மேலும் அறிய

தமிழகத்திலும் ஹிஜாப்புக்கு தடையா? - நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த ஆசிரியரின் மீது பணியிட மாற்றம் எனும் நிலையை கடந்து துறைரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த ஆசிரியரின் மீது பணியிட மாற்றம் எனும் நிலையை கடந்து துறைரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். 
 
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வு எழுத முஸ்லீம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்தனர். தேர்வு மைய கண்காணிப்பாளராக பணியாற்றிய சரஸ்வதி என்பவர் மாணவர்களை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்ததோடு ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத கூடாது என்று கட்டளையிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் மன உளைச்சலுடன் ஹிஜாப் ஆடையை அகற்றி விட்டு சீருடையுடன் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தகவலை அறிந்த பெற்றோர்களும் தமுமுகவினரும் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர் போராட்டம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா ஆசிரியர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களின் மத நம்பிக்கைகளில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்தியதோடு தேர்வு கண்காணிப்பாளராக செயல்பட்ட சரஸ்வதியை உடனடியாக வேறு பள்ளிக்கூடத்திற்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதவெறுப்பு அரசியலின் பின்னணியில் ஹிஜாப் அணிய தடை விதித்ததன் காரணமாக பதட்டமான சூழ்நிலை உருவானது. தமிழகம் சமூக நல்லிணக்கத்திற்கு முன்மாதிரியான மாநிலம். இங்கு கல்வி அமைச்சர் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை இல்லை என்று அறிவுறுத்தியும் பல்வேறு முதன்மை கல்வி அலுவலர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிஜாப் அணிந்து வர தமிழகத்தில் எந்தவித தடையுமில்லை என்று பதிலளித்தும் இருக்கின்றனர். அரசின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திய அந்த ஆசிரியரின் மீது பணியிட மாற்றம் எனும் நிலையை கடந்து துறைரீதியான கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Train Fare: ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! டிச.26 முதல் மீண்டும் கட்டணம் உயர்வு- யாருக்கெல்லாம்? எவ்வளவு? முழு விவரம்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
உயிரை துச்சமாய் மதித்து பணியாற்றியோர்; ஒப்பந்த செவிலியர்களை உடனே பணி நிரந்தரம் செய்ய எழும் கோரிக்கை!
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
New Car Launch: ஜனவரியில் களைகட்டப்போகும் கார் சந்தை.. 7 மாடல்கள், வரிசை கட்டும் ப்ராண்ட்கள் - விலை, தேதி?
TVK Vijay alliance: விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
விஜய்யின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட பாஜக.? கூட்டணி பிளானில் திடீர் ட்விஸ்ட்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Embed widget