மேலும் அறிய

Fact Check: ஓபிசி இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களை சேர்த்தது கர்நாடக காங்கிரஸ் அரசா? பிரதமர் மோடி கூறுவது உண்மையா?

Muslim Reservation: கர்நாடக ஓபிசி பட்டியலில் இஸ்லாமியர்களை சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கியது காங்கிரஸ் அரசு என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது உண்மையா? பொய்யா? என்பதை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Muslim Reservation: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போவது யார் என்பதை இந்த தேர்தல்தான் முடிவு செய்யபோகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில், நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

இஸ்லாமியர்களை டார்கெட் செய்கிறாரா பிரதமர்?

இதில், கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. கடந்த 2019 மக்களவை தேர்தலை போன்று கர்நாடகாவில் கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பா.ஜ.க. முயற்சித்து வருகிறது. ஆனால், போட்டி இந்த முறை மிக கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், கர்நாடகாவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பட்டியலில் இஸ்லாமியர்களை சேர்த்து இடஒதுக்கீடு வழங்கியது கர்நாடக காங்கிரஸ் அரசு என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர், "ஓபிசி-க்களின் மிகப்பெரிய எதிரி காங்கிரஸ். கர்நாடகாவில் அனைத்து முஸ்லிம் சாதியினரையும் ஓபிசிக்களுடன் சேர்த்து பின்வாசல் வழியாக மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அளித்தது. இந்த நடவடிக்கையானது ஓபிசி சமூகத்தின் இடஒதுக்கீட்டில் கணிசமான பகுதியைப் பறித்துவிட்டது" என்றார்.

இஸ்லாமியர்கள் தொடர்பாக தொடர்ந்து சர்ச்சையாக பேசி வரும் பிரதமர், கர்நாடக காங்கிரஸ் அரசு குறித்து பேசியிருப்பது உண்மைக்கு புறம்பானது என்பது தெரிய வந்துள்ளது.

பிரதமர் மோடி சொன்னது பொய்யா?

ஏன் என்றால், கர்நாடகாவில் ஓபிசி இட ஒதுக்கீட்டின் கீழ் இஸ்லாமியர்களை முதன்முறையாக கொண்டு வந்தது தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தள அரசாகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் மதச்சார்பற்ற ஜனதா தளம், தற்போது பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.  

கர்நாடகாவில் கடந்த 1995ஆம் ஆண்டு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பிரிவில் தேவகவுடா தலைமையிலான அரசு முஸ்லிம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. கடந்த 1995ஆம் ஆண்டு பிப்ரவரி 14, இது தொடர்பான ஆணையை கர்நாடக அரசு பிறப்பித்தது.

வரலாறு கூறுவது என்ன?

ஓபிசி பிரிவில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சின்னப்பா ரெட்டி ஆணையம் பரிந்துரை செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், கடந்த 1994 ஆம் ஆண்டு, ஏப்ரல் 20 மற்றும் ஏப்ரல் 25ஆம் தேதி, முஸ்லிம்கள், பௌத்தர்கள், கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என அடையாளம் கண்டு அவர்களுக்கு 6 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என வீரப்ப மொய்லி தலைமையிலான காங்கிரஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டது.

முஸ்லீம்களுக்கு நான்கு சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பௌத்தர்கள் மற்றும் பட்டியலினத்தவருக்கு இரண்டு சதவீதம் ஒதுக்கப்பட்டது. இந்த இடஒதுக்கீடு அக்டோபர் 24, 1994 முதல் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டது.

ஆனால், இந்த இடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 1994ஆம் ஆண்டு, செப்டம்பர் 9ஆம் தேதி, காங்கிரஸ் அரசின் முடிவுக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பட்டியல் சாதியினர், பழங்குடியினர், ஓபிசிக்களுக்கு வழங்கப்படும் ஒட்டுமொத்த இடஒதுக்கீடு வரம்பை 50 சதவீதமாக குறைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது யார்?

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்துவதற்கு முன்பே அரசியல் நெருக்கடிகள் காரணமாக வீரப்ப மொய்லி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 1994ஆம் ஆண்டு, டிசம்பர் 11ஆம் தேதி கவிழ்ந்தது. கடந்த 1994ஆம் ஆண்டு, டிசம்பர் 11ஆம் தேதி தேவகவுடா முதலமைச்சராக பதவியேற்றார்.

கடந்த 1995ஆம் ஆண்டு, பிப்ரவரி 14ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின்படி, இடஒதுக்கீடு தொடர்பாக முந்தைய அரசு எடுத்த  முடிவை திருத்தங்களுடன் தேவகவுடா அமல்படுத்தினார். கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு வேலைகளில் நான்கு சதவீத இடங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட்டது.

கடந்த 2006 ஆம் ஆண்டு, மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பாஜக இணைந்து கூட்டணி அரசாங்கம் அமைத்தது. இதைத் தொடர்ந்து, எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசாங்கம் 2008 இல் அமைந்தது. இருப்பினும், இரண்டு பதவிக் காலங்களிலும், இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முறையில் பாஜக அரசு, திருத்தம் எதுவும் மேற்கொள்ளவில்லை.

கடந்த 2019ஆம் ஆண்டு, பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு முறையை ரத்து செய்வதாகவும் அதற்கு பதில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 10 சதவிகித இடஒதுக்கீட்டில் இஸ்லாமியர்களை சேர்கப்பதாகவும் பாஜக அரசு அறிவித்தது. ஆனால், இது தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Embed widget