‛இந்து சாதுக்களுக்கு எதிராக பேசினால்...’ எச்.ராஜா எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்பேன் என்று பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் சொல்வாரா? நான் என் வார்த்தையை வாபஸ் வாங்கி கொள்கிறேன். இந்து சாது, சன்னாசிக்களை பற்றி யார் இழிவாக பேசினாலும், உங்கள் பின்னணி நோண்டப்படும். உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும், என எச்.ராஜா கடுமையாக எச்சரித்துள்ளார்.

இந்து சன்னாசிகளை பற்றி பேசினால் உங்கள் பின்னணி நோண்டப்படும் என நிதி அமைச்சர்  பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜனின் கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பதில் கருத்து தெரிவித்துள்ளார்.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,‛இந்து சாதுக்களுக்கு எதிராக பேசினால்...’ எச்.ராஜா எச்சரிக்கை

‛‛அறநிலையத்துறை அமைச்சர் கூட்டத்தில் போட்ட தீர்மானத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் ரிஜிஸ்டர் இல்லாததால், தங்க நகைகள் அனைத்தையும் மறைத்து டிஜிட்டலைஸ்டு பண்ணி கொள்ளையடிக்க முயற்சி நடக்குமோ? என்ற அச்சம் உள்ளது.  எனவே தீர்மானத்தை செயல்படுத்தும் முறை சரியாக இருக்க வேண்டும். இந்து கோயிலை பகிரங்கமாக கொள்ளையடிக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை இல்லை. 

தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்து அறநிலையத்துறை கோயில்களுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலம், 22 ஆயிரம் வணிக வளாகங்கள், 33 ஆயிரம் மனைக்கட்டுகள் சொத்தாக உள்ளன. சென்னை மலர் மருத்துவமனைக்கு எதிரே அருணாசலபுரத்தில் கோயிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்கள். இதை கேட்டால், ஜக்கிவாசுதேவை பி.டி.ஆர்.தியாகராஜன் மிரட்டுகிறார். யார் இந்த பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்? அவர்  குடும்பம் என்ன, மிரட்ட நீங்கள் யார் ? காருண்யா கல்லூரி எத்தனை வனப்பகுதியை மறித்துள்ளனர். அதை பற்றி பேச முதுகெலும்பு உள்ள அமைச்சர்கள் உண்டா? நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை ஜெயிலர் ஜெயப்பிரகாஷை கொன்ற ஒருவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.‛இந்து சாதுக்களுக்கு எதிராக பேசினால்...’ எச்.ராஜா எச்சரிக்கை

இந்துக்களுக்கு எதிராக யார் வேண்டுமானாலும் பேசலாமா? மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்பேன் என்று பி.டி.ஆர்.தியாகராஜன் சொல்வாரா? நான் என் வார்த்தையை வாபஸ் வாங்கி கொள்கிறேன். இந்து சாது, சன்னாசிக்களை பற்றி யார் இழிவாக பேசினாலும், உங்கள் பின்னணி நோண்டப்படும். உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். 
பி.டி.ஆர்.தியாகராஜன் போன்ற ஒரு ஆழ்ந்த அறிவு, ஞானம் இல்லாத நபர் எங்கள் மத பிரச்சனையில் தலையிடாதீர்கள். பொட்டு வைத்து, கோயிலுக்கு போகிறவர்கள் எல்லாம் இந்துவா? இல்லை. மத விசுவாசம் வேண்டும். நம்பிக்கை வேண்டும். கமிட்மெண்ட் வேண்டும், என்றார்.

முன்னதா ஈஷா யோகா மையம் தொடர்பாகவும், அதன் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் அது தொடர்பான கருத்துக்களிலிருந்து நேற்று பின்வங்கினார் . ‛இனி ஜக்கி வாசுதேவ் பற்றி பேசப்போவதில்லை,’ என்கிற வரிகளுடன் வந்த அந்த அறிக்கை மூலம் அதை உணர முடிந்தது. இந்நிலையில் தான் எச்.ராஜா பி.டி.ஆர்., பழனிவேல் ராஜனின் முந்தைய கருத்திற்கு காரசாரமாக செய்தியாளர்கள் சந்திப்பில் எதிர்கருத்து தெரிவித்துள்ளார். 

Tags: H Raja sadhguru isha ptr ptr pazhanivel thiyagarajan hraja Bjp HRaja Hraja press meet

தொடர்புடைய செய்திகள்

11-ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வா? மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

11-ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வா? மருத்துவர் ராமதாஸ் கண்டனம்

நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளை வாங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலங்களுக்கு சுற்றறிக்கை

நூலகங்களில் திமுக ஆதரவு நாளேடுகளை வாங்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலங்களுக்கு சுற்றறிக்கை

Narthagi Nataraj | யார் இந்த நர்த்தகி நடராஜ் : முதல்வர் ஸ்டாலின் இவரைத் தேர்வுசெய்த காரணம் என்ன?

Narthagi Nataraj | யார் இந்த நர்த்தகி நடராஜ் : முதல்வர் ஸ்டாலின் இவரைத் தேர்வுசெய்த காரணம் என்ன?

தோல்வி ஒருபுறம்... விலகல் மறுபுறம்... ஆனாலும் மக்கள் பணியாற்றும் மநீம!

தோல்வி ஒருபுறம்... விலகல் மறுபுறம்... ஆனாலும் மக்கள் பணியாற்றும் மநீம!

திமுகவில் இணைகிறாரா மகேந்திரன்? பரவிய செய்திக்கு பதிலளித்த மகேந்திரன்!

திமுகவில் இணைகிறாரா மகேந்திரன்? பரவிய செய்திக்கு பதிலளித்த மகேந்திரன்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை - ப.சிதம்பரம்

Tamil Nadu Coronavirus LIVE News :  தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை - ப.சிதம்பரம்

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்