உள்ளடி வேலை செய்து வீழ்த்தியவர்கள்; மகேந்திரனை சாடும் மநீம நிர்வாகிகள்!
மநீம துணைத் தலைவர் மகேந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு இடையே, கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தாங்கள் இருக்கின்றோம் என்று பொதுச்செயலாளர் ஏ.ஜி.மெளரியா உள்ளிட்ட பலர் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அதன் துணைத் தலைவர் மகேந்திரன் விலகிய நிலையில், தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தாங்கள் இருப்போம் என்று அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவையில் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியை சந்திதது. கோவை தெற்கில் கடைசி வரை வென்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கமலும் தோல்வியை சந்தித்தார்.
இதன்பின்பு, கட்சியை மறுசீரமைப்பதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறிய நிலையில், அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தனது ராஜினாமாக கடிதத்தில், கமல் மாறுவார் என்று நினைத்தேன் அவர் மாறவில்லை என்று கமல் மீது குற்றம்சாட்டியிருந்தார்.
இதன்பிறகு இதுதொடர்பாக கமல்ஹாசன் என்ன கூற போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ‘மகேந்திரன் ஒரு துரோகி’ என்று பரபரப்பான அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து, பல பேட்டிகளில், மக்கள் நீதி மய்யம் மற்றும் கமல்ஹாசன் குறித்து பல குற்றச்சாட்டுகளை மகேந்திரன் கூறி இருந்தார். மகேந்திரனுக்கு ஆதரவாகவும், கமலை எதிர்த்தும் ஒரு தரப்பினம் கூண்டோடு ராஜினாமா செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக தாங்கள் இருக்கின்றோம் என்று பொதுச்செயலாளர் ஏ.ஜி.மெளரியா உள்ளிட்ட பலர் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.ஜி.மெளரியா (வடக்கு, கிழக்கு) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛சமீபத்தில் கட்சியில் வெளியேறிய முன்னாள் துணைத் தலைவர் டாக்டர்.மகேந்திரன் தலைவர் கமல்ஹாசன் மீது நிறைய குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். இதில் எதிலும் உண்மையில்லை. உள்ளடி வேலைகளை செய்து தலைவரையும், கட்சியை வீழ்த்தியவர்கள், திறமையின்மையால் தோல்வியை தழுவியவர்கள் குறித்து தலைவர் தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். கடுமையான நடவடிக்கைகளை எடுத்து கட்சியை மறுகட்டமைப்பு செய்வார். அதற்கு ஒத்துழைக்கும் பொருட்டே நானும் ஏனைய நிர்வாக குழு உறுப்பினர்களும் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துள்ளோம். நான் தலைவரின் நேர்மையால் ஈர்க்கப்பட்டு கட்சிக்கு வந்தவன். மக்கள் சேவை தவிர வேறு குறுகிய நோக்கங்கள், ஆதாயங்கள் மீதான எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. தலைவர் சொல்லும் வழியில் நடப்பேன். என்றும் தலைவருடன் நிற்பேன்’ என கூறப்பட்டுள்ளது.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">நேர்மையான உலகத்தரம் வாய்ந்த நிர்வாகத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டுமெனும் ஒரே நோக்கத்தில் ஐஏஎஸ் பதவியை தூக்கி ஏறிந்துவிட்டு அரசியலுக்கு வந்தவன் நான். தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் அருகதை தலைவர் திரு.கமல்ஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன்</p>— Dr. Santhosh Babu IAS (@SanthoshBabuIAS) <a href="https://twitter.com/SanthoshBabuIAS/status/1390557866000457729?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 7, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதேபோல், பொதுச் செயலாளரும் ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிராரியுமான சந்தோஷ் பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், ‘நேர்மையான உலகத்தரம் வாய்ந்த நிர்வாகத்தை தமிழகத்தில் உருவாக்க வேண்டுமெனும் ஒரே நோக்கத்தில் ஐஏஎஸ் பதவியை தூக்கி ஏறிந்துவிட்டு அரசியலுக்கு வந்தவன் நான். தமிழக மக்களுக்கு நேர்மையான ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் அருகதை தலைவர் கமல்ஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது. நான் அவரோடு நிற்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">I can give 100 times better interviews than Dr. Mahendran &explain where he went wrong and what's his mistakes but that's not worthy of time.The same eg, he is showing the Ostrich buried in sand behavior.With this attitude I fail to understand how he gave 100% effort in elections</p>— Sarathbabu Elumalai (@FoodkingSarath) <a href="https://twitter.com/FoodkingSarath/status/1390928675978182657?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>May 8, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
மேலும், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆலந்துர் தொகுதியில் போட்டியிட்ட தொழில்முனைவோர் சரத்பாபு, ‘ டாக்டர் மகேந்திரனை விட 100 மடங்கு சிறந்த நேர்காணல்களை என்னால் கொடுக்க முடியும், அவர் எங்கு தவறு செய்தார், அவருடைய தவறுகள் என்ன என்பதை விளக்க முடியும். ஆனால், அது இந்த நேரத்திற்கு தகுதியானது அல்ல” என்று ட்வீட் செய்தார்.
மேலும், தேர்தலின்போது மக்கள் நீதி மய்யத்திற்கு ஊடகங்கள் ஆதரவு கொடுத்திருந்தால், நாங்கள் பல இடங்களில் வெற்றி பெற்று இருப்போம் என்றும், மிகவும் வலுவாக திரும்புவோம் எனவும் டிவிட்டரில் கூறியுள்ளார்.
இப்படி ஒரு தரப்பு கமலுக்கு எதிராக கல்வீசினாலும், மறுபுறம் தூண்களாக நிர்வாகிகள் பலரும் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். இதனால் மநீம கூடாரம் சூடுபிடித்துள்ளது.