மேலும் அறிய
Advertisement
பாமக கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்: சிகிச்சை செலவை ஏற்றார் அன்புமணி!
நேற்று சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் செங்கல்பட்டை சேர்ந்த பாமக மகளிரணி செயலாளர் சாந்தியின் மருத்துவ செலவை அன்புமணி ராமதாஸ் ஏற்றார்.
2021-க்கு விடை கொடுப்போம் 2022 யைவரவேற்போம் என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்புப் பொதுக்குழு நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாமகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் போது ஒரு பெண்மணிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது உடனடியாக ஓடிவந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ், மயங்கி விழுந்த பெண்மணிக்கு முதலுதவி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டார். பின்னர் இந்த பெண்மணிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார். அதனை தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண்மணி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் பகுதியை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சாந்தி ஆவர். இதனைத் தொடர்ந்து சாந்தி வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வடபழனி மருத்துவமனையில் அவருக்கு முதல் உதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மயங்கி விழுந்த அளவுக்கு உடலில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த செங்கல்பட்டை சேர்ந்த மகளிர் அணி செயலாளர பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளர் திலகபாமா நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சாந்தி அனுமதிக்கப்பட்டார். தாம் முதலுதவி அளித்த மகளிரணி பெண் நிர்வாகி மேல் சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் பெண்மணிக்கு ஆறுதல் கூறியது மட்டுமில்லாமல், சிகிச்சை செலவுகளை முழுமையாக ஏற்பதாகவும் உறுதியளித்தார். பாதிக்கப்பட்ட பெண்மணியிடம் தொடர்பு கொண்டு பேசிய அன்புமணி ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என தெரிவித்தார். கட்சி நிர்வாகியின் மருத்துவ செலவை அன்புமணி ராமதாஸ் ஏற்றது செங்கல்பட்டு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion