TN Election 2021: துரைமுருகனுக்கு டஃப் கொடுக்கும் வி.ராமு? யார் இவர்?
ஆண் வாக்காளர்கள் 1,19,583, பெண் வாக்காளர்கள் 1,27,813. மூன்றாம் பாலினத்தவர்கள் 32 என மொத்தம் 2,47,428 வாக்காளர்கள் உள்ளனர்.
காட்பாடி சட்டமன்றத் தேர்தலில் சமீபத்திய நிலவரப்படி, திமுக வேட்பாளர் துரைமுருகன், அதிமுக வேட்பாளர் வி. ராமுவை விட 87 வாக்குகள் முன்னிலையில் உள்ளார .
களநிலவரம் என்ன?
இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,19,583, பெண் வாக்காளர்கள் 1,27,813. மூன்றாம் பாலினத்தவர்கள் 32 என மொத்தம் 2,47,428 வாக்காளர்கள் உள்ளனர். காட்பாடி தொகுதியைப் பொறுத்தவரை சுற்றுகளின் எண்ணிக்கை 25 வரை செல்லலாம் என்று கணிக்கப்படுகிறது. தற்போது வரை 14 வாக்கு சுற்றுகள் முடிவடைந்துள்ளன. முதல் 9 சுற்றுகளில் அதிமுக வேட்பாளருக்கு சாதகமாக அமைந்திருந்தாலும், அதற்கடுத்தடுத்த சுற்றுகளில் துரைமுருகன் சற்றே முன்னிலை கண்டு வருகிறார்.
இன்னும் 1 லட்சம் வரையிலானவாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், சேண்பாக்கம், காந்திநகர், விருதம்பட்டு போன்ற சிட்டி பகுதிகளில் பதிவான வாக்குகளும், சிறுபான்மையினர் பகுதிகளில் பதிவான வாக்குகளும் இன்னும் எண்ணப்படமால் உள்ளது. எனவே, அடுத்த நான்கு சுற்று வாக்குப்பதிவு எண்ணிக்கை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
வி. ராமு:
காட்பாடி தொகுதியில் 1996, 2001, 2006, 2011, 2016 என தொடர்ச்சியாக ஐந்து சட்டமன்றத் தேர்தலில் துரைமுருகன் வெற்றி வேட்பாளாராக உள்ளார். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் 20,000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றார். 1996 சட்டமன்றத் தேர்தலில் 40,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த துரைமுருகனின் கோட்டையாக காட்பாடி தொகுதி விளங்கி வருகிறது. 2011, 2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வன்னியர் சமூகத்தைச் சார்ந்த வேட்பாளரை களமிறக்கியது. 2011 சட்டமன்றத் தேர்தலிலும் காட்பாடி தொகுதியில் கடும் போட்டி நிலவியது. அதிமுக வேட்பாளரை விட வெறும் இரண்டாயிரம் கூடுதல் வாக்குகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். 2016 சட்டமன்றத் தேர்தலுடன் தான் போட்டியிடப் போவதில்லை என துரைமுருகன் முன்னதாக அறிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு மேலாக காட்பாடி சட்டமன்ற உறுப்பினராக ஒருவரே இருந்து வருவதால், திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கான அரசியல் வாய்ப்பு அங்கு உருவாகாமல் இருந்தது. மேலும், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தொகுதியில் துரைமுருகனின் வாரிசான கதிர் ஆனந்துக்கு சீட் வழங்கப்பட்டது. கட்சித் தொண்டர்கள் மத்தியிலும ஒரு சோர்வு நிலை தென்பட்டது. இந்த தகவல் திமுக தலைமைக்கும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், வெகுஜன மக்களிடத்திலும் துரைமுருகனுக்கு எதிரான மனநிலையே காணப்படுகிறது. குறிப்பாக , கட்பாடி சந்திப்பில் புதிய ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கான முயற்சிகளை துரைமுருகன் விரைவுப்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.
நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், துரைமுருகனுக்கு எதிராக அதிமுக வி. ராமுவை களம் இறக்கியது. அதிமுக மாவட்டச் செயலாளரான வி.ராமு, வேலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவுள்ளார். காட்பாடியை சுற்றிய பல கிராமங்களிலும், திருவலம் நகர பஞ்சயாத்து உள்ளிட்ட சில பகுதிகளிலும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக இருப்பதால் ராமுவை அதிமுக களம் இறக்கியுள்ளது.