அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
![அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்! Chennai High Court Dismissed plea against aiadmk election coordinator edappadi palanisamy, joint coordinator o panneerselvam அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/14/cedb5282dbc66c648a73584640057060_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த 1ம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் சட்டவிதிகளில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பதிலாக, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என திருத்தம் செய்யப்பட்டது. அதேபோல், இருவரையும் அடிப்படை உறுப்பினர்களால் ஒற்றை வாக்கின் மூலம் இணைந்தே தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடந்த 3 மற்றும் 4 ம் தேதி ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் உள்ளது. ஒபிஎஸ் – ஈபிஎஸ் இருவரும் நாளை தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இவர்களை எதிர்த்து, கட்சியில் தொடர்ந்து 5 ஆண்டுகள் எந்த இடை நீக்கமும் செய்யப்படாமல் தொடரும் உறுப்பினர்கள் யாரேனும் இருவர், ஒரே மனுவாக தாக்கல் செய்து, அது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், கடந்த 7ஆம் தேதி அடிப்படை உறுப்பினர்கள் வாக்கு செலுத்தும் நடைமுறை இருக்கும் என்றும் சொல்லப்பட்டது.
இவர்களை எதிர்த்து யாரேனும் போட்டியிடவேண்டும் என்றால், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர், அதேபோல் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஒருவர் என இருவர் சேர்ந்து ஒரே மனுவாக தாக்கல் செய்யவேண்டும் என்றும், கடந்த காலங்களில் பொதுச்செயலாளர் எப்படி ஒற்றை வாக்கின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதேபோல, ஒரே வாக்கு அடிப்படையில் தற்போது உள்ள ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அங்கு சென்று வேட்பு மனு கேட்டவரை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கி அலுவலகத்தைவிட்டு வெளியே தள்ளினர். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியும் மட்டுமே மனு தாக்கல் செய்தனர்.
இதையடுத்து, ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலுக்கு தடைவிதிக்க கோரி அதிமுகவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையம் தலையிட உத்தரவிட முடியாது என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Priyank Panchal Profile: ரோகித்துக்கு பதில் பஞ்சால்.. யார் இந்த பிரியங்க் பஞ்சால்..?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)