மேலும் அறிய

ADMK support TVK : தவெக ஆட்சிக்கு அதிமுக முழு ஆதரவு.! பாஜகவுடன் கூட்டணி இல்லை- சி.வி.சண்முகம் அதிரடி அறிவிப்பு

ADMK support TVK : விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு அதிமுக ஆதரவு என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். விரைவில் பொதுக்குழு கூட்டி அதிமுக தோல்வி குறித்து ஆலோசிக்கப்படும் என அறிவிப்பு

தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தவெக

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், 3வது இடத்திற்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில், இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியும் போட்டி போட்டு கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அதிமுக மீண்டும் உடையும் நிலை உருவானது. இந்தநிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார்கள்.

தவெகவிற்கு அதிமுக ஆதரவு

இதனையடுத்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர், முதலமைச்சர்  விஜய் தலைமையிலான ஆட்சிக்கு அதிமுகவின் பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறினார். அ.தி.மு.க கூட்டணியின் தோல்வியை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார். எனவே கட்சியை காப்பாற்ற வேண்டிய நிலையில் தற்போது இருக்கிறோம். இந்த தேர்தலில் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக வரவேண்டி மக்கள் வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில் தி.மு.கவின் உதவியோடு அ.தி.மு.க ஆட்சி அமைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எங்களிடம் தெரிவித்தார். இதில் தான் முதலமைச்சராவது தொடர்பான தகவலையும் கூறினார். தி.மு.கவை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க, இ.பி.எஸ் கூறிய முடிவை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானதாகவும் சி.வி.சண்முகம் கூறினார். எனவே தி.மு.கவுடன் இணையக்கூடாது என்றோம். அதை இ.பி.எஸ் ஏற்கவில்லை, இதனையடுத்து  பெரும்பான்மை அ.தி.மு.க எம்எல்ஏக்களை கூட்டி தீர்மானம் இயற்றினோம். அதில் தவெகவிற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க எந்த கூட்டணியிலும் இல்லையென கூறினார். 

பாஜகவுடன் கூட்டணி இல்லை

தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பது என பெரும்பான்மையான அதிமுக சட்டமன்ற குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நடந்து முடிந்த தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. எனவே தேர்தலுக்கான கூட்டணி முடிவடைந்துள்ளது. தற்போது அந்த கூட்டணி இனி இல்லையென கூறினார், இந்த நிலையில் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துணை தலைவராக சி.வி.சண்முகமும்,  கொறடாவாக விஜயபாஸ்கரும் நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
சட்டசபையில நாளைக்கு இருக்கு.! தைரியம் இருந்தால் CM விஜய் பதில் சொல்லட்டும்- சீறிய உதயநிதி
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
ஆன்லைன் மதுபான திட்டம்  இதுதான் விஜய் அரசின் புரட்சிகரமான திட்டமா? - ஆர்.பி.உதயகுமார் காட்டம் !
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
தவெக அரசின் முதல் பட்ஜெட் எதை இலக்காக கொண்டது? முதலமைச்சர் விஜய் பெருமிதம்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
Embed widget