மேலும் அறிய

"போலிகளையும், பொய்யர்களையும் நம்பி ஏமாந்துவிடாதீர்கள்" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை புறம் தள்ளிவிட்டு ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எனவே பாசிசம், அடிமைத்தனம் இல்லாமல், முற்போக்கு, சுயமரியாதை உடன் செயல்பட்டு வருவது தான் திராவிடமாடல் அரசு.

சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினம் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கூட்டுறவுத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ், 26700 பயனாளிகளுக்கு, 222 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்,” திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 70 சதவீதம் வாக்குறுதிகளை தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். ஆட்சி பொறுப்பேற்ற முதல் கோப்பாக பெண்களுக்கு இலவசமாக பேருந்து பயண கோப்பில் கையெழுத்திட்டார். இதன்மூலம் பெண்களுக்கான தினசெலவு என்பது மிச்சமாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 216 கோடி கட்டணமில்லா பயணத்தை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் மட்டும் 14.58 கட்டணமில்லா பயணத்தை பெண்கள் மேற்கொண்டுள்ளனர். பலகோடி கடன் வைத்துவிட்டு பிற்போக்குத்தனமான அரசு என்பதை மட்டும் தான் கடந்த அரசு விட்டுச் சென்றது. திமுக பொறுப்பேற்றபோது கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்தது. எந்தவித உயிர்சேதமும் இல்லாமல் தமிழக முதல்வர் மக்களை காப்பாற்றினார். மேலும் மக்களை தேடி மருத்துவம் மூலம் வீடு தேடி சென்று ஒரு கோடி பேருக்கு மேல் மருந்து பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவிகள் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை வாங்கி சுதந்திரமாக படித்து வருகின்றனர். ஏற்கனவே ஒரு லட்சத்து 14 ஆயிரம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்து நான்காயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால் கல்லூரி படிப்பு புதிதாக சேர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் காலை உணவு திட்டத்தின் மூலம் 1.16 லட்சம் குழந்தைகள் பயன்படுத்துகின்றனர். இது அனைத்து அரசு பள்ளிகளுக்கும் தமிழக முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேபோல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. பால் கொள்முதலில் சேலம் மாவட்டம் தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக விளங்குகிறது. சேலம் மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் கொடுத்துள்ளார். இன்னும் திமுக ஆட்சி நிறைவு பெற 3 ஆண்டுகள் உள்ளது. இதன்மூலம் பல்வேறு திட்டங்களை முதல்வர் கொண்டு வருவார் தமிழக முதல்வரின் சிறப்பான செயல்பாட்டால் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் செய்ய முடியவில்லை. மக்கள் பணியே முதல்பணி என்ற வகையில் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆவணப்படம் ஒன்றை வெளியிட்ட போதே எதிர்க்கட்சிகள் பயந்துவிட்டது. தமிழக முதல்வர் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை புறம் தள்ளிவிட்டு ஆட்சியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். எனவே பாசிசம், அடிமைத்தனம் இல்லாமல், முற்போக்கு, சுயமரியாதை உடன் செயல்பட்டு வருவது தான் திராவிடமாடல் அரசு. எனவே போலிகளையும் பொய்யர்களையும் நம்பி ஏமாற வேண்டாம்” என்று பேசினார்.

இதற்கு முன்பாக பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ”அமைச்சர் உதயநிதி உங்களுடைய பணி மேலும் சிறப்பாக இருக்க வேண்டும், சிறப்பாக இருக்கும், சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். உங்களை நம்பி நாடும், இயக்கமும் இருக்கிறது. நீங்கள் நினைப்பது போன்று மிகப் பெரிய வெற்றியை இந்த மாவட்டத்தில் பெற்று தருவோம் உழைப்போம்” என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை, மாவட்ட அளவிலான போட்டிகளை இளைஞர்கள் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு! பெண்களுக்காக வருகிறது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு! பெண்களுக்காக வருகிறது புது சட்டம்!
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு! பெண்களுக்காக வருகிறது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு! பெண்களுக்காக வருகிறது புது சட்டம்!
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
Los Angeles Wildfires: நரகமாய் மாறிய லாஸ் ஏஞ்சல்ஸ்..! கட்டுக்கடங்காத காட்டு தீ, உயிர் பயத்தில் மக்கள், முடிவு எங்கே?
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை; ஏன்? - நிதி நிலைமையை லிஸ்ட் போட்ட அமைச்சர்!
பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை; ஏன்? - நிதி நிலைமையை லிஸ்ட் போட்ட அமைச்சர்!
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - சீமானை தாக்கிய கனிமொழி!
சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள் - சீமானை தாக்கிய கனிமொழி!
Rasipalan Today January 10:  தனுசுக்கு அமைதி தேவை; மகரத்திற்கு பொறுப்பு அதிகரிக்கும் !
Rasipalan January 10: தனுசுக்கு அமைதி தேவை; மகரத்திற்கு பொறுப்பு அதிகரிக்கும் !
Embed widget