Kamal haasan : அன்புமணி.. ஜி.கே வாசன் ரூட்டில் கமல்.. இனிமேல் டெல்லி தான்! தொண்டர்களுக்கு டாடா
Kamal hassan : மக்கள் நீதி மய்யத்தின் எட்டாம் ஆண்டு விழாவில் பேசிய கமல், இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும் எனவும் தெரிவித்தார்.

நடிகர் கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டும் மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார், 2019-ஆம் மக்களைவை தேர்தலை சந்தித்து கணிசமான வாக்கு சதவீதத்தை பெற்றார். அதன் பின்னர் 2021 சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது. இதில் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு நூழிலையில் எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பை இழந்தார்.
இதன் பின்னர் 2024 நாடளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்து தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிக்காக பிரச்சாரம் செய்தார், அதன் பிறகு அமெரிக்கவில் AI-தொழில்நுட்பத்தை படிக்க சென்றார்.
சமீபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் எட்டாம் ஆண்டு விழாவில் பேசிய அவர் இந்த ஆண்டு, நாடாளுமன்றத்தில் நமது குரல் ஒலிக்கும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் கமலுக்கு எம்.பி கிடைக்கும் என்பது ஏறக்குறைய உறுதியானது
வைரமுத்து:
கவி பேரரசு வைரமுத்து தமிழ் சினிமாவில் 6000-க்கும் மேற்ப்பட்ட பாடல்களை எழுதி தமிழ் சினிமாவில் நீங்காத இடம் பிடித்துள்ளார், இவர் பாடல்கள் மட்டுமன்றி கவிதைகள், சிறுகதைகளும் எழுதியுள்ளார், இவர் 7 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இந்த நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசினார்,இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வைரமுத்துவின் பதிவு:
நாளாயிற்று நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன் நண்பர் கமல்ஹாசன், அவர்களை ஒளிபடைத்த கண்களோடு உரையாடினார் அரசியல் பேசினோம்; கலை குறித்துக் கலந்தாடினோம்; உடல் நிலை உணவு நிலை குறித்து அறிவாடினோம்; சமூக ஊடகங்கள் குறித்துத் தெளிவு பெற்றோம்.
நாளாயிற்று
— வைரமுத்து (@Vairamuthu) February 25, 2025
நட்பு நிமித்தமாகச் சந்தித்தேன்
நண்பர் கமல்ஹாசன் அவர்களை
ஒளிபடைத்த கண்களோடு
உரையாடினார்
அரசியல் பேசினோம்;
கலை குறித்துக்
கலந்தாடினோம்;
உடல் நிலை
உணவு நிலை குறித்து
அறிவாடினோம்;
சமூக ஊடகங்கள் குறித்துத்
தெளிவு பெற்றோம்
"செயற்கை நுண்ணறிவில்
உங்களுக்குப் பயிற்சி… pic.twitter.com/BXa6DkJ0UN
"செயற்கை நுண்ணறிவில் உங்களுக்குப் பயிற்சி உண்டா" என்றார் "செயற்கை நுண்ணறிவைக் கவிதைக்குப் பயன்படுத்தினேன்; ஆனால் அதில் ஜீவன் இல்லை" என்றேன் அடுத்த படத்திற்கான தலைப்பைச் சொன்னார். "நன்று; யார் சொன்னாலும் மாற்றாதீர்கள்" என்றேன் டெல்லிப் பட்டணத்திற்கான சமிக்ஞை தெரிந்துகொண்டேன் மகிழ்ந்து விடைகொண்டேன் என்று வைரமுத்து தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.
கமலுக்கு எம்.பி பதவி:
வைரமுத்து போட்ட இந்த பதிவின் மூலமாக கமல்ஹாசனுக்கு மாநிலங்கவை எம்.பி பதவி உறுதி என்பதை வைரமுத்து உறுதிச்செய்தார், இதற்கு முன்னால் இதே போன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே வாசன் ஆகியோருக்கு எம்.பி பதவி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் மட்டுமே தொடர்ந்து எம்.பியாக தொடர்ந்தனர். அதே போல தற்போது கமலுக்கும் எம்.பி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மாநில அரசியலில் ஈடுப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கமல்ஹாசன் தேசிய அரசியலில் ஈடுப்படவுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

