Gangai Amaren : ”ஏம்மா.. இப்படி பந்தா பண்ற..?" காயத்ரி ரகுராமை வம்பிழுத்த கங்கை அமரன்..!
அண்ணாமலையை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு, இசையமைப்பாளரும், பாஜக ஆதரவாளருமான கங்கை அமரன் பதிலடி கொடுத்துள்ளார்.
Gangai Amaren : அண்ணாமலையை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு, இசையமைப்பாளரும், பாஜக நிர்வாகியுமான கங்கை அமரன் பதிலடி கொடுத்துள்ளார்.
பா.ஜ.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியை விமர்சித்து காயத்ரி ரகுராம் அடுத்தடுத்து டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, அண்ணாமலையை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்ட பாஜக முன்னாள் நிர்வாகி காயத்ரி ரகுராமுக்கு, பிரபல இசையமைப்பாளரும், பாஜக ஆதரவாளருமான கங்கை அமரனுன் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "ஏம்மா ? நீதான் கட்சிய பாடு பட்டு வளத்த மாதிரி பந்தா பண்றியே" என்று காயத்ரி ரகுராமுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
காயத்ரி ரகுராம் சஸ்பெண்ட்
முன்னதாக, பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ஒப்புதலின்படி, ஏற்கனவே கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்த காயத்ரி ரகுராமை, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிப்பதாக, அண்மையில் பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து அண்ணாமலையை தொடர்ந்து விமர்சித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்திருந்தார். இதற்கிடையில், அண்ணாமலைக்கு எதிராக ஏப்ரல் 14ஆம் யாத்திரை மேற்கொள்ள உள்ளதாகவும் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
”கட்டிடம் மட்டுமே வளர்ச்சி"
இந்நிலையில், தற்போது அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்ச்சித்து, காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்," 10 மாவட்டங்களில் பாஜக கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜகவுக்கு நிச்சயமாக உள்கட்டமைப்பில் (கட்டிடம் மட்டும்) வளர்ச்சி. ஆனால், அண்ணாமலை தலைமையில் உறுப்பினர்கள் வெளியேறுகிறார்கள். மதுரை எய்ம்ஸ் கட்டிடத்திற்கும் அதே முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என நம்புகிறேன், கூடிய விரைவில் கட்டப்படும் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
ஏம்மா ?
— gangaiamaren@me.com (@gangaiamaren) March 11, 2023
நீதான் கட்சிய பாடு பட்டு வளத்த மாதிரி பந்தா பண்றியே நீ டைரக்ட் பண்ணிருக்ர படமே ஒன்னால ஒழுங்கா பண்ணத்தெரியல ? நம்மள விட புத்திசாலிங்க கிட்ட பேசி மாட்டிக்காத இது நான் உங்ப்பாவோட ஒண்ணா வளந்த உன் சித்தபாங்கற முறையில சொல்றேன் …. https://t.co/BypFridb22
கங்கை அமரன் பதிலடி
காயத்ரி ரகுராமின் இந்த ட்விட்டுக்கு பிரபல இசையமைப்பாளரும், பாஜக ஆதரவாளருமான கங்கை அமரன் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ”ஏம்மா ? நீதான் கட்சிய பாடு பட்டு வளத்த மாதிரி பந்தா பண்றியே நீ டைரக்ட் பண்ணிருக்ர படமே ஒன்னால ஒழுங்கா பண்ணத்தெரியல ? நம்மள விட புத்திசாலிங்க கிட்ட பேசி மாட்டிக்காத இது நான் உங்ப்பாவோட ஒண்ணா வளந்த உன் சித்தபாங்கற முறையில சொல்றேன்" என்று அறிவுறுத்தியுள்ளார்.
"ஐயோ அங்கிள்"
கடுப்பாகி ட்விட் செய்த கங்கை அமரனுக்கு பதில் ட்விட் செய்துள்ளார் காயத்ரி ரகுராம். அதில், ”ஐயோ uncle நான் கட்சியை வளர்க்கவில்லை. என்னால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியாது. முதலில் கட்சி நமக்குள் வளர வேண்டும். ஆனால் அது என்னைப் பொருத்தவரை வளரத் தவறிவிட்டது. அதனால் தான் கட்சியை விட்டு வெளியேறினேன். நான் நல்ல இயக்குனராகவும் இல்லை, நான் பந்தா செய்ய பெரிய பிரபலம் இல்லை. நான் என் தந்தையைப் போல ஒரு உதவியாளர் மற்றும் ஒரு நல்ல உள்ளம் என்னிடம் உள்ளது.
அதே வழியில் நான் மக்களுக்கு உதவி செய்து பாதுகாத்தால் .. இது நான் நிறைவேற்றினால் அது எனக்கு மிகப்பெரிய சாதனை. I’m no one but I will be voice of many. அது அப்பா மீதான வாக்குறுதி. தயவு செய்து யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள் uncle" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.