தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தான், இந்தியை திணிக்க முடியாது: அமைச்சர் எ.வ.வேலு தடாலடி
தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை தான் என்றும், இந்தியை திணிக்க முடியாது என்றும் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கம், உள்ளாட்சி தேர்தல் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு மாபெரும் பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் நடைபெற்றது.
இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ, மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., உளுந்தூர்பேட்டை நகர்மன்ற தலைவர் திருநாவுக்கரசு, மாநில மகளிர் அணி துணை அமைப்பாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் வரவேற்றார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும், திருவண்ணாமலை மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு, தலைமை கழக பேச்சாளர் எழும்பூர் கோபி ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து பேசினார்கள்.
Supriya Sule Latest | ‘இதுதான் அரசியல்’... பாய்ண்ட்டுகளை அடுக்கிய சுப்ரியா சூலே | Parliament Speech
Jaya Kumar on Dravidian Model | “திராவிட மாடல் சிறப்பானதுதான்... ஆனால்..” சாடிய ஜெயக்குமார் | Stalin
கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:
“கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைக்கு கிடைத்த பரிசாகும். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் ஆட்சி செய்து வருகிறார். நெடுஞ்சாலைத்துறையில் கிராமப்புற சாலையில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக கட்டுவதற்கு நிதி நிலை அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுதந்திரம் வாங்கி தந்த நேரு ஆட்சிக்காலத்திலேயே இந்தி கட்டாயம் என்பதை ஏற்க மறுத்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது மத்திய மந்திரி அமித்ஷா இந்தி கட்டாயம் என சொல்வதை நாங்கள் எப்படி கேட்போம். தமிழகத்தில் இருமொழி கொள்கை தான், தாய்மொழி தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும்தான். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முடியாது. மாணவர்களுக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து பல நல்ல திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீட்டி வருகிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் எப்போதும் தி.மு.க.வின் கோட்டையாக இருக்கவேண்டும்” என அவர் பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்