தயாநிதி மாறன் தான் காரணம்: முதன் முறையாக ரகசியம் உடைத்த உதயநிதி ஸ்டாலின்
தான் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட தயாநிதி மாறன்தான் காரணம் என திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் மனம் திறந்துள்ளார்.
ABP நாடு டிஜிட்டலுக்கு பிரத்யேக பேட்டியளித்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார். அதில் ஒன்று, தான் ஏன் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டேன் என்பது தான அது. தமிழகத்தின் 234 தொகுதிகளில் குறிப்பாக சேப்பாக்கத்தை உதயநிதி தேர்வு செய்ய முதன் முதலில் முன்மொழிந்தது அவரது உறவினரும் எம்.பி.,யுமான முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன்தான்.
‛தயாநிதி அண்ணன்தான் என்னை சேப்பாக்கத்தில் போட்டியிட செய்யுமாறு அப்பாவிடம் முதன்முதலில் கோரிக்கை வைத்தார்...’ என, தனது பேட்டியில் கூறிய உதயநிதி, ‛பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோர் போட்டியிட்ட தொகுதி என்பதாலும், மூத்த நிர்வாகிகள் டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோரும் சேப்பாக்கம் தொகுதியை தனக்கு பரிந்துரைத்தாக கூறிய உதயநிதி, சிறிய தொகுதி என்பதால் தானும் அதையே தேர்வு செய்ததாக தனது தொகுதி தேர்வு குறித்து மனம் திறந்துள்ளார்.