‛முதல்ல cm இங்க வரட்டும்’ கொளத்தூரில் கொந்தளித்த குஷ்பு: பொதுமக்கள் அளித்த அதிரடி பதில்!
கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வந்து பார்த்தாரா என்ற குஷ்புவின் கேள்விக்கு அந்த தொகுதி மக்கள் அதிரடி பதில் ஒன்றை வழங்கியுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு தொடங்கி பெய்து வரும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் சிறிதும் குறைவதாகத் தெரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையில் 23 செ.மீ வரை பெய்த மழை 14 செ.மீ என்ற அளவில் குறைந்தது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆங்காங்கே லேசான மழை இருந்தாலும் கூட, குறிப்பிடும்படியாக எந்தப் பகுதியிலும் மழை பதிவாகவில்லை. அதுமட்டுமின்றி சென்னைக்கு அருகில் தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகியுள்ள முலையில், நாளை தமிழகம் முழுவதும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னையில் பெரும்பான்மையான பகுதிகளில் மழை - வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 458 தெருக்களில் மழை நீர் தேங்கி இருப்பதாகவும், அவற்றில் இதுவரை 81 தெருக்களில் மட்டும் தான் வெள்ள நீர் அகற்றப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் முதன்மைச் சாலைகளில் ஒன்றான தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் சுமார் ஒன்றரை அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அந்தச் சாலையுடன் இணைந்த மற்ற சாலைகளிலும் மழை நீர் இன்னும் வடிந்தபாடில்லை. தியாகராய நகர், மாம்பலம், கே.கே.நகர் உள்ளிட்ட தென் சென்னை பகுதிகளிலும், வட சென்னையின் பெரும்பாலான பகுதிகளிலும் மழை - வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. சென்னை புறநகர் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. பல இடங்கள் குளங்களாக காட்சியளிக்கின்றன. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால் பால், காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்கவில்லை.
மழை நீர் தேங்கியிருப்பது இயல்பு வாழ்க்கையை பாதிப்பது என்ற கட்டத்தைத் தாண்டி அடுத்தடுத்த நிலையிலான பாதிப்புகளையும் ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. தேங்கி நிற்கும் மழை நீரில் அந்தந்த பகுதிகளில் இருந்து அடித்து வரப்பட்ட குப்பைகள், வீடுகளில் இருந்து வீசப்பட்ட அசுத்தமான கழிவுப் பொருட்கள், உணவுக் கழிவுகள் ஆகியவை கலந்துள்ளன. சில இடங்களில் கழிவு நீரும் கலந்துள்ளது. இவ்வளவு கழிவுகளுடன் மூன்று நாட்களாக தேங்கிக் கிடக்கும் மழை நீரிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. பல இடங்களில் வீடுகளுக்கான குடிநீர் சேமிப்புக் கலன்களில் மழை நீர் கலந்துள்ளது. இந்த சீர்கேடுகளின் காரணமாக சென்னையில் தொற்று நோய்கள் பரவும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூர் பகுதிகளில் நீர் இன்னும் வடியவில்லை.
“CM இங்க வந்து பார்த்து இருக்கனும்...” என்ற குற்றச்சாட்டுக்கு, பொதுமக்கள் தெரிவித்த பதிலால் ஆடிப்போன பாஜக நிர்வாகி குஷ்பு#SunNews | #Chennai | #BJP | #CMMKStalin pic.twitter.com/kJ8kFU06ux
— Sun News (@sunnewstamil) November 17, 2021
இந்தநிலையில், கொளத்தூர் தொகுதியில் இன்று நடிகை குஷ்பு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களான பால் மற்றும் பிரெட் பொருட்களை வழங்கினார். அப்பொழுது செய்தியாளர்கள் நீங்கள் போட்டியிட்ட ஆயிரம் விளக்கு தொகுதிக்கு ஏன் நிவாரண பொருட்களை வழங்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், முதலில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் வந்து பார்வையிட்டாரா ? நாங்கள் நேற்றே ஆயிரம் விளக்கு தொகுதியில் நிவாரண பொருட்களை வழங்கி விட்டோம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து மக்களுக்காக சேவை செய்து வருகிறார். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவரது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதிக்கு வரவில்லை என்று குற்றஞ்சாட்டினார். அப்பொழுது அருகிலிருந்த பொதுமக்கள் தண்ணீர் வடிந்ததும் முதலமைச்சர் வந்து பார்வையிடுவார் என்று தெரிவித்தனர். பொதுமக்களின் இந்த பதிலுக்கு பிறகு குஷ்பு, ,முதலில் வரட்டும் பின்பு பார்க்கலாம் என்று தன் பேச்சை முடித்து கொண்டார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்