மேலும் அறிய
Advertisement
முதல்வர் மு.க.ஸ்டாலின் ஷோகேஸில் நிற்கும் நடிகர் போல் செயல்படுகிறார் - முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத்
நாள்தோறும் ஷோகேஸ் இருப்பதுபோல் முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர் போல் காட்சி அளித்துக் கொண்டு உள்ளார் ஒன்பது மாத ஆட்சி காலத்தில் எந்த மக்கள் நலப் பணிகளும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டி பேசினார்
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இன்று நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு செய்திருப்பதாகவும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்ததை கண்டித்தும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தமிழக அரசைக் கண்டித்து கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எம்பி சம்பத் தலைமையில் ஏராளமான அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், திமுக அரசு வந்தவுடனே அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு அதிமுகவினர் பொய் புகார்களை கொடுத்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் 2011 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 10 ஆண்டு காலமாக அதிமுக ஆட்சி இருந்தது ஆனால் திமுக பிரமுகர் மீது ஒருவர் கோட் ஒருவர் மீது கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை அமைதியான முறையில் மக்களுக்கு சேவை செய்யும் வகையில் ஆட்சி அமைந்தது ஆனால் திமுகவினர் அரசியல் பழிவாங்கும் நோக்கோடு செயல்பட்டு வருகிறது. நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் தில்லு முல்லு செய்து வெற்றி அடைந்துள்ளனர் வாக்குப் பெட்டிகளை மாற்றி வெற்றி பெற்றுள்ளனர் அதிமுகவின் வெற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தலில் ஈவிஎம் மிஷினில் முறைகேடு நடந்துள்ளது இரட்டை இலைக்கு வாக்கு செலுத்தினால் இரட்டை இலை சின்னம் முந்தைய ஆட்சியில் காண்பிக்கப்பட்டது ஆனால் தற்போது உள்ள ஈ வி எம் மிஷினில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை கண் காண முடியவில்லை ஈ வி எம் மிஷினில் தவறு நடந்துள்ளது .உள்ளாட்சித் தேர்தலில் தில்லுமுல்லு செய்து திருட்டுத்தனம் செய்து திமுக அரசு வெற்றி பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண்துறை அமைச்சராக உள்ளார் ஆனால் வேளாண்துறையில் எந்தவித முன்னேற்ற அடைய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை இஸ்ரோ பயன்படுத்த கூடிய எந்த வளர்ச்சித் திட்டத்தை வேளாண்துறையில் தனி பட்ஜெட்டின் போது தாக்கல் செய்யவில்லை.நாள்தோறும் ஷோகேஸ் இருப்பதுபோல் முதலமைச்சர் ஸ்டாலின் நடிகர் போல் காட்சி அளித்துக் கொண்டு உள்ளார் ஒன்பது மாத ஆட்சி காலத்தில் எந்த மக்கள் நலப் பணிகளும் மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டி பேசினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
பொழுதுபோக்கு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion