மேலும் அறிய

ஏபிபி நாடு செய்தி எதிரொலி - தமிழக முதல்வரை விமர்சித்து அதிமுக போட்ட ட்வீட்...

பணிகள் முழுமை பெறாத சுகாதார நிலையத்தை அவசர கதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தது குறித்து ஏபிபி நாடு தளத்தில் செய்தி வெளியான நிலையில், திமுக அரசை அதிமுக விமர்சனம் செய்துள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மருத்துவமனைகள் சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

5544 சதுரடியில் சுகாதார நிலையம் 

அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ராஜன் தோட்டம் அருகே 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5544 சதுர பரப்பளவில் தரைத்தளம், முதல் தளத்துடன் கூடிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மகப்பேறு அறை, பிரசவ அறை, மருந்தகம், ஆய்வுக்கூடம், புறநோயாளிகள் பிரிவு, எக்ஸ்-ரே, ஸ்கேன் அறை உள்ளிட்டவைகள் அமையப் பெற்றுள்ளது. இந்த அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.


ஏபிபி நாடு செய்தி எதிரொலி - தமிழக முதல்வரை விமர்சித்து அதிமுக போட்ட ட்வீட்...

நிறைவடையாத கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் 

சுகாதார நிலைய கட்டிடத்தில் பல இடங்களில் ஜன்னல்கள், தரை, செல்ஃப், கழிவரைகள் மின்சார வசதி, படிக்கட்டுகள் போன்ற அடிப்படை கட்டுமான பணிகள் முழுமை அடையாத நிலையில், டையில்ஸ் கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் முழுவதும் சுகாதார நிலையத்தில் உள்ளே பரப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவசர அவசரமாக அதற்கான திறப்பு விழா ஏற்பாட்டினை செய்து, அதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கையால் திறந்து வைக்க வழிவகை செய்துள்ளனர்.


ஏபிபி நாடு செய்தி எதிரொலி - தமிழக முதல்வரை விமர்சித்து அதிமுக போட்ட ட்வீட்...

அதிருப்தியில் மக்கள் 

ஜன்னல் பகுதிகளில் பழைய பேனர்களை வைத்து அடைத்தும், முழுமை பெறாத படிகட்டிகளில் தரை விரிப்புகளை போட்டு மறைத்தும் உள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் தாங்கள் இந்த முழுமை பெறாத கட்டிடத்தில் உள்நுழைந்து தங்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டு விடுமோ என்று அச்சமாக உள்ளது. இவ்வளவு அவசரமாக பணிகளை நிறைவு செய்யாமல் இந்த சுகாதார நிலையத்தை திறப்பதற்கான அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பியவாறு தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி சென்றனர்.


ஏபிபி நாடு செய்தி எதிரொலி - தமிழக முதல்வரை விமர்சித்து அதிமுக போட்ட ட்வீட்...

'புரோட்டோகால்'  மீறல்

குறிப்பாக இதுபோன்ற கட்டிடங்களை பொதுப்பணி துறையினர் கட்டி முடித்து பின்னர் துறை சார்ந்து ஒப்படைப்பது நடைமுறை வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பொதுப்பணி துறையினர் கட்டி முடித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த சுகாதார நிலையம் முழுமையாக பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்து, பின்னர் முதலமைச்சரிடம் அதற்கான திறப்பு விழாவிற்காக நாள் கேட்கப்பட்டு திறப்பு விழா நடைபெறுவது மரபு. ஆனால் அதிகாரிகளும், கட்சியினரும் கட்டிடம் முழுமை பெறாததை மறைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை ஏமாற்றினார்களா? அல்லது தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு இவ்வாறு அவசரகதியில் திறக்கப்பட்டதா? என்ற கேள்விகளும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


ஏபிபி நாடு செய்தி எதிரொலி - தமிழக முதல்வரை விமர்சித்து அதிமுக போட்ட ட்வீட்...

இந்நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேலும் மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் செல்வராஜ், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை துணை இயக்குநர் மரு.அஜீத் பிரபுகுமார், நகர்மன்ற துணை தலைவர் சிவக்குமார், நகர்மன்ற குழு உறுப்பினர் காந்திராஜன், மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் பணிகள் நிறைவுபெறாத நகர்ப்புற சுகாதார நிலையத்தை பொம்மை முதல்வர் @mkstalin திறந்து வைத்துள்ளார்.

அரைகுறை ஆட்சிக்கு, இந்த நாடக திறப்பு விழாவே சாட்சி!

விளம்பர மோகத்தில் பணி முடிந்து விட்டதா என்று கூட பாராமல் ,
பாதுகாப்பு முன்னெடுப்புகள் அதிகம் தேவைப்படுகிற சுகாதார… pic.twitter.com/LQSjeSIxt5

— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) July 3, 2025

">

அதிமுக விமர்சனம் 

இந்நிலையில் இது குறித்து முதல்முதலில் ஏபிபி நாடு செய்தித்தளத்தில் செய்தி வெயியானதை தொடர்ந்து அதிமுக ஐ.டி. விங் சார்பில் அதன் டிவிட்டர் பக்கத்தில் அதன் புகைப்படங்களை பகிர்ந்து தமிழக அரசையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget