மேலும் அறிய

கூட்டத்திற்குள் திடீரென வந்த அன்புமணி..! உற்சாகம் அடைந்த கட்சியினர்..! காஞ்சிபுரத்தில் நடந்தது இதுதான்..!

வாலாஜாபாத் ஒன்றியம் வில்லிவலம் கிராம ஊராட்சியில் கிளைப் பொறுப்பு நிர்வாகிகளை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.

தமிழ்நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி, கிளை கழகம் சார்பாக பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற வேண்டும் என அக்கட்சியின் தலைமை உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது,  திடீரென பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியின் கிளை பொறுப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடி கட்சி வளர்ச்சிப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அறிவுரைகள் ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்திற்குள் திடீரென வந்த அன்புமணி..! உற்சாகம் அடைந்த கட்சியினர்..! காஞ்சிபுரத்தில் நடந்தது இதுதான்..!
 
மேலும் பூத் கமிட்டி உறுப்பினர்களை அன்புமணி ராமதாஸ் நேரடியாக தேர்ந்தெடுத்தார். கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்தார். மேலும் அன்புமணியின் வருகையை எதிர்பாராத அக்கட்சியினர், உற்சாக வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர். அன்புமணி ராமதாசை சூழ்ந்து கொண்டு, சிறுவர்கள், சிறுமிகள்,  பெண்கள் உள்ளிட்டோர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.‌ தொடர்ந்து அன்புமணி ராமதாஸ்,  வருகையை அறிந்த கிராமத்தைச் சார்ந்த நபர்களும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். கிராம மக்கள் மற்றும் கட்சியினர் என அனைவரிடம், அன்புமணி ராமதாஸ் தனித்தனியே புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

கூட்டத்திற்குள் திடீரென வந்த அன்புமணி..! உற்சாகம் அடைந்த கட்சியினர்..! காஞ்சிபுரத்தில் நடந்தது இதுதான்..!
 
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், "பண்டிகை காலங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் ஆம்னி பேருந்து கட்டணத்தை, அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். பண்டிகைகளுக்கு முன்பாக ஆம்னி பேருந்துகள் விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்வதும், அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டன. அரசு கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் பொங்கல் கரும்பு சாகுபடி செய்திருக்கின்றனர்" என தெரிவித்தார் 

கூட்டத்திற்குள் திடீரென வந்த அன்புமணி..! உற்சாகம் அடைந்த கட்சியினர்..! காஞ்சிபுரத்தில் நடந்தது இதுதான்..!
 
பொங்கல் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகளை காத்திடும் வகையில் தமிழக அரசின் பொங்கல் பரிசு திட்டத்தில் கரும்பினை சேர்த்து வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் வாட்ச் அரசியல் குறித்து கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், " நான் வாட்ச் கட்டவில்லை ,  என சிரித்துக் கொண்டு  பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே வேடிக்கையாக கையை தூக்கி காட்டினார்.

கூட்டத்திற்குள் திடீரென வந்த அன்புமணி..! உற்சாகம் அடைந்த கட்சியினர்..! காஞ்சிபுரத்தில் நடந்தது இதுதான்..!
 
காப்புக்காடு சுற்று உள்ள பகுதிகளில் ஒரு கிலோ மீட்டருக்குள், கல்குவாரி மற்றும் சுரங்கங்கள் அமைக்க கூடாது என அரசாணையை திராவிட முன்னேற்ற கழகம் தான் கொண்டு வந்தது. இது அப்பொழுது நல்ல நடவடிக்கையாக பார்க்கப்பட்ட நிலையில், பாதுகாக்கப்பட வேண்டிய காப்புக் காடுகளை தற்பொழுது ஒரு கிலோமீட்டர் குள்ளும் கல்குவாரி அமைத்துக் கொள்ளலாம் என அரசாணை பிறப்பித்திருப்பது வேதனை அளிக்கிறது. அரசு உடனடியாக இதை திரும்ப பெற வேண்டும்,  தேவைப்பட்டால் பாட்டாளி மக்கள் கட்சி இதற்காக போராட்டம் நடத்தும் என தெரிவித்தார்.  வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கு ஏற்றார் போல் முடிவு எடுக்கப்படும், தேர்தலுக்கு 6 மாதத்துக்கு முன்பே முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget