மேலும் அறிய

’எடப்பாடி பழனிசாமி வடிகட்டிய பொய்களை கூறி வருகிறார்’- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்

''எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை விடுவதற்கு செய்தி இல்லை. ஆகையால் அறிக்கை விடும் போது சிந்தித்து அறிக்கை விட வேண்டும்''

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி கடலூர் சொரக்கல்பட்டில் நடந்தது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கடலூர் சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் முன்னிலை வகித்தார்.
 
’எடப்பாடி பழனிசாமி வடிகட்டிய பொய்களை கூறி வருகிறார்’- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
 
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மழைநீர் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகள், பாதாள சாக்கடைகள் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு மற்றும் உயிர்சேதம் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் மாபெரும் தூய்மை பணி முகாம் தொடங்கி நடந்து வருகிறது.

’எடப்பாடி பழனிசாமி வடிகட்டிய பொய்களை கூறி வருகிறார்’- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
 
இந்த பணி வருகிற 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கடலூர் நகராட்சியில் 151 கிலோ மீட்டர் தூரம் கால்வாய் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டு, 16 வாகனங்கள் மூலம் தினசரி தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிகளை மேற்பார்வையிட பொறுப்பு அலுவலர்களை நியமித்து, மழைநீர் தேங்கும் மிகவும் அபாயகரமான பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்தும், பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர வடிகால், சிறிய வடிகால் என வகைப்படுத்தி தூய்மை பணிகளுக்கு தேவையான எந்திரங்களை பயன்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை முறையாக அணிந்து கொண்டு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் தூய்மை பணி மேற்கொள்ளும் இடங்களில் ஆக்கிரமிப்பு இருப்பின், முன்னதாக உரியவர்களுக்கு தெரிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
’எடப்பாடி பழனிசாமி வடிகட்டிய பொய்களை கூறி வருகிறார்’- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
 
மேலும் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் சில இடங்களில் இயங்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் எங்கு நெல் கொள்முதல் நிலையம் இயங்கவில்லை என்பதனை அவர் பார்த்தார் என்று தெரியவில்லை. கடலூர் மாவட்டத்தில் எந்தவொரு கொள்முதல் நிலையங்களும் மூடப்படவில்லை. தற்போது 114 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால் அவர்கள் ஆட்சியில் கடந்த ஆண்டு இந்த சமயத்தில் 68 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நிலையம் இயங்கியது. அதனால் எடப்பாடி பழனிசாமி நெல் கொள்முதல் நிலையம் குறித்து வடிகட்டின பொய் கூறி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை விடுவதற்கு செய்தி இல்லை. ஆகையால் அறிக்கை விடும் போது சிந்தித்து அறிக்கை விட வேண்டும் என  கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget