GK Mani : “சகுனி வேலை பார்த்த ஜி.கே.மணி?” கொதிப்பில் பா.ம.க இளைஞர்கள்..!
”பாமக-வை இனி வழிநடத்த அன்புமணியால் மட்டுமே முடியும். ஜி.கே.மணி கையில் கட்சி போனால், அவர் சல்லி, சல்லியாக உடைத்து நொறுக்கிவிடுவார்”

தலைவர் பதவி பறிக்கப்பட்டு, அதனை அன்புமணிக்கு வழங்கினர் பாமக நிறுவனர் இராமதாசு. அந்த நொடி முதல், அன்புமணி மீது அளவிடமுடியாத வெறுப்பை தனது நெஞ்சுக்குள்ளேயே கருவம் கட்டிக்கொண்டார் ஜி.கே.மணி. நேரம் வாய்க்கும் போதெல்லாம், இராதாசிடம் அன்புமணி பற்றி தூபம் போடுவது, அவரது செயல்பாடுகள் குறித்து கொளுத்திப் போடுவது என காய்நகர்த்தி வந்த ஜி.கே.மணிக்கு, பாமக பொதுக்குழுக் கூட்டம் வராது வந்த மாமணியாய் கிடைத்தது. அதில்தான், இராமாதாசும், அன்புமணியும் நேரடியாக கருத்து மோதலில் ஈடுபட்டனர். அப்போதுக் கூட இராமதாசுக்கு ஆதராக நிற்பதுபோல நடித்து, அன்புமணியை கட்சி பதவியில் இருந்து நீக்க கங்ககணம் கட்டிக்கொண்டார் ஜி.கே.மணி. அவருடைய சகுனி வேலையால்தான், இப்போது ராமதாசுக்கும் – அன்புமணிக்கும் இடையே பகை மேகம் சூழ்ந்துள்ளது.
இதை சொல்வது பாமக தொண்டர்கள்
இப்படியெல்லாம் சொல்வது வேறு யாருமல்ல, அந்த கட்சியின் தொண்டர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலமாக இருக்கும் இளைஞர்களே ஜி.கே.மணிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொதித்து கிடக்கிறார்கள். அய்யாவிற்கும் சின்னய்யாவிற்கும் இடையே பகையை ஏற்படுத்திய கருங்காலியே ஜி.கே.மணிதான் என அவர்கள் ஆவேமடைந்து பதிவிட்டு வருகிறார்கள்.
பாமக வின் சகுணி ஜி.கே.மணி .
— இரா.பெரியசாமி சிறைமீட்டார் (@RVJ0306) April 24, 2025
ஜி.கே.மணி பாமக வில் இருக்கும் வரை பாமக விற்கு பின்னடைவு தான்.
கருனாநிதியின் இரகசிய ஒற்றன் தான் இந்த ஜி.கே.மணி.
15 வருடத்திற்கு முன்பே தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கி இருந்தால் இன்று பாமக வலுவான கட்சியாக இருந்திருக்கும். pic.twitter.com/3wkYTzdzWL
முகுந்தனை கொம்பு சீவிவிட்ட ஜி.கே.மணி
தன்னுடைய பதவியை பிடுங்கிய அன்புமணியை நேரம் பார்த்து காலி செய்யும் செயல்பாடுகளில் ஜி.கே.மணி ஈடுபட்டு வந்ததாகவும், அதற்காகவே இராமதாஸ் மூலம் அவரது மகளுடைய மகனான முகுந்தனை இளைஞரணி பதவிக்கு கொண்டுவர ஜி.கே.மணி காய் நகர்த்தியதாகவும், தனிப்பட்ட முறையில் முகுந்தனை போய் இராமதாசை சந்தித்து பேசச் சொல்லி அவருக்கு கொம்பு சீவி விட்டதே ஜி.கே.மணிதான் என்றும் கொந்தளிக்கின்றனர் பாட்டாளி சொந்தங்கள்
தேர்தல் நெருங்கும் நேரத்தில் உட்கட்சி மோதல் – சோகத்தில் தொண்டர்கள்
ஜி.கே.மணி தன்னுடைய வன்மத்தை தீர்த்துக்கொள்ள தேர்தல் நேரத்தை பயன்படுத்துவதாகவும், இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் உட்கட்சி குழப்பத்தை அவர் ஏற்படுத்தி அதில் ஜி.கே.மணி குளிர்காய நினைப்பதாகவும் பாமகவினர் பதிவிட்டு வருகின்றனர்.
பாமகவில் இப்படி நிறுவனரும் – தலைவரும் சண்டையிட்டுக்கொண்டால், நம்முடைய கட்சியின் பலமே, பலவீனமாக மாறிவிடும் என்பதை கூட நினைத்துப் பார்க்காத ஜி.கே.மணி, அன்புமணியை ஓரங்கட்டி, கட்சியை மீண்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள அவர் ஆடும் சூதாட்டமே இப்படியான மோதல் போக்கு இருவருக்குள்ளும் ஏற்பட காரணம் என கட்சியின் மூத்த நிர்வாகிகளே வெளியில் சொல்ல முடியாமல் ஆதங்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் இல்லை
— செந்தூரான் SayYesToWomenSafety & AIADMK (@e9NIslv0uktMwJz) April 24, 2025
~ ஜி கே மணி வேதனை 😀
மணிக்கு ஏதோ தேவையிருக்கிறது போலத் தெரிகிறது 😄#மாம்பழம் pic.twitter.com/WYGILBESOW
அன்புமணிக்கு ஆதரவாக இருக்கும் பாமக தொண்டர்கள்
கள எதார்த்தத்தையும் தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு முடிவுகளை எடுப்பவருமாக அன்புமணி இருப்பதாலும் கட்சியில் திறமையாக பணியாற்றும் இளைஞர்களுக்கு அவர் வாய்ப்பு கொடுத்து வருவதாலும் அதனை தாங்கிக் கொள்ள முடியாத ஜி.கே.மணி, கட்சியின் சீனியர்களை தூண்டி விட்டு அவர்கள் மூலம் மருத்துவர் ராமதாசை அன்புமணிக்கு எதிராக மடைமாற்றம் செய்துள்ள்தாக புகார் எழுந்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை தொடர்ந்து வழிநடத்தவும், அந்த கட்சியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் அன்புமணியால் மட்டுமே இனி முடியும் என்றும், ஜி.கே.மணி கையில் கட்சி சென்றால் அவர் சல்லி, சல்லியாக இந்த கட்சியை நொறுக்கிவிட்டு போய்விடுவார் என்றும் கவலைப்படுகின்றனர் பாமக இளைஞர்கள்.
பாமக வின் சகுணி ஜி.கே.மணி .
— இரா.பெரியசாமி சிறைமீட்டார் (@RVJ0306) April 24, 2025
ஜி.கே.மணி பாமக வில் இருக்கும் வரை பாமக விற்கு பின்னடைவு தான்.
கருனாநிதியின் இரகசிய ஒற்றன் தான் இந்த ஜி.கே.மணி.
15 வருடத்திற்கு முன்பே தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்கி இருந்தால் இன்று பாமக வலுவான கட்சியாக இருந்திருக்கும். pic.twitter.com/3wkYTzdzWL
ஜி.கே.மணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இதனை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டுமானால், ஜி.கே.மணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் தலையிடாதவாறு ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





















