மேலும் அறிய

திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது தமிழக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள் - செல்லூர் ராஜூ பேட்டி !

திருமாவளவன் போர் குரல் கொடுத்துவிட்டு அமுங்கிவிட்டார் - செல்லூர் ராஜூ விமர்சனம்.

திமுக எதிர்க்கட்சியாக கூட வர முடியாது தமிழக மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள்

செல்லூர் ராஜூசெய்தியாளர் சந்திப்பு

திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல உள்ளது. காங்கிரஸ் இப்போது போர்க்குரல் எழுப்பி உள்ளார்கள். திருமாவளவன் போர்க் குரல் எழுப்பி எழுப்பி அமுங்கிவிட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி அளித்தார். முன்னாள் அமைச்சரும் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செல்லூர் ராஜு கோரிப்பாளையத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...," விடியா ஆட்சி வீட்டுப் பில்" சாட்சி என்ற செயலி இப்போதுதான் மதுரை மண்டலத்திற்கு வந்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி இன்னும் ஏன் பணிகள் தொடங்கவில்லை என்று கேட்டார். கடவுச்சொல் நேற்றுதான் வந்துள்ளது என பதிலளித்தேன். நான் ஏற்கனவே இது போன்ற ஒரு செயலியை தொடங்கி வைத்தது அது வெறும் ட்ரயல். இப்போது தான் முழு திரைப்படத்தை மக்களிடத்தில் காண்பிக்கப் போகிறோம்.

விலைவாசி உயர்வு

திமுக ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரிரு சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடுகிறது. இதனை தமிழகத்தின் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட வேண்டாம். அதிமுக ஆட்சியில் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மக்களுடைய ஓட்டுகள் சிதறக் கூடாது என்பதற்காக தான் தேர்தல் கூட்டணி அமைப்பார்கள்.

எதிர்கட்சி கூட வராது

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பவ்வியமாக உள்ளார்கள். 2026 ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது. திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல உள்ளது. காங்கிரஸ் இப்போது போர்க்குரல் எழுப்பி உள்ளார்கள். திருமாவளவன் போர்க் குரல் எழுப்பி எழுப்பி அமுங்கிவிட்டார். எதனால் அமுங்கினார் என்று தெரியவில்லை. கட்சிகளை பிரிப்பது திமுக தான். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை இரண்டாக பிரித்துவிட்டார்கள். ஒருவேளை போர்க்குரல் எழுப்பினால் விசிக கட்சியை திமுக இரண்டாக உடைத்துவிடுவார்களோ என திருமாவளவன் பேசாமல் உள்ளார். இந்திய அளவில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரத்தின் படி தலித்கள் பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. ஆனால் கூட்டணியில் உள்ள திருமாவளவன் எதிர்த்து கேள்வி கேட்பதில்லை. பூரண மதுவிலக்கு கொண்டு வருவது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவெடுப்பார்.திமுக ஹூரோவா ஜூரோவா என தெரியாது. மக்கள் கொதித்து போய் உள்ளனர். 2026 ல் தேர்தலில் உண்மையான ஹூரோ எடப்பாடி பழனிசாமி தான். எழுதி வைத்து கொள்ளுங்கள். கூட்டம் தானாக சேர வேண்டும். கூட்டப்படும் கூட்டத்தில் மாநாட்டில் முதல்வர் பேசுகிறார். ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பதை முதல்வர் யாரிடம் கேட்டார். சாதாரண மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே மக்கள் பிரச்சினை தெரியவரும்.

தவெக குறித்தும், விஜய் குறித்தும் செல்லூர் ராஜுவை சுற்றி சுற்றி செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு கையேடுத்து கும்பிட்டு மற்றோரு நாள் பேசலாம், என்றார்.​

தலைப்பு செய்திகள்

CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
ஆளுநர் அல்ல... பாஜக ஏஜெண்ட்! - புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பிய நாராயணசாமியின் வீடியோ!
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
T.T.Praveen: தமிழை மலையாளத்தில் எழுதி பேச்சு.. சட்டசபையில் கவனம் ஈர்த்த பிரவீன் யார் தெரியுமா?
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (11-08-2026): கடகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு வெற்றி.. உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Embed widget