பாஜகவில் வெடித்த உட்கட்சி பூசல்! அனுபவமில்லாதவர்களுக்கு பதவி: கொந்தளிப்பில் மாவட்ட தலைவர்கள்! தேர்தல் நெருங்கும் நிலையில் சிக்கல்?
தமிழக பாஜக மாவட்டத் தலைவர்களை கலந்தாலோசிக்காமல், அவர்கள் மாவட்டத்தில், அனுபவம் இல்லாதவர்களையும், எதிரானவர்களையும், மாவட்ட பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது, அவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது

தமிழ்நாடு: பாரதிய ஜனதா கட்சியில் அனுபவம் இல்லாதவர்களை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட பாஜக தலைவர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.
அனுபவம் இல்லாதவர்களுக்கு பதவி
தமிழக பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட பொறுப்பாளர்களை சமீபத்தில் டெல்லி தலைமை நியமித்துள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜக மாவட்டத் தலைவர்களை கலந்தாலோசிக்காமல், அவர்கள் மாவட்டத்தில், அனுபவம் இல்லாதவர்களையும், அவர்களுக்கு எதிரானவர்களையும், மாவட்ட பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது, அவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட தலைவர்களை கலந்த ஆலோசிக்காமல் பொறுப்பாளர் நியமனம்
தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல், இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ளது. அதையொட்டி அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக, தமிழக பாஜகவில் சமீபத்தில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும், ஒரு பொறுப்பாளர், ஒரு அமைப்பாளர், ஒரு இணை அமைப்பாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் நியமனம் தொடர்பாக, மாவட்டத் தலைவர்களுடன், கட்சி தலைமை கலந்து ஆலோசிக்கவில்லை.
யார் பேச்சை கேட்பது என்பது தெரியவில்லை?
இதனால், பெரும்பாலான தொகுதிகளில், மாவட்டத் தலைவர், தொகுதி பொறுப்பாளர் தனித்தனியே செயல்பட்டு வருகின்றனர் இதனால் பல்வேறு தொகுதிகளில் உட்க்கட்சி பூசல் பெருமளவு புதகரமாக நிலவி வருகிறது. மாவட்டத்தில் உள்ள நிர்வாகிகள், யார் பேச்சை கேட்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர்கள் கூறுகையில் :
செலவு செய்ய மட்டும் தேடுகிறார்கள்!
பாரதிய ஜனதா கட்சியில் முறைப்படி தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகளால் மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களுக்கு உரிய மரியாதையை, கட்சி மாநிலத் தலைமை வழங்கவில்லை. கூட்டம் நடத்த, செலவு செய்ய மட்டும் மாவட்டத் தலைவர்களை தேடுகின்றனர், மற்ற நிகழ்ச்சிகள், பணிகளில் கண்டு கொள்வதில்லை என தெரிவிக்கின்றார்.
சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழலில், மாவட்டத் தலைவர்களை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக மாவட்ட பொறுப்பாளர், அமைப்பாளர், இணை அமைப்பாளரை நியமித்து உ ள்ளனர். அதிலும் அரசியல் அனுபவம் குறைந்தவர்கள், மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு அனுபவம் மிக்கவர்கள் அவர்களிடம் அறிக்கை தாக்கல் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனால் அதிருப்தியும் நிலவி வருகிறது.
நடிகை குஷ்புக்கு தொகுதியில் அமைப்பாளராக நியமனம்!
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த நடிகை குஷ்பு அவரை அந்த தொகுதியில் அமைப்பாளராக நியமித்துள்ளனர். பொறுப்பாளராக காயத்ரி என்பவரை நியமித்துள்ளனர். அவர் கட்சிக்கு வந்தே மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றன. ஆலந்துார் தொகுதியில் பொறுப்பாளராக நாராயணன் திருப்பதி, அமைப்பாளராக மீனாட்சி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தொகுதியில் மாவட்டத் தலைவர் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மேலிடம் இதேபோல், 16 தொகுதிகளில், மாவட்டத் தலைவர்கள் இணை பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கரூர் தொகுதியில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுவார். அங்கு அனுபவம் இல்லாத மகுடபதி என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, மாநிலத் தலைவரிடம் கேட்டால், கட்சியின் அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் தான் நியமனம் செய்துள்ளார் என்று கூறுகிறார். கேசவ விநாயகனிடம் முறையிட்டால் டெல்லி மேலிடத்தில் பேசுங்கள் என்கிறார். என்ன செய்வது என புரியவில்லை, இவ்வாறு அவர்கள் கூறினர்.
சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதில் சிக்கல்
2026 சட்டமன்றத் தேர்தல் வரும் சூழ்நிலையில் இதுபோன்ற உட்கட்சி பூசலால் தேர்தலை சந்திப்பது மிகவும் கடினமாக இருக்கும் எனவும் மாவட்ட தலைவர்கள் மாவட்ட பொருளாளர்கள் நியமனம் செய்வதில் தலைமை கவனம் கொண்டு செயல்பட்டால் மட்டுமே வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்த்து செயல்பட முடியும் எனவும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.





















