AIADMK : அதிமுக புதிய நிர்வாகிகள் நியமனம்: பொன்னையன் பதவி மாற்றம் - எடப்பாடி பழனிசாமி
அதிமுகவில் புதிய நிர்வாகிகளை நியமித்து, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்
துணை பொதுச் செயலாளர்கள்:
அதிமுக துணை பொதுச்செயலாளர் என புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு கே.பி. முனுசாமி மற்றும் நத்தம் விசுவநாதன் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பொன்னையன் பதவி மாற்றம்:
அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகித்த சி.பொன்னையன் மாற்றப்பட்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்த தமிழ்மகன் உசேன், கழக அவைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால் பொன்னையனுக்கு அப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கழக தலைமை செயலாளர்:
அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு வகித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி பதவி வகித்த, அதிமுக கழக தலைமை கழக செயலாளர் பொறுப்பிற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வாழ்த்துக்கள் 🙏🙏🙏 pic.twitter.com/Hf9MQtrNq7
— ஜெ .ஜெ .புகழ் (@PugalAdmk) July 13, 2022
கழக அமைப்பு செயலாளர்கள்:
அதிமுக அமைப்பு செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி சண்முகம், பி. தனபால், கே.பி. அன்பழகன், ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, பென்ஜமின், ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகிய 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
Also Read: AIADMK issue : கே.பி.முனுசாமி ஒரு பச்சோந்தி; பொன்னையன் உயிருக்கு ஆபத்து: புகழேந்தி பரபரப்பு பேட்டி!
Also Read: தமிழகத்தின் ராஜபக்சே இபிஎஸ்; விரைவில் தொண்டர்களால் விரட்டியடிக்கப்படுவார்- டிடிவி தினகரன்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்