மேலும் அறிய
பெட்ரோல் குண்டு வீச்சு; ஆண்டவனின் அருளால் எந்த ஒரு உயிர் சேதம் ஏற்படவில்லை - ஹெச். ராஜா
பெட்ரோல் குண்டு வீசப்பட்ட ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டிற்கு சென்று ஹெச்.ராஜா ஆறுதல்

ஹெச். ராஜா
தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், ராஜராஜேஸ்வரி தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (63). இவர் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது வீட்டில் கடந்த 24ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான ஹெச்.ராஜா சீதாராமன் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ தமிழ்நாட்டில பல்வேறு பி.எப்.ஐன்னுடைய அலுவலகங்கள், அது சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தியது. இது தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை 15 மாநிலங்களில் நடைபெற்றது. இது மூன்று மாதத்திற்கு மேல் தீர ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த சோதனையானது நடைபெற்றது.
தாம்பரம் அருகே ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசபட்ட சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.. pic.twitter.com/T9cTgrBJh3
— Kishore Subha Ravi (@Kishoreamutha) September 27, 2022
தமிழ்நாட்டில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இதுவரை 20 இடங்களுக்கு மேல் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி ஆகிய நிர்வாகிகளின் வீடுகள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆண்டவனின் அருளால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாதது ஒரு நிம்மதிக்குரிய விஷயம். ஆனால் அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள். இதில் சிட்லபாக்கத்தில் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவர் சீதாராமன் வீட்டில் நடைபெற்று இருக்கும் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

குற்றம் செய்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல குற்றத்தை செய்ய தூண்டுபவர்களும் குற்றவாளிகள் தான். அதுபோல இது போன்ற பயங்கரவாதிகளை தப்புவிப்பதற்காக தேச விரோத தீய சக்திகள் திருமாவளவன், சீமான் போன்றவர்கள் இந்த சம்பவங்களை பாஜக, இந்து அமைப்பினர் அவர்களே செய்திருப்பார்கள் என பேசுவது இதனை திசை திருப்பி இதில் சம்பந்தப்பட்டவர்களை தப்பி வைப்பதற்காக. எனவே நமது காவல்துறையை சேர்ந்த சைலேந்திரபாபு இந்த செயல்களில் ஈடுபட்டவர்கள் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள், வதந்தி பரப்பபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். எனவே அவர் சொன்னதை செய்ய வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த 18 பேரும் பி.எப்.ஐ, எஸ்.டி.பி.ஐ அமைப்புகளை சேர்ந்தவர்கள் தான், இந்து அமைப்புகள் மீது திசை திருப்பி உள்நோக்கம் கற்பித்து இந்த பயங்கரவாதிகளை தப்பு வைக்க நினைக்கும் சீமான், திருமாவளவன் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டில் பி.எப்.ஐயை தடை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
இந்தியா
க்ரைம்
ஆட்டோ
மதுரை
Advertisement
Advertisement