மேலும் அறிய

DMK Manifesto: மாதவிடாய் விடுமுறை; ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடன் - மகளிருக்கான தி.மு.க.வின் அசத்தல் வாக்குறுதிகள்

DMK Manifesto For Women: மக்களவை தேர்தலில் பெண்களுக்காக தி.மு.க. பல்வேறு வாக்குறுதிகளை வழங்குவதாக தெரிவித்துள்ளது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த மற்றும் பல்வேறு படிநிலைகளைச் சேர்ந்த மகளிருக்கு பல்வேறு வாக்குறுதிகளை தி.மு.க. அறிவித்துள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிர் நலன்:

1. சிறு, குறு தொழில்களில் பெண்களை ஊக்குவித்து அவர்களின் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில், தற்போது உள்ள 30% மூலதன மானியம் பெண்களுக்கு 35 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.

2. இந்திய அளவில் விவசாயத்தில் அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் பெண் விவசாயிகளுக்கு டிராக்டர்கள் மற்றும் பிற விவசாய இயந்திரங்களை இயக்குவதற்கான பயிற்சி, மண் ஆரோக்கியம் குறித்த பயிற்சி செயல் விளக்கம், விதை உற்பத்தி, விதை தொழில்நுட்பம் ஆகியவை குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

3. சமத்துவத்தை நோக்கிய பயணத்தில் இந்தியாவை முன்னேற்றிக் கொண்டு சென்றிட பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை கொடுப்பது அவசியமாகும். அதன் அடிப்படையில் இது சம்பந்தமான சட்டம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்திட மத்திய அரசை தி. மு. க. வலியுறுத்தும்.

4. மாவட்ட அளவில், பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் கொள்முதல் மற்றும் விற்பனை சந்தைகளை அமைத்து, தனிப்பட்ட அட்டைகள் வழங்கப்படும்.

Also Read: Power Pages-1: இந்தி எதிர்ப்பு முதல் இறுதிபயணம் வரை! தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்த அண்ணா!

5. பல்வேறு உலக நாடுகள் பெண் தொழிலாளர்களுக்குத் தேசிய சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் மூலம் மகப்பேறு காலத்தில் பொருளாதார உதவிகளை வழங்கி வருவது போல், தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த 1989 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்திய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம் இந்திய அளவில் நடைமுறைப்படுத்தப்படும். இத்திட்டத்தால் பாகுபாட்டைத் தவிர்த்து பாலின உரிமைகள் பணியிடங்களில் உறுதி செய்யப்படும்.

5. வீட்டுப்பணியாளர் நலன்களைக் காத்திடும் வகையில் ஒருங்கிணைந்த தேசியச் சட்டம் ஒன்று உருவாக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிமைகள் நிலைநாட்டப்படும்.

7. வீட்டுப்பணியாளர்கள் நியமனங்களை முறைப்படுத்துதல், அவர்களுடைய சமூகப் பாதுகாப்பு, அவர்களின் குறைகளைக் களைதல் முதலியவற்றுக்காக முத்தரப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்.

8. இந்திய அளவில் சுய உதவிக் குழுவில் உள்ள மகளிர்களுக்கு வட்டி இல்லா வாகனக் கடன் ரூ. 1 லட்சம் வரை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதிகளில் திமுக தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வரும் 19 தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் உள்ள திமுக, தேர்தல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் மகளிருக்காக அறிவித்துள்ள வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தி, திமுகவினர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Also Read: Power Pages 8: தோல்வியே காணாத கலைஞரின் அரசியல் பயணம்! எம்.ஜி.ஆர் ஆதரவு முதல் எதிர்ப்பு வரை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget