Rahul Dravid: ‛பாஜக யுவ மோர்ச்சாவில் ராகுல் டிராவிட் பங்கேற்கப் போவதில்லை’ -பி.சி.சி.ஐ.,
Rahul Dravid- Yuva Morcha meet: பா.ஜ.க. சார்பில் நடக்கும் யுவ மோர்ச்சா கூட்டத்தில் ராகுல் டிராவிட் பங்கேற்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என பிசிசிஐ ஊடக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பா.ஜ.க. சார்பில் நடக்கும் யுவ மோர்ச்சா கூட்டத்தில் பங்கேற்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என பி.சி.சி.ஐ.-இன் ஊடக மேலாளர் மெளலின் பரிஷ்க் (Moulin Parikh) தெரிவித்துள்ளார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட் (Rahul Dravid) பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடக்கும் யுவ மோர்ச்சாவின்(Yuva Morcha) நேசனல் வொர்க்கிங் கமிட்டி (National Working Committee)-யின் விழாவில் பங்கேற்க உள்ளார் என பா.ஜ.க.வின் ஹிமாச்சல பிரதேச எம்.எல்.ஏ. விஷால் நஹிரீயா ( Naheria) கூறியுள்ளதாக செய்தி வெளியானது.
இந்நிலையில், இச்செய்திதியை இந்திய கிரிக்கெட் வாரியம் (The Board of Control for Cricket (BCCI)மறுத்துள்ளது. இது குறித்து .சி.சி.ஐ.-இன் ஊடக மேலாளர் மெளலின் பரிஷ்க் (Moulin Parikh) ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு (Hindustan Times) அளித்துள்ள பதிலில், ராகுல் டிராவிட் பா.ஜ.க.-வின் யுவ மோர்ச்சா நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று வெளியான தகவல் உண்மையில்லை என்று கூறியுள்ளார். மேலும், ராகுல் டிராவிட் மெளலின் பரிஷ்க்கை தொடர்பு கொண்டு இது குறித்து வெளியான தகவல் உண்மையில்லை ("story is false".) என்று கூறியாதாக குறிப்பிட்டுள்ளார்.
'Wall Is Breached': Netizens React To #RahulDravid Attending #BJP Event In #Dharamshalahttps://t.co/jzg2XTGq5t
— ABP LIVE (@abplive) May 10, 2022
ராகுல் டிராவிட் இந்த நிகழ்வில் பங்கேற்பது தற்போது விவாத பொருளாகியுள்ளது. ஏனெனில் வரும் நவம்பர் மாதம் ஹிமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடிக்க இது போன்ற ஏற்பாடுகளை செய்வதாக கூறப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க 44 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஹிமாச்சல பிரதேசத்தில் மொத்த 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சியில் பிரதான கட்சிகளாக இருக்கிறது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி நடந்து முடிந்த பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றதையெடுத்து, ஹிமாச்சல் பிரதேசத்திலும் தங்கள் வெற்றிக் கணக்கை தொடர முயற்சி செய்து வருகிறது. அது போலவே, பா.ஜ.க.வும் ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ராகுல் டிராவிட் பாரதிய ஜனதா கட்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ரசிர்கர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சனம் எழுந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்