"ஆரத்தி எடுக்க பணம்" - நத்தம் விஸ்வநாதன் மீது வழக்கு பதிவு.!

அந்த பகுதியில் கூடியிருந்த பெண்கள், வேட்பாளர் விஸ்வநாதனுக்கு ஆரத்தி எடுத்தனர்

ஆரத்தி எடுத்த வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் தற்போது முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் 5வது முறையாக போட்டியிடுகிறார். இவர் கடந்த 15ம் தேதி  நத்தம் தொகுதிக்கு உட்பட்ட காட்டு வேளாண்பட்டி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது அந்த பகுதியில் கூடியிருந்த பெண்கள், வேட்பாளர் விஸ்வநாதனுக்கு ஆரத்தி எடுத்தனர். அப்போது விஸ்வநாதனுடன் வந்த அதிமுக நிர்வாகி ஒருவர், ஆரத்தி தட்டில் பணம் போட்டது, வேட்பாளர் விஸ்வநாதன் தனது சட்டைப் பையில் இருந்து பணம்  எடுத்து கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.  தேர்தல் பிரிவு வீடியோ கண்காணிப்பு குழு தலைவர் மைக்கில் ஆரோக்கியதாஸ் அது தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், நத்தம் காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். 

அதைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் மீது வாக்காளர்களுக்கு வாக்களிக்க லஞ்சம் கொடுத்ததாக 171E பிரிவின் கீழ் நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக இந்த தேர்தலில் வேட்பாளர் மீது பதியப்படும் முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: aiadmk Natham Viswanathan Kaatuvelanpatti

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

petrol and diesel price hike: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு எப்போது? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பதில்

petrol and diesel price hike: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு எப்போது? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பதில்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : டெல்லியில் 213 நபர்களுக்கு இன்று கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : டெல்லியில் 213 நபர்களுக்கு இன்று கொரோனா

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?