அதானி.. மக்கள் நிலம்.. விவாத மேடையான பா.ஜ.க. அண்ணாமலையின் ட்வீட்.. விவரம்!
விமானப்போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
![அதானி.. மக்கள் நிலம்.. விவாத மேடையான பா.ஜ.க. அண்ணாமலையின் ட்வீட்.. விவரம்! Aviation minister Scindia and virudhunagar MP manickam tagore tweets argument in BJP TN chief Annamalai's tweet அதானி.. மக்கள் நிலம்.. விவாத மேடையான பா.ஜ.க. அண்ணாமலையின் ட்வீட்.. விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/27/59142c8989d581106b6381bf9c3fa5e0_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டின் விமானநிலையங்களின் விரிவாக்கப் பணிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஒத்துழைக்க வேண்டும் என்கிற அடிப்படையில் மத்திய விமானப்போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
இந்தக் கடிதத்தில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவரான அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் தற்போது இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சண்டைக்கான ஸ்டேடியமாக மாறிவிட்டிருக்கிறது.
Shri @JM_Scindia, Hon Min for Civil Aviation, GoI has written a letter to TN CM Shri @mkstalin avargal on the following issues & for a faster resolution.
— K.Annamalai (@annamalai_k) August 29, 2021
All of these will help in expediting and strengthening the aviation infrastructure for our country & state. pic.twitter.com/9YRegpVJHg
ட்விட்டரில் அண்ணாமலை ட்வீட் செய்ததற்குக் கீழ் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ஜோதிராதித்ய சிந்தியா கடிதம் எழுதியிருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கா அல்லது தேசியப் பணமாக்கல் திட்டத்தின் கீழ் அதானியின் வளர்ச்சிக்கா எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
Will Hon’ble Minister assure that the land which he had listed will not be handover to Adani in #NationalMonetisationPipeline , it’s development for Tamilnadu or for Adani ?
— Manickam Tagore .B🇮🇳✋மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 29, 2021
அதற்கு பதிலளித்த ஜோதிராதித்ய சிந்தியா எப்போதுமே அழிவு நோக்கத்தோடும் அவநம்பிக்கையான மனநிலையும் கொண்டிருப்பவர்களுக்கு என்ன பதில் அளித்தாலும் போதாது எனக் கூறியுள்ளார். அதற்கு மறுபதில் அளித்த மாணிக்கம் தாகூர் என் மக்களின் நிலம் அபகரிக்கப்படக்கூடாது என்கிற எண்ணத்துடன் கேள்வி எழுப்புவதுதான் உங்களுக்கு தீய நோக்கமாகத் தெரிந்தால் நான் தீய நோக்கத்துடனே இருந்துவிட்டுப் போகிறேன் எனக் காரசாரமாக பதிலளித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)