ஒற்றைத் தலைமைக்கு முன்மொழியப்பட்டதா சசிகலா பெயர்? அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் நடந்தது இது தான்!
‛அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்ப்பார்ப்பது ஒற்றைத்தலைமை தான். அந்த ஒற்றைத்தலைமை யார்...’ -ஜெயக்குமார்
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றலாம் என மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினர். அப்பொழுது ஒரு தரப்பினர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையேற்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.
மேலும் ஒரு சிலர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெளியே ஒரு தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரி முழக்கமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உண்மையில் ஒற்றை தலைமை கோஷம் எழுப்பப்பட்டதா என்று முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் பேசினார்கள். அதிமுக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி இப்போது எதிர்ப்பார்ப்பது ஒற்றைத்தலைமை தான். அந்த ஒற்றைத்தலைமை யார் என்பதை கட்சி முடிவு செய்யும். யார் ஒற்றை தலைமையாக வருவார்கள் என்பது சஸ்பென்ஸ் என்று தெரிவித்தனர்.
#JUSTIN | சசிகலா யார்? - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் https://t.co/wupaoCQKa2 | #Jayakumar #AIADMK #sasikala #Tamilnadu #Politics pic.twitter.com/u9KfWsKfNd
— ABP Nadu (@abpnadu) June 14, 2022
தொடர்ந்து சசிகலா குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, சசிகலா யார்? அவரைப்பற்றி ஏன் விவாதிக்க வேண்டும். கட்சிக்கு தொடர்பில்லாத சசிகலா குறித்து ஏன் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதை பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர் என்று தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவிற்குப் பின் சசிகலாவின் அதிமுக பயணம் :
ஜெயலலிதா மறைவிற்குப் பின் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தில் சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக ஒரு தரப்பினர் தேர்வு செய்தனர். பின்னர், பிரிந்து கிடந்த இபிஎஸ்-ஓபிஎஸ் அணி இணைந்த பின், சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர். அதுமட்டுமின்றி, சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவும் சிறைக்குச் சென்றதால் எந்த இடையூறும் இன்றி, அதிமுகவையும், ஆட்சியையும் இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டணி வழிநடத்தியது.
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா விடுதலையாகி வந்ததற்கு பின், நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு இபிஎஸ்-ஓபிஎஸ் தான் காரணம் எனக்கூறி, அதிமுகவின் தலைமையை ஏற்க சசிகலா புறப்பட்டார். சட்டரீதியாக அவர் மேற்கொண்ட நடவடிக்கையும் அவருக்கு பின்னடைவை கொடுக்க, எதிர்கட்சியான பிறகு இரட்டை தலைமையிலான ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டணியே அதிமுகவை வழிநடத்தியது. இருப்பினும், அதிமுக பொதுச் செயலாளர் என்றே சசிகலா தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்