மேலும் அறிய

RAID அரசியல் ஆக்க கூடாது...பெட்டி பெட்டியாக பணம் கிடைக்கிறது - ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

வருமானவரித்துறை சோதனை உள்ளிட்ட அவற்றை அரசியலாக்க கூடாது என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்

இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான  இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது:

புலனாய் நிறுவனங்களுக்கு என்ன சந்தேகம் இருக்கிறதோ. அதை வைத்து ஆய்வு மேற்கொள்வார்கள். அதை அரசியல் ஆக்கக்கூடாது. இதற்கு முன்னால் சோதனை செய்யப்பட்ட இடத்தில் எதுவும் கிடைக்கவில்லை என்றால்,  குறை கூறலாம் அதை அரசியல் காரணம் என்று கூற கூறலாம்.  ஆனால் பெட்டி பெட்டியாக பணம் கிடைக்கின்ற பொழுது,  உண்மை இருக்கின்றது என்று தானே ஓரளவிற்கு அர்த்தம்.

நேர்மையாக இருந்தால் எதுவும் இல்லை,  கணக்கு வழக்கு சரியாக இருந்தால் பிரச்சனை இல்லை கணக்கில்லாமல் இருந்தால் தான் பிரச்சனை.  நேர்மையாக இருந்தால் சந்தேகப்பட வேண்டியது இல்லையே. தெலுங்கானாவில்   எனக்கு பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் இல்லை.  சில நேரங்களில் புரோட்டோகால் தான் சரியாக கடைபிடிப்பது கிடையாது.  அதை குறித்து நான் கவலைப்படுவது கிடையாது.

என்னை பொறுத்த வரைக்கும் இன்று தமிழ்நாட்டில் தென்பகுதியில் பட்டியல் என  இளைஞர்களுக்கு மிக கடுமையான கொடுமை நடந்து இருக்கிறது. இதுவே உத்தர பிரதேசத்தில் நடந்திருந்தால்  எப்படி பேசுவார்கள் இவர்கள் என நமக்கு தெரியும். அந்த அளவிற்கு  கொடுமையான சூழல் இருக்கும் பொழுது  நம் மாநிலத்தில் இருக்கும் பிரச்சனை பார்க்க வேண்டும். அது பார்க்காமல் அங்கு சரியில்லை இங்கு சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது தவறானது என்பது எனது கருத்து. இவ்வாறு தெரிவித்தார்.

IT Raid:அமைச்சர் எ.வ வேலுவின் வீடு மற்றும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை..

சென்னை, திருவண்ணாமலையில் இருக்கும் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காலை முதல் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான வீடு கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினை அதிரடியாக சோதனையிட்டு வருகின்றனர். 

சோதனை நடைபெறும் இடங்கள்:

  • சென்னை அண்ணா நகர் (மேற்கு) பகுதியில் உள்ள சிண்டிகேட் பேங்க் காலனி 10-வது தெருவில் உள்ள கட்டுமான தொழிலதிபர் கமலாக்கர் ரெட்டி என்பவர் வீட்டில் வருமானவரி துறை சோதனை.
  • சென்னை புரசைவாக்கம் பிரக்லின் ரோட்டில் உள்ள டிவிஎச் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அமித் என்பவரது வீட்டில் சோதனை. இதில் நான்காவது பிளாக்கில் எண் 4152 எண் கொண்ட அமீத் வீட்டில் வருமானவரித்துறை  அதிகாரிகள் சோதனை. அமீத் அரசு புதிதாக கட்டி வரும் கட்டிட வேலைகளுக்கு மின்சாரம் சம்பந்தப்பட்ட பொருட்களை விநோயகம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
  • சென்னை அமைந்தகரை செனாய் நகர் பகுதியில் ஈஸ்ட் பார்க் சாலையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் வருமானவரித்துறை சோதனை.
  • சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் அலுவலக அருகில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பைனான்சியர் ஒருவரின் வீட்டில் சோதனை.
  • கரூர் காந்திபுரம் பகுதியில் உள்ள நிதி நிறுவனம் நடத்தி வரும் சுரேஷ் என்பவரது வீடு அலுவலகத்தில் சோதனை. 
  • மேலும் கரூரில் திமுக முன்னாள் சேர்மன் சக்திவேல் என்பவரது வீட்டிலும் சோதனை.
  • கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பார்சன் சேஷ் நெஸ்ல்  குடியிருப்பில் வசித்து வரும் திமுக  நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை. எ.வ.வேலு உறவினரான மீனா ஜெயக்குமார் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவில் மாநில துணைச் செயலாளராக உள்ளார்.
  • திருவண்ணாமலையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்லூரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget