மேலும் அறிய

Hindi Imposition: இந்திக்கு செம்மொழி அந்தஸ்து இல்லாதது ஏன்? என்ன குறை அந்த மொழியில்? தமிழுக்கு மட்டும் எப்படி?

Hindi Imposition: இந்தியாவில் பல கோடி பேர் பேசினாலும் இந்தி மொழிக்கு, செம்மொழி (Classical Language) அந்தஸ்து கிடைக்காதது ஏன் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hindi Imposition: செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கான சில அடிப்படைகள் இந்தி மொழிக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்மொழி சர்ச்சை:

மொழிப்போர் முடிந்து 50 ஆண்டுகளை கடந்த நிலையில், தற்போது மீண்டும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு பிரச்னை வெடித்துள்ளது. மும்மொழிக்கொள்கையை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. எங்களுக்கான நிதியை கொடுக்காமல் நிறுத்தி வைத்தாலும் பரவாயில்லை, இந்தியை கட்டாய பாடமாக்கும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். இதனால், மத்திய மற்றும் மாநில அரசுகள் இடையேயான கருத்து மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் பெரும்பான்மையான மக்களால் இந்தி பேசப்பட்டாலும், தமிழுக்கு கிடைத்த ”செம்மொழி” அந்தஸ்து ஏன் அந்த மொழிக்கு கிடைக்கவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழுந்து இருக்கும். அதற்கான விடையை இங்கே அறியலாம்.

”செம்மொழி” அந்தஸ்து

இந்திய அரசு கடந்த 2004ம் ஆண்டு "செம்மொழி மொழிகள்" என்ற புதிய மொழி வகையை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி இதுவரை, 11 மொழிகளுக்கு இந்திய அரசு செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக தமிழ் மொழிக்கு தான் ”செம்மொழி” அந்தஸ்து வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, அசாமீஸ், பெங்காலி, மராதி, பாலி மற்றும் ப்ராக்ரித் ஆகிய மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

”செம்மொழி” அந்தஸ்திற்கான தகுதிகள்:

மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க சில அடிப்படை தகிகளை கொண்டிருக்க வேண்டும். அதன்படி, 

  • 1,500–2,000 ஆண்டுகள் பழமையான ஆரம்பகால நூல்கள்/பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் உயர் தொன்மையை கொண்டிருக்க வேண்டும்
  • தலைமுறை தலைமுறையாக மதிப்புமிக்க பாரம்பரியமாகக் கருதப்படும் பண்டைய இலக்கியங்கள்/நூல்களின் தொகுப்பை பெற்றிருக்க வேண்டும்
  • வேறொரு பேச்சு சமூகத்திலிருந்து கடன் வாங்கப்படாத அசல் இலக்கிய மரபின் இருப்பு அவசியம்
  • நவீன மொழியிலிருந்து வேறுபட்டதாக இருப்பதால், பாரம்பரிய மொழிக்கும் அதன் பிற்கால வடிவங்களுக்கும் அல்லது அதன் கிளைகளுக்கும் இடையில் ஒரு தொடர்ச்சியின்மை இருக்கலாம்

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்தையும் பூர்த்தி செய்து மூத்த மொழியாக விளங்குவதால் தான், தமிழுக்கு முன்னுரிமை அளித்து செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.

”செம்மொழி” அந்தஸ்திற்கான பலன்கள்:

  • ஒரு மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டவுடன், அந்த மொழியைப் படிப்பதற்கான ஒரு சிறப்பு மையத்தை அமைப்பதற்கு நிதி உதவி பெறுகிறது.
  • சிறந்த அறிஞர்களுக்கான இரண்டு முக்கிய விருதுகளுக்கான வாய்ப்பையும் திறக்கிறது.
  • கூடுதலாக, மத்தியப் பல்கலைக்கழகங்கள் தொடங்கி பல்வேறு கல்வி நிறுவனங்களில் செம்மொழி அறிஞர்களுக்கான தொழில்முறை இருக்கைகளை நிறுவ பல்கலைக்கழக மானியக் குழுவைக் கோரலாம்.

இதன் மூலம் அந்த மோழி மேலும் போற்றப்பட்டு, வளர்ச்சி பெற ஊக்குவிக்கப்படும்.

இந்திக்கு ”செம்மொழி” அந்தஸ்து வழங்கப்படாதது ஏன்?

இந்தி மொழி குறிப்பிடத்தக்க இலக்கிய மரபு மற்றும் நீண்ட வரலாற்றை கொண்டிருந்தாலும், பண்டைய மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட இலக்கிய மரபுகளைக் கொண்ட தமிழ் போன்ற மொழிகளுடன் ஒப்பிடும்போது அது பெரும்பாலும் இளைய மொழியாகவே கருதப்படுகிறது. மேலும், இந்தி மொழியில் சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் உருது உள்ளிட்ட பல மொழிகளின் தாக்கம் காணப்படுகிறது. அரசாங்கம் நிர்ணயித்துள்ள தகுதிகளின்படி, செம்மொழி அந்தஸ்து பெறும் மொழியில் வேறு எந்த ஒரு மொழியின் தாக்கமும் இருக்கக் கூடாது. ஆனால், இந்தியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மற்ற மொழிகளின் கலப்பு உள்ளது. அதன் காரணமாக இந்தியை ”செம்மொழி”யாக அறிவிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அமைச்சர் மூர்த்தி தொகுதியில் களம் காணும் அதிமுக வேட்பாளர்.. யார் இந்த மாங்குளம் மகேந்திரன் !
அமைச்சர் மூர்த்தி தொகுதியில் களம் காணும் அதிமுக வேட்பாளர்.. யார் இந்த மாங்குளம் மகேந்திரன் !
சிவகங்கை அதிமுக வேட்பாளர் PR. செந்தில்நாதன்: 2026 தேர்தலில் மீண்டும் வாய்ப்பு! தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
சிவகங்கை அதிமுக வேட்பாளர் PR. செந்தில்நாதன்: 2026 தேர்தலில் மீண்டும் வாய்ப்பு! தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு என்ன?
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? கேட்ட தொகுதியை முதல்வர் கொடுத்தாரா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? கேட்ட தொகுதியை முதல்வர் கொடுத்தாரா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
TVK Candidate List: விஜய் களமிறங்குகிறார்! தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி: எப்போது? எங்கே வெளியிடுகிறார்?
விஜய் களமிறங்குகிறார்! தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி: எப்போது? எங்கே வெளியிடுகிறார்?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nirmala Sitharaman:
Nirmala Sitharaman: "லாக்டவுன் வதந்திகளை நம்பாதீங்க"மாநிலங்களவையில் நிர்மலா சீதாராமன் அதிரடி விளக்கம்!
TVK Candidate List: விஜய் களமிறங்குகிறார்! தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி: எப்போது? எங்கே வெளியிடுகிறார்?
விஜய் களமிறங்குகிறார்! தவெக வேட்பாளர் பட்டியல் ரெடி: எப்போது? எங்கே வெளியிடுகிறார்?
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? கேட்ட தொகுதியை முதல்வர் கொடுத்தாரா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? கேட்ட தொகுதியை முதல்வர் கொடுத்தாரா? - திருமாவளவன் பரபரப்பு பேட்டி
TVK Vijay: ''காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?'' பிரச்சாரம் அனுமதி மறுப்பு- காட்டமாக விமர்சித்த விஜய்
TVK Vijay: ''காபந்து அரசுக்கு வெட்கமாக இல்லையா?'' பிரச்சாரம் அனுமதி மறுப்பு- காட்டமாக விமர்சித்த விஜய்
Russia Oil Exports: கல்லா கட்டும் புதின்! ரஷ்யாவிற்கு அடித்த ஜாக்பாட்! எகிறும் கச்சா எண்ணெய் விலை..
Russia Oil Exports: கல்லா கட்டும் புதின்! ரஷ்யாவிற்கு அடித்த ஜாக்பாட்! எகிறும் கச்சா எண்ணெய் விலை..
Leema Rose AIADMK: ஆதவ் அர்ஜூனா மாமியார்; அதிமுகவில் ஒரே மாதத்தில் லால்குடி சீட்- யார் இந்த லீமா ரோஸ்?
Leema Rose AIADMK: ஆதவ் அர்ஜூனா மாமியார்; அதிமுகவில் ஒரே மாதத்தில் லால்குடி சீட்- யார் இந்த லீமா ரோஸ்?
ADMK Candidate List : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.! 127 தொகுதிகளுக்கான பெயர்கள் அறிவிப்பு- யார் எந்த தொகுதி.?
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Nainar Nagendran: சாத்தூர் தொகுதியில் போட்டி; அண்ணாமலை கதி என்ன?- பாஜக மேலிடம் சொல்வதற்கு முன்பே அறிவித்த நயினார்!
Embed widget