வைத்துள்ளனர்.
குறிப்பாக நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பொது மக்கள் பாஜக அரசிற்கு தக்க பாடத்தை புகட்டுவார்கள் என்று நம்புகின்றனர். கர்நாடகா மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவில் இதற்கு முன்பாக பாஜக ஆட்சியில் இருந்தது. தற்போது காங்கிரஸ் ஆட்சி உள்ளது. எந்த அரசியல் கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்தையும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக காவிரி உரிமையை கர்நாடகா வழங்கும் என்று தெரியவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளது.
அண்ணாமலையின் செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றம்
பாஜகவுடன் கடந்த பல ஆண்டுகளாக கூட்டணியில் இருந்தவர்கள் அதிமுகவினர் மத்திய பாஜக அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த அதிமுக உறுதுணையாக இருந்தது. தற்போது கூட்டணியில் இருந்து விலகியதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்கத்தக்கது என்று தெரிவித்தனர் இந்த நிலைபாட்டில் இருந்து அதிமுக பின்வாங்க கூடாது, குறிப்பாக தேர்தல் நேரத்தில் இது ஒரு போட்டியாக இருக்குமோ என்று பொது மக்கள் சந்தேகிக்கின்றனர்.
வரும் காலங்களில் பாஜகவை அதிமுக எதிர்த்து வந்தால் அதனை வரவேற்பதாகவும், ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதனை நம்புவதாக இல்லையென்றும் , தமிழக மாநில தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரையில் சராசரி அரசியல்வாதியாக வரமுறையில்லையென்றும், அதிகம் படித்த அண்ணாமலையில் நடவடிக்கைகள், அறிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் ஏமாற்றத்தை கொடுப்பதாகவும், நன்கு படித்த அண்ணாமலை அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று பல நபர்கள் நினைத்தனர். ஆனால் அவரின் செயல்பாடுகள் மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும், அவரின் செயல்பாடுகளால் பாஜக கட்சியை பாதிக்கும்
விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளது
அரசியல் இயக்கங்கள், அரசியல் தலைவர் அனைவரும் மக்களுக்கான வாழ்வாதார அரசியலை மட்டுமே பேச வேண்டும், ஆனால் தற்போது உள்ள அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையாக ஜாதியை வைத்தும், மதத்தை வைத்தும் அரசியல் செய்து வருவதாகவும், உதாரணமாக பாஜக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவேன் என்று வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் மத்தியில் பாஜக ஆட்சியில் வந்ததில் இருந்து விலைவாசி அதிகரித்துள்ளதாகவும், பொது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் எந்தவிதமான ஆக்கப்பூர்வ பணிகளையும் செய்யவில்லை, குறிப்பாக பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் பொது மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் எந்த ஒரு தொகுதிலாவது போட்டியிட்டு வெற்றி பெறட்டும் என்று தான் சவால் விடுப்பதாகவும், திராவிட இயக்கங்கள் மக்களை ஏமாற்றுவதாக குற்றம் சாட்டும் அண்ணாமலை தனித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெருவாரா என்றும், அவர் தனியாக ஒரு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா? என்று சவால் விடுத்தார்.
நடிகர் விஜய் தற்போது தான் கட்சியை ஆரம்பித்துள்ளார், தற்போது வரையில் அவரின் கட்சி கொள்கையை அறிவிக்கவில்லை, அவரின் செயல்பாடுகள் என்ன என்று தெரியவில்லை, மக்களுக்கு சேவை செய்வதில் யார் வந்தாலும் வரவேற்பதாகவும், விஜய் மக்களுக்கு நல்லது செய்வார் என்று தனக்கு நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.