மேலும் அறிய
தஞ்சாவூர் திமுக கவுன்சிலர் தகுதிநீக்க உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை
எனது சகோதரரும் நானும் தனித் தனியாக வசிக்கும் சூழ்நிலையில் இருவருக்கும் இடையே எந்த ஒரு தொழிலும் பொருளாதார ரீதியான தொடர்பு இல்லை
![தஞ்சாவூர் திமுக கவுன்சிலர் தகுதிநீக்க உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை Madurai High Court stays disqualification order of Thanjavur DMK councilor தஞ்சாவூர் திமுக கவுன்சிலர் தகுதிநீக்க உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/17/455712fc8d20a7ee0c32174a499f7565_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உயர்நீதிமன்ற மதுரை கிளை
தஞ்சாவூர், கரந்தட்டாங்குடியை சேர்ந்த பிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சாவூர் 16வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றேன். நகராட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கலிருந்து வாக்கு எண்ணிக்கை வரை அனைத்தும் முறையாக கண்காணிக்கப்பட்டது என் மீது யாரும் எந்த ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் புண்ணியமூர்த்தி மற்றும் குமார் ஆகியோர் திடீரென நான் வெற்றி பெற்றது தொடர்பாக ஆட்சேயபனை தெரிவித்தனர்.
எனது சகோதரர் மாநகராட்சியில் சில ஒப்பந்தங்கள் எடுத்து இருப்பது தொடர்பாக ஆட்சேயபனை தெரிவிக்கப்பட்டது. எனது சகோதரரும் நானும் தனித் தனியாக வசிக்கும் சூழ்நிலையில் இருவருக்கும் இடையே எந்த ஒரு தொழிலும் பொருளாதார ரீதியான தொடர்பு இல்லை. இந்த நிலையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி என்னை கவுன்சிலர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தனர். நானும், எனது சகோதரரும் தனித்தனியே வசிக்கும் சூழ்நிலையில் தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக எந்தவொரு தொடர்பும் இல்லாத சூழ்நிலையில் என்னை தகுதி நீக்கம் செய்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கவும், இந்த உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, தஞ்சாவூர் 16வது வார்டு கவுன்சிலர் தகுதி நீக்கம் செய்த உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்டார் மேலும் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 8 வாரத்திற்குள் தஞ்சாவூர் 16வது வார்டு கவுன்சிலர் குறித்து மீண்டும் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு மரண தண்டனையை ரத்து செய்தும், ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் உத்தரவிட்டனர்
மனைவியை கொன்றுவிட்டு மகளுக்கு பாலியல் தொல்லை செய்த நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து
புதுக்கோட்டை அருகே உள்ள தேனிப்பட்டியை சேர்ந்த முருகேசனுக்கு மூன்று மனைவிகள் மற்றும் 10 பிள்ளைகள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மனைவிக்கு பிறந்த ஒரு ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுடன் வசித்து வந்த முருகேசன் இரண்டாவது மனைவிக்குப் பிறந்த 16 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதனையறிந்த அவரது இரண்டாவது மனைவி முருகேசனை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகேசன் கடந்த 2019 ஆம் ஆண்டு தென்னந்திரயான்பட்டி கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தனது இரண்டாவது மனைவியை கொலை செய்தார். இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது மகளை பாலியல் தொல்லை செய்ததை, மனைவி கண்டித்ததால், அவரை முருகேசன் அரிவாளால் வெட்டி கொலை செய்ததும், மகளுடன் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததும் தெரியவந்தது.
இந்த வழக்கை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம், கொலை குற்றத்திற்காக குற்றவாளி முருகேசனுக்கு மரண தண்டனையும், மகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முருகேசன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion