வாஸ்து பிரச்னையில் சிக்கித் தவிக்கும் கரூர் மாநகராட்சி; குபேர மூலைக்கு மாறும் திமுக மேயர்..?
பகுத்தறிவு பேசும் திமுகவை சேர்ந்தவரான கவிதா மேயராக இருந்தாலும் வாஸ்து விஷயத்தில் அவர் ரொம்பவே ஆர்வம் காண்பிக்கிறார். பல மாற்றங்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இது வழக்கமான ஒன்றுதானே என பலர் கூறி வருகின்றனர்.
வாஸ்து பிரச்சனையில் சிக்கித் தவித்து வருகிறது கரூர் மாநகராட்சி. பகுத்தறிவு பேசும் திமுகவை சேர்ந்தவரான கவிதா மேயராக இருந்தாலும் வாஸ்து விஷயத்தில் அவர் ரொம்பவே ஆர்வம் காண்பிக்கிறார் என தெரிகிறது. அதனால் பல மாற்றங்கள் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். இது பழைய முறை இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த ஆட்சியில் ரூ.7 கோடியில் கட்டப்பட்டது மாநகராட்சி கட்டடம். மக்கள் இறுதியில் சந்திக்கும் வகையில் மேயருக்கு கீழ் தளவாசலின் அருகில் அறை ஒதுக்கப்பட்டது. அடுத்த அறை துணைமேயருக்கு ஒதுக்கப்பட்டது.
மேயரை சந்திக்க வருபவர்கள் வெளி வராண்டாவில் அமர்ந்து இருக்க வசதி செய்யப்பட்டது. காத்திருக்க தனியறை தயாரானது நேரலைக்கு எதிரில் இருந்த மருத்துவத்துறை அலுவலகம் பழைய கட்டடத்துக்கு மாற்றப்பட்டு அந்த அறை காத்திருப்பு அரையானது பல்வேறு உடல் உபாதைகள் இந்நிலையில் வாஸ்துபடி சமையலறை கட்டக்கூடிய அக்னி மூலையில் அமைந்து இருக்கிறது. அந்த அறையில் இருந்து பணியாற்றி வருவதால் தான் மேயர் கவிதாவுக்கு பல்வேறு உடல் உபாதைகள் வருகின்றன, பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
அக்னி மூலையில் இருந்து குபேர மூலைக்கு அவர் அறையை மாற்றினால் நல்லது என்று ஒரு சிலர் யோசனை அளித்துள்ளதாக தெரிகிறது. அதைத்தொடர்ந்து இப்போது மாநகராட்சி கமிஷனருக்கு முதல் தளத்தில் குபேர மூலையில் அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேர்த்தியாக அதேபோல் குபேர மூலையில் உள்ள அறையை நேரடியாக மாற்றிட முடிவு செய்யப்பட்டது. அந்த அறையில் இருந்து ஏற்கனவே பணியாற்றிய பணியாளர்கள் வேறு அறைக்கு மாற்றப்பட்டு விட்டனர் அந்த அறை நேரடியாக விறுவிறுப்பாக உருமாறி வருகிறது.
அதேபோல் அக்னி மூலையில் துணை மேயர் அறைக்கு அருகில் உள்ள கழிப்பறையையும் மாற்றிவிட முடிவு செய்துள்ளனர். இப்போது மேலே பயன்படுத்தி வரும் அறையை மேற்கு ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அக்னி மூலையில் இருந்து குபேர மூலை மாற்றம் குறித்து மேயர் கவிதாவிடம் கேட்டபோது: வாஸ்து முறைப்படி இந்த கட்டிடம் கட்டப்படவில்லை. எங்கெங்கு எதை எதை கட்ட வேண்டுமோ அங்கங்கு அவற்றைக் கட்டாமல் தவறுதலாக பல அறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை சீரமைத்தால் தான் இங்கு நான் மட்டுமல்ல பணியாற்றும் பணியாளர்களும் நலத்துடன் இருப்பார்கள் மாநகராட்சியும் சிறப்பாக செயல்படும் எனவே தான் ஒரு சில மாற்றங்களை மேற்கொண்டு உள்ளோம் என்றார்.