மேலும் அறிய
மதுரையில் மெட்ரோ திட்டம் அ.தி.மு.க., ஆட்சியில் வந்துவிடும் - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா சொல்வது என்ன !
திமுக நிர்வாகி சுட்டுக் கொல்லப்படுகிறார் திமுக ஒன்றிய செயலாளர் மீது பாலியல் குற்றம் என இன்று ஒரே நாளில் மட்டும் - 5 செய்திகள் வந்துவிட்டது. - நல கட்ட உதவிகள் வழங்கும் விழாவில் ராஜன் செல்லப்பா பேச்சு.

ராஜன் செல்லப்பா
Source : whatsapp
மதுரைக்கு மெட்ரோ திட்டம் வந்தே ஆகும் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம் அதே போல் எய்ம்ஸ் திட்டமும் எடப்பாடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் செயல்பட போகுது - ராஜன் செல்லப்பா பேச்சு.
அதிமுக நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா
அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, அதிமுக மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்தவிழா அவனியாபுரத்தில் அதிமுக கழக அமைப்புச் செயலாளர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் ராஜன் செல்லப்பா பேசுகையில்..,” திமுக செயலாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றம் என இன்று ஒரே நாளில் ஐந்து செய்திகள் ஊடகங்களில் வந்துள்ளன. திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோயிலில் ரோப் கார் கடந்த ஆண்டு 23 கோடி ஒதுக்கப்பட்டு வேலைகள் இன்னும் நடைபெறவில்லை. மெட்ரோ ரயில் திட்டம் வராததற்கு யார் காரணம், விரிவான திட்ட அறிக்கையில் சரியான தகவலை கொடுத்திருந்தால் மெட்ரோ திட்டம் மதுரைக்கு வந்திருக்கும். மத்திய அரசு திருப்பி தகவல் கேட்டு அனுப்பி உள்ளது. அண்ணா திமுக ஆட்சி வந்ததுக்கு பின்னர் மதுரையில் மெட்ரோ திட்டம் வந்தே ஆகும் சந்தேகம் வேண்டாம்.
வரலாறு இல்லை
எய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் தான் வருகிறது. யாருக்காவது தெரியுமா? என்று மக்களைப் பார்த்து கேட்டார். தொடர்ந்து அவர் பேசும்போது மூன்றாண்டுகளில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னேன். ஆனால் ஆளுகின்ற வாய்ப்பு இழந்துவிட்டதால் அதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம். எடப்பாடி முதலமைச்சர் ஆக வந்த பிறகு தான் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட போகுது. இன்னும் இரண்டு மாதங்களில் கொடுக்காத மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க போகிறார்களா? இன்னும் ஆட்சியை இரண்டு மாதத்தில் முடிவடைய போகிறது. அப்புறம் எந்த அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாது. காவல்துறையை மிரட்ட முடியாது. பொய் வழக்கு போட முடியாது. மோசமான திமுக அரசுக்கு முடிவு காலம் வந்துவிட்டது. திமுக ஐந்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சி பீடத்தில் இருந்ததாக வரலாறு இல்லை. ஆனால் அண்ணா திமுக தொடர்ந்து ஆட்சியில் இருந்துள்ளது.
உள்ளூர் மாடுகளை மதிப்பதில்லை
திராவிட முன்னேற்ற கழகம் நிர்வாக திறமையில்லை. போட்டோ சூட் எடுக்கிறார். இன்றைக்கு கூட கோவையில் செல்கிறார். நடுரோட்டில் பாதுகாப்புடன் செல்கிறார். ரெடிமேடாக பத்து கல்லூரி பெண்களை வரவழைத்து வணக்கத்தை போட்டுக்கொண்டு சொல்கிறார். மக்கள் என்ன செய்கிறார்கள் என்றே அவருக்கு தெரியவில்லை. பெண்களுக்கு இலவச பேருந்து என்று பஸ்ஸே ஓடவில்லை. 10 பேருந்துதான் மதுரையில் ஓடுகிறது. அதுவும் ஓட்டை பேருந்தாக உள்ளது. தயவுசெய்து இந்த வாரத்திற்குள் எஸ் ஐ ஆர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து விடுங்கள். எங்கள் நிர்வாகிகள் அதற்கு உதவி பண்ணுவார்கள் சாதாரணமாகவே திமுக காரர்கள் மதிக்க மாட்டார்கள். ஓட்டு இல்லை ஆனால் இன்னும் மதிக்க மாட்டார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு மாதம் உதவித்தொகை மாடுபிடி வீரர்களுக்கு உதவித் தொகை கொடுப்போம் என்றார்கள் கொடுத்தார்களா? உள்ளூர் மாடுகளை மதிப்பதில்லை. அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியின் போது டோக்கன் கொடுப்பதில்லை. அன்போடு இதற்கெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும். அவனியாபுரம் என்றைக்குமே அண்ணா திமுகவின் கோட்டை தயவுசெய்து வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்யுங்கள்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















