மேலும் அறிய

Trisha | ”எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா !” - விரைவில் டும் டும் டும்! திருமணத்திற்கு தயாராகும் திரிஷா?

"நான் எனக்கானவரை சந்திக்கும் வரையில்  வாழ்நாள் முழுக்க சிங்கிளாக இருப்பேன் “என கூறியிருந்தார் திரிஷா

கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படம் மூலமாக கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தவர் நடிகை திரிஷா. முதல் படத்திலேயே கியூட்டான நடிப்பை வெளிப்படுத்திய திரிஷாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. 90’ஸ் கிட்ஸின் விருப்பமான நடிகைகள் பட்டியலில் நிச்சயம் திரிஷாவிற்கு இடமுண்டு. திரிஷா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம், கன்னடம் போன்ற திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 4 மொழி சினிமாவிலும் முக்கிய மற்றும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட நடிகை திரிஷா சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார். இது தவிர மணிரத்தினம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர ‘ராங்கி’, ’கர்ஜனை’, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.  பொன்னியின் செல்வன் தவிர மற்ற படங்களில் தனக்கான ஷெடியூளை முடித்து கொடுத்துள்ளார் நடிகை திரிஷா. இந்நிலையில் திரிஷா புது படங்கள் எதிலும் கமிட்டாகாமல் இருக்கிறாராம். இதற்கான காரணமாக திருமணத்தை கூறுகின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள். ஆம் திரிஷா தற்போது திருமணத்திற்கு தயாராகி வருகிறாராம்.மாப்பிள்ளை மற்றும் அவரின் திருமண திட்டம் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)


கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக கதாநாயகியாக நடித்து வரும் திரிஷாவின் ரசிகர்களுக்கு இருக்கும் திரிஷா என்றோ திருமணத்திற்கு தயாராகிவிட்டார். கடந்த 2015 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் வருண் மணியன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, திருமணம் இடையிலேயே நின்று போனது. அதன் பிறகு தீவிரமாக சினிமாவில் நடித்து வந்தார் திரிஷா. கடந்த ஆண்டு நடிகர் சிம்புவுடன் கிசு கிசுக்கப்பட்டார் திரிஷா. ஆனால் நாங்கள் இருவரும் நண்பர்கள்தான் , எங்களுக்கிடையில் காதல் இல்லை என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர் இருதரப்பும். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)


மேலும் நேர்காணல் ஒன்றில் பேசிய திரிஷா, “ என்னை முழுமையாக புரிந்துக்கொண்ட நபரைதான் நான் திருமணம் செய்துக்கொள்வேன்,  நிச்சயம் அது ஒரு காதல் திருமணமாகத்தான் இருக்கும். அப்படி ஒருவரை நான் சந்திக்கும் பொழுதுதான் என் திருமணம் நடக்கும் , எனக்கு சிங்கிளாக இருக்க பிடித்திருக்கிறது. நான் எனக்கானவரை சந்திக்கும் வரையில்  வாழ்நாள் முழுக்க சிங்கிளாக இருப்பேன் “என கூறியிருந்தார். இந்நிலையில் திரிஷா தனக்கான நபரை கண்டுபிடித்துவிட்டாரா , அவர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
Actress Kasthuri: சகோதரரிடம் பேசுவதை கூட வக்கிரமாகச் சித்தரிப்பதா? - நெட்டிசன்களுக்கு கஸ்தூரி கடும் கண்டனம்!
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
காவல் அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு...காயங்களை காட்டி ஆமிர் கான் உறவினர் வெளியிட்ட வீடியோ வைரல்
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!
கற்பனை, ஹாரர், நகைச்சுவை கலந்த ‘டிரோன்ஸ்’ – அக்டோபர் 16-ம் தேதி வெளியீடு!

வீடியோ

Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
‘பத்தா’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு! விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பதிவு!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
13 வருடங்களில் ஒருமுறை கூட இதை செய்யாத பிரதமர் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சரமாரி தாக்குதல்!
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
CNG Vehicles: சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
சென்னையில் கிடுகிடுவென உயரும் சிஎன்ஜி வாகனங்கள்..! REFILL நிலையங்கள் பற்றாக்குறை - தீர்வு?
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Embed widget