மேலும் அறிய

EPS Challenge Stalin: இந்த சாதனையை பேச நான் தயார்.. நீங்க விவாதிக்க தயாரா? முதலமைச்சருக்கு ஈபிஎஸ் நேரடி சவால்..

அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால சாதனைகள் குறித்து பேச நான் தயார், தி.மு.க.வின் 18 மாத சாதனை குறித்து பேச நீங்கள் தயாரா? என்று மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் நிருபர்களைச் சந்தி்த்தார். அப்போது, அவர் கூறியதாவது,

மு.க.ஸ்டாலினுக்கு சவால்:

"அ.தி.மு.க.வின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் தமிழ்நாடு பாதாளத்திற்கு சென்றுவிட்டது என்ற குற்றச்சாட்டை முதலமைச்சர் சுமத்தியிருக்கிறார். அதோடு, 10 ஆண்டுகால ஆட்சியில் தொழில்வளம் வரவில்லை என்றும், அதனால் தமிழ்நாடு ஏற்றம் பெறவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற விவரத்தை முதலமைச்சருக்கு சொல்ல விரும்புகிறேன். அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்க எங்கு அழைத்தாலும் நான் வரத் தயார். கடந்த 18 மாத தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து பேச நீங்கள் தயாரா..?

தமிழகத்திலே சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டது. நான் முதல்வராக பதவியேற்றதுடன் தனியார் ஆங்கில நாளேடு இந்தியாவிலே சிறப்பாக சட்டம் ஒழுங்கு செயல்படும் மாநிலமாக தமிழ்நாடை தேர்வு செய்து விருது வழங்கியது. குடியரசுத்தலைவர் கைகளால் அந்த விருதை வாங்கினேன். இதே சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதற்கு சான்று. யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு தமிழகம் அமைதிப்பூங்காவாக செயல்பட்டது.

படுபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு:

ஆனால், இன்றைய நிலை என்ன? 3 மாதங்களுக்கு முன்பு சென்னை சுற்றுவட்டார பகுதியில் 36 மணி நேரத்தில் 15 கொலைகள் நடைபெற்றதாக தெரிவித்தேன். உடனே, காவல்துறையினர் 36 மணிநேரத்தில் 12 கொலைகள்தான் நடைபெற்றுள்ளது என்று கூறினர். 36 மணிநேரத்தில் 12 கொலைகள் நடைபெற்றால் சட்டம், ஒழுங்கு எப்படி இருக்கிறது? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். எந்தளவு சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்று எண்ணிப்பார்க்க வேண்டும். சட்டம் –ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. சட்டம் ஒழுங்கு படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. சிறப்பாக செயலாற்றி வருகிறது. தமிழ்நாடு போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. காவல்துறை மானியத்தில் முதல்வரே அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார். 2 ஆயிரத்து 138 பேர் பள்ளி, கல்லூரிகள் பகுதியிலே கஞ்சா விற்பனை செய்ததாக கண்டறியப்பட்டுள்ளது என்றார். ஆனால், கைது செய்யப்பட்டவர்கள் 148 பேர். அப்படி என்றால் மற்றவர்களை ஏன் கைது செய்யவில்லை?

திறமையற்ற முதலமைச்சர்:

இந்த கேள்வியை சட்டமன்றத்தில் எழுப்பியபோது முதல்வரிடம் பதில் வரவில்லை. ஏன் அனைவரையும் கைது செய்யவில்லை? ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். இதனால்தான், காவல்துறையினரால் போதைப்பொருள் விற்பனை, நடமாட்டத்தை நிறுத்த முடியவில்லை. ராமநாதபுரத்தில் 360 கோடி மதிப்பிலான கொகைன் என்ற போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது. அதில் தி.மு.க. கவுன்சிலருக்கு தொடர்பு இருப்பதாக செய்தி வந்துள்ளது. கண்டுபிடிக்க முடியாமல் எவ்வளவு போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது? விற்பனை செய்யப்பட்டுள்ளது? என்பது இந்த முதலமைச்சருக்கு தெரியவில்லை. ஏனென்றால் இவர் பொம்மை முதலமைச்சர், திறமையற்ற முதலமைச்சர்.

போதைப்பொருளை தடுக்க இவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க. பொதுக்குழுவிலே முதல்வர் மு.க.ஸ்டாலின், நம் கட்சிக்காரர்களால் நான் காலையில் கண்விழிக்கும்போது என்ன நடக்குமோ? என்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன் என்றார். இதை அவரே சொல்லியிருக்கிறார். இதனால், தி.மு.க.வினர் போதைப்பொருள் விவகாரத்திலும், அராஜகத்திலும் ஈடுபட்டது தெள்ளத் தெளிவாகிறது.

கடமை தவறினார்:

தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்குவது சிலருக்கு வயிறு எரிகிறது என்றும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இன்று தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் குற்றங்கள் அன்றாட நிகழ்வாக நடக்கிறது. எதிர்க்கட்சி சொல்வதாக முதல்வர் பேசுகிறார். எதிர்க்கட்சி என்ற முறையில் தமிழகத்தின் பிரச்சினைகள் இருப்பதை வெளியிடுகிறேன். அதில் உண்மைத் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதுதான் முதல்வரின் கடமை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் கடமையில் இருந்து தவறிக்கொண்டிருக்கிறார்.

கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். 2011ல் இருந்து 2021 வரை அரசு ஆட்சி நடைபெற்ற வரை தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணிக்காக்கப்பட்டது. எங்கு போயி கேட்டாலும் சொல்வார்கள். வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்தோம். வேலைவாய்ப்பை ஏற்படுத்தினோம். தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தினோம். தமிழ்நாட்டில் புயல், வெள்ளம் என எது வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்."

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget