ஊழல் செய்யவே மின்வெட்டு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது - சி.வி சண்முகம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு ஊழல் செய்யவே மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டு வருவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.
விழுப்புரம்: தமிழகத்தில் மின்வெட்டு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டு ஊழல் செய்யவே மின்வெட்டு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் தரமற்ற நிலக்கரியை கொள்முதல் செய்து அதிலும் ஊழல் செய்யவே தமிழக முதலமைச்சர் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றச்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் அதிமுக தலைமை கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் “தமிழகத்தில் இன்றைக்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது மிக, மிக அவசியம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பழங்குடியினருக்கு 19 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 22 சதவீதத்திற்கு மேல் உள்ளதால் ஜாதிவாரி கணக்கெடுப்பு முழுமையாக நடத்தினால், 22 சதவீதம் முழுமையாக கொடுக்க முடியும். இதை கேட்க வேண்டிய திருமாவளவன் வாய் மூடி பேச மறுப்பதாகவும் குலசேகரன் ஆணையத்தை ஏன் அரசு முடக்கியுள்ளது என திராவிட கழக வீரமணி ஏன் கேட்டகவில்லை. உடனடியாக இந்த அரசு முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் முடக்கப்பட்ட ஆணையத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் சமூக நீதியை நாங்கள் காப்பாற்றுவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறி வருகிறார். அதற்காக, இந்தியா முழுவதும் சமூக நீதி கூட்டமைப்பை ஏற்படுத்துவதாக தெரிவிப்பதாக கூறினார். பல்வேறு மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசியல் கட்சியினர், மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளதால் இந்தியா முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் பாரதிய ஜனதா ஆதரவுடன் ஆட்சி நடத்தும் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்போடு சேர்த்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.
சமூக நீதி பற்றி பேசும் முதல்வர் ஸ்டாலின், இன்று வரை ஏன் அதைப்பற்றி வாய்த்திறக்கவில்லை என்றும் சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர உங்களுக்கு தைரியம் இல்லை எனவும் கல்விக்கொள்கை மற்றும் நீட்டை எதிர்க்கிறோம் என பேசும் ஸ்டாலின், இதில் மட்டும் ஏன் மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளதாகவும் தமிழகத்தில் உள்ள 94 சதவீத மக்களுக்கு சமமான இட ஒதுக்கீடு கிடைக்க இந்த அரசு முட்டுக்கட்டையாக உள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பத்து மாதகாலத்திலேயே மின்வெட்டு ஏற்படவில்லை மூன்று மாத காலத்திலேயே மின்வெட்டு ஏற்பட்டது என்றும் இந்தியாவிலே முதன்மையான முதல்வர், சிறந்த முதல்வர், நம்பர் ஒன் முதல்வர் என தன்னை தானே கூறும் முதல்வரின் ஆளுமையில் ஏன் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாகவும் பத்தாண்டுகள் தொடர்ச்சியாக இருந்த அதே கட்டமைப்புகள் தான், அதே மின் உற்பத்தி தான் தமிழகத்தில் இருக்கிறது.
ஆனால், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மூன்றே மாதத்தில் மின்வெட்டு வருவதற்கான காரணம் என்ன உள்நோக்கம் என்ன இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு என கூறிய அவர் கடந்த 2006–11ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில் செய்த, அதே ஊழலை மீண்டும் மின்வெட்டு என்ற பெயரில் தனியாரிடம் அதிக தொகைக்கு மின்சாரத்தை வாங்கியும், வெளி நாடுகளில் இருந்து தரமற்ற நிலக்கரிகளை அதிக விலைக்கு வாங்கி, கொள்ளையடிப்பதற்காக, மின்வெட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார். மின் வெட்டு ஏற்படுவதிலிருந்தே தமிழக அரசு ஒரு திறமையற்ற, கையாளாகாத ஒரு அரசாக உள்ளது என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.