அதிமுக தலைமை பொறுப்பிற்கு தொண்டரை, இபிஎஸ் தேர்வு செய்ய முடியுமா? தயாரா? - புகழேந்தி கேள்வி
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது குறித்து இரண்டாம் பாகம் வெளியே வரும் எனவும் கூறினார்.
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் அதிமுகவின் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தலைமையில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளுடன், அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் புகழேந்தி ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதை தொடர்ந்து பெங்களூர் புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியது, சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் ஓபிஎஸ் அணி சார்பில் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் நிர்வாகிகளை அறிவிக்க உள்ளார். மிக விரைவில் சேலம் மாநகர் குலுங்க, மக்கள் வெள்ளத்தில் ஓபிஎஸ் வருகை தர உள்ளார். எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் பற்றி மிகமோசமாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். இப்பொழுது ஓபிஎஸ் விட்டுவிட்டு என்னைப்பற்றி பேச ஆரம்பித்துவிட்டார். எடப்பாடி பழனிசாமி நிலைத்தடுமாறி மோசமாக பேச ஆரம்பித்துவிட்டார். இவர் இன்னும் தோல்வியே சந்திக்காது போன்றும், மற்றவர்கள் மட்டும் தோல்வி சந்தித்த மாதிரியும் பேசி வருகிறார்.
இதற்கு முன்பாக சேலம் எடப்பாடி தொகுதியில் உள்ள நெடுங்குளம் 1987வது ஆண்டு டெபாசிட் கூட பெறாமல் தோல்வி சந்தித்துள்ளார். 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மதிமுகவிடம் எடப்பாடி பழனிசாமி தோற்றார். எடப்பாடி என்று வெளியே கூற வேண்டாம், எடப்பாடி மக்களுக்கு தனி மரியாதை உள்ளது. அந்த நகராட்சி திமுக வசம் சென்றுவிட்டது. சேலம் மாநகராட்சி தேர்தலில் 92 சதவீதம் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எங்குமே வெற்றி பெறமுடியவில்லை. தேனியில் மட்டுமே ஓபிஎஸ்-ன் மகன் வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமி பல்வேறு தோல்விகளை சந்தித்ததை ஆதாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளேன் என்றார். ஆனால் ஓபிஎஸ் தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார் என்று பட்டியலிட்டார். அதிமுக தொண்டரை சேலத்தில் தேர்வு செய்து, அதிமுக கட்சியின் தலைமை பொறுப்பிற்கு தேர்வு செய்ய முடியுமா? தயாரா? என்று கேள்வி எழுப்பினர். எந்த தொண்டருக்கும், எடப்பாடி பழனிசாமி எதையும் விட்டுக் கொடுத்ததே இல்லை. அரசியலில் நச்சுப்பாம்பு எடப்பாடி பழனிசாமி என்று குற்றசாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி மாமியார் வீடு சேலம் மத்திய சிறையிலும் திகார் சிறையிலும் உள்ளது. ஜெயலலிதாவிற்காக எடப்பாடி பழனிசாமி ஏதாவது ஒன்றாவது செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி கொள்ளையடித்து தவிர வேறு எதுவும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரியாக செயல்பட்டு கொண்டு என்னை பற்றி பேசி வருகிறார். ஓ.பன்னீர்செல்வத்திடம் பணம் பெற்றுக்கொண்டு வந்து செயல்படுபவன் நான் அல்ல, அதிமுகவை காப்பாற்றியதற்காக தான் ஓபிஎஸ் உடன் நிற்கிறோம் என்றும் கர்நாடகாவில் தமிழே என்னால்தான் உள்ளது எனவும் புகழேந்தி பேசினார்.
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது குறித்து இரண்டாம் பாகம் வெளியே வரும் எனவும் கூறினர். எடப்பாடி பழனிசாமி பொது எதிரியாக கருதி, அரசியல் ரீதியாக எதிரியாக கருதக்கூடிய அனைவரும் தீயசக்தி என்று அழைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக டெல்லிக்கு தான் எடப்பாடி பழனிசாமியும், வேலுமணியும் சென்றனர் எனவும் தெரிவித்தார்.